|
இலங்கை சமரச முயற்சிகள் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் நம்பிக்கை |
|
|
|
Friday, 29 September 2006 |
 தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து முன்னேற்றம் இருக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் சி.முல்போர்ட் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வியாழக்கிழமை காலை தமிழக முதல்வர் மு.கருணாநிதியை சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
சுமார் அரைமணித்தியாலம் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய முல்போர்ட் இந்த சந்திப்பின் போது
தமிழ்நாட்டில் வர்த்தகம் மற்றும் தொழில் துவங்குபவர்களை ஊக்குவிக்கும்
விதமாக தமிழக அரசு செயல்பட்டுவருவதாகவும் இதற்காக தமிழக முதல்வர் மு
கருணாநிதியை தாம் பாராட்டியதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்தியாவுக்கு கோதுமை இறக்குமதி செய்வதற்கான சாத்தியம் பற்றியும்இ
இலங்கை விவகாரம் குறித்தும்இ இலங்கை தமிழர்கள் அகதிகளாக இடம்பெயர்வது
குறித்தும் தாம் கருணாநிதியிடம் பேசியதாகவும் அவர் தெரிவித்தார்.
|