துரத்தித் துரத்தித் துன்புறுத்தினால் பூனைகூடப் புலியாக மாறும் !
தியாகு
(பொதுச் செயலாளர்-தமிழ், தமிழர் இயக்கம்)
உலகில் விடுதலை அமைப்புக்களைப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கும் முயற்சி ஒன்றும் புதியது அல்ல. அமெரிக்காவுக்கு பிடல் காஸ்ட்ரோ பயங்கரவாதி. இஸ்ரேலுக்கு யாசிர் அரபாத் பயங்கரவாதி. தென்னாபிரிக்க வெள்ளை நிறவெறிக்கு நெல்சன் மண்டேலா பயங்கரவாதி. அதன் தொடர்ச்சியாக, சிங்களத்துக்கும் சிங்களத்தைத் தூக்கிப் பிடிக்கும் இந்தியப் பார்ப்பனீயத்துக்கும் பிரபாகரன் பயங்கரவாதி. திருடிவிட்டு ஓடுகிறவன் துரத்துகிறவர்களோடு சேர்ந்து ஷதிருடன் ! திருடன்! என்று கூச்சலிட்டு அனைவரையும் ஏமாற்றுவது ஒரு பழைய தந்திரம். அதைப் போலத்தான் பயங்கரவாத நாடுகள் தங்கள் முகத்தை மறைப்பதற்காகப் பயங்கரவாதக் கூச்சல் போடுகின்றன.
ஈழத்தில் ஆயுதப் போராட்டம் என்பது தமிழர்கள் ஆசைப்பட்டுத்
தேர்ந்தெடுத்த பாதையன்று.
அது அவர்கள் மீது சுமத்தப்பட்ட ஒன்று
என்பதற்குச் சான்றாகத் தந்தை செல்வா காலத்தில் இருந்து தலைவர் பிரபாகரன்
காலம் வரையிலான நிகழ்வுகளைப் பட்டியலிட்டாலே போதும். துரத்தித் துரத்தித்
துன்புறுத்தினால் ப+னைகூடப் புலியாக மாறும். ஈழத்தில் அதுதான் நடந்தது.
பதுங்கித் தாக்கிய புலிகள் கெரில்லாப்படை என்ற நிலையில் இருந்து ஒரு தேசிய
இராணுவமாக உருப்பெற்றிருக்கிறார்கள். புலிகள் வெறும் பயங்கரவாதிகள்
என்றால் இது எப்படிச் சாத்தியமானது? கரும் புலிகளின் தற்கொடைப் போர் முறை
என்பதையும் ஒரு சிறிய தேசிய இனம் சிறு இழப்புகளோடு பெரும் வெற்றிகளை
ஈட்டுவதற்கான உத்தி என்றே புரிந்து கொள்ள வேண்டும். இதுவும் இலக்கற்ற
தற்கொலைத் தாக்குதல் முறையும் ஒன்றல்ல. பின்னையதற்குப் பீதிய+ட்டுவது தவிர
வேறு குறிக்கோள் ஒன்றுமில்லை.
2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற
இரண்டு நிகழ்ச்சிகளை இங்கு ஒப்பு நோக்கலாம். அந்த அண்டு ய+லை 23 ஆம் நாள்
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் மீது புலிகளின் தாக்குதல் நடைபெற்றது.
அப்பாவிப் பொது மக்கள் யாருக்கும் எவ்விதத் தீங்கும் ஏற்படக்கூடாது என்ற
கவனத்துடன் புலிகள் அந்தத் தாக்குதலை நடத்தி முடித்தார்கள். மேலும் அந்தத்
தாக்குதலுக்குத் தெளிவான போரியல் நோக்கம் இருந்தது. தமிழ்ப் பகுதிகள் மீது
குண்டு மழை பொழிந்து பேரழிவை உண்டாக்கும் வானூர்திகளை அழிக்க வேண்டும்
என்பதே நோக்கம். ஆனால் அதே ஆண்டு செப்டெம்பர் 11ஆம் நாள் அமெரிக்காவின்
இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான மனிதஉயிர்கள்
அப்பாவிகள் அழிவது பற்றிக் கவலை இல்லை. இயன்றவரை அதிகமானவர்களைச்
சாகடிப்பதே குறி.
