பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை வழங்க வேண்டும்: நியூ ஜெர்சி காங்கிரஸ் உறுப்பினர் ஃப்ராங்க் பலோன
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை வழங்க வேண்டும்: நியூ ஜெர்சி காங்கிரஸ் உறுப்பினர் ஃப்ராங்க் பலோன அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 29 September 2006
sized_frank-palloneஇலங்கையில் தமிழர்களுக்கான சுயாட்சி உரிமை வழங்க வேண்டும் என்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி காங்கிரஸ் உறுப்பினர் ஃப்ராங்க் பலோன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் ஆற்றிய உரை:
இலங்கையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான 2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தமும் அமைதி முயற்சிகளும் சீர்குலைந்து முழு அளவிலான போரின் விளிம்பில் உள்ளது.

தொடரும் வன்முறைகளால் ஆயிரக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய மாதங்களில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இரண்டு இலட்சத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வடக்கு கிழக்கு பிரதேசத்துக்கான அத்தியாவசியப் பொருட்கள் எடுத்துச் செல்வது முடக்கப்பட்டுள்ளது. இருதரப்பினரும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றனர்.

போர் நடவடிக்கைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு அமைதி முயற்சிகள் மீள மேற்கொள்ளப்பட வேண்டும். ஒக்டோபரில் ஒஸ்லோவில் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று இணைத் தலைமை நாடுகள் அறிவித்துள்ளமையை நாம் முழுமையாக ஆதரிக்கிறோம்.

பொதுமக்கள், நிவாரணப் பணியாளர்கள் மற்றும் கண்காணிப்புக் குழுவினரது பாதுகாப்பை இருதரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு பெரும்பான்மையான அந்நாட்டு மக்கள் ஜனநாயக வழித் தீர்வையே நம்புகின்றனர் என்று கருதுகிறோம். அரசியல் சவால்கள் அனைத்தும் போரின் மூலம் தீர்க்கப்பட முடியாது.

"தமிழீழ விடுதலைப் புலிகள் கையாளும் முறையை நாம் நிராகரிக்கிற போதும் தமிழ் மக்களின் சட்டப்பூர்வமான முறைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழ் மக்கள் தங்களது சொந்தத் தாயகத்தில் தங்களை நிர்வகித்துக் கொள்ள வேண்டும்" என்று கடந்த யூன் மாதம் அமெரிக்க பிரதி ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்திருந்தார்.

அதனை நாம் ஆதரிக்கிறோம். ஐக்கிய இலங்கை கட்டமைப்புக்குள் பாரிய சுயாட்சி அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். உலகம் முழுமைக்குமான இதே போன்ற பிரச்சனைகளில் இத்தகைய தீர்வு காணப்பட்டுள்ளது. கனடாவின் கியூபெக், இங்கிலாந்தின் வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவற்றில் கூட்டாட்சி முறை இருப்பினும் குறிப்பிடத்தக்க சுயாட்சி அதிகாரம் உள்ளது.

இலங்கையிலிருந்து சர்வதேச பார்வையாளர்கள் வெளியேறிவிட்டனர். இலங்கையின் அனைத்து மக்களினது பாதுகாப்பை இருதரப்பினரும் உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..