செப்டம்பர் 11 தாக்குதல் நடந்த நேரத்தில்
பாலத்தீன ஷஹமாஸ்| இயக்கத் தலைவர் N~க் அகமது யாசின் சொன்னது
குறிப்பிடத்தக்கது. ஷஎமது இயக்கம் ஸ்ரேலிய இலக்குகளை எதிர்த்துத்
தற்கொலைத் தாக்குதல் நடத்துவது நியாயமானது. ஏனென்றால் நாங்கள்
காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மறுபுறம்
அமெரிக்காவில் தாக்குதல் நடத்தியவர்கள் எந்தக் குறிக்கோளுக்காகவும்
அப்படிச் செய்யவில்லை| என்று குறிப்பிட்டார். இவற்றில் இருந்தே விடுதலைப்
போராட்டத்துக்கும், பயங்கரவாதத்துக்குமான வேறுபாட்டை உணரலாம்.
அரச பயங்கரவாதத்தைச் சந்திக்க மக்கள் வேறு வழியின்றி ஆயுதங்களைக் கையில் எடுக்கிறார்கள்!|
விடுதலை இராசேந்திரன் (பொதுச்செயலாளர் - பெரியார் திராவிடர் கழகம்)
அரசுகள் மக்களின் நியாயமான உரிமைகளை மறுக்கும் போதும், இனங்களின் உரிமைகளை
அங்கீகரிக்காமல் ஒடுக்கும் போதும் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்
வெடிக்கின்றன. அமைதி வழியில் போராடும் மக்களை அரசு தனது ஆயுத பலத்தால்
அடக்க முயல்கிறது. அடக்குமுறைகள் எல்லை மீறும்போது அது அரசு
பயங்கரவாதமாக உருவெடுக்கிறது.
இனியும் ஒடுக்குமுறையின் கீழ் வாழ முடியாது
என்று மக்களை உறுதியான நிலைக்கு இட்டுச் செல்வதே இந்த அரசு
பயங்கரவாதம்தான். அரச பயங்கரவாதத்தை சந்திக்க, வேறு வழியின்றி, மக்கள்
ஆயுதங்களைக் கையில் எடுக்கிறார்கள். இது அரச பயங்காரவாதம் என்ற வினைக்கு
எதிராக மக்களும் இயக்கங்களும் நிகழ்த்தும் எதிர்வினை. ஆனால் இந்தத்
தற்காப்பு நடவடிக்கைகளுக்கு ஒடுக்கும் அரசுகள் சூட்டுகிற பெயர்
ஷபயங்கரவாதம்ஷ. ஆனாலும் ஆதிக்கவாதிகளின் பிடியில் சுழன்று கொண்டிருக்கும்
உலக ஒழுங்கு பயங்கரவாதத்துக்கான தெளிவான வரையறைகள் எதையுமே
நிர்ணயிக்கவில்லை. அவர்கள் நலனுக்கு ஏற்ப அது உருமாற்றம் பெறுகிறது.
இன்றைய உலகு ஒழுங்கமைப்பில் அரச பயங்கரவாதத்தின் முகங்களில் புதிய
மாற்றங்கள் வந்துவிட்டன. சீட்டு விளையாட்டில் அனைத்து சீட்டுகளையும்
தன்னிடமே வைத்துக்கொண்டு விளையாட்டுகளை நடத்துகின்றன.
ஒடுக்கும் அரசுகளின்
இந்த சூழ்ச்சியைப் புரிந்து கொண்டுவிட்ட மறுதரப்பினர், அதாவது அரசு
பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுகிறவர்கள் விளையாட்டு விதிகளையே
மாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார்கள். இந்த
மாற்றப்பட்ட விதிகள்தான் அரசுகளை நடுங்க வைக்கின்றன. இப்படி நடுங்க வைத்த
சம்பவம்தான் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தின் மீது நடந்த செப் 11|
தாக்குதல் என்கிறார், பிரபல அமெரிக்க இடதுசாரி ஆய்வாளர் ழான்போத்திரியா!
அரச பயங்கரவாதம் அனைத்துச் செயல்பாடுகளிலும், தன்னை முழுமையான மேலாதிக்க
சக்தியாக வடிவமைத்துக் கொண்டு செயல்படுகிறது ஊடகங்கள் இதற்கு முழு
வீச்சில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பயங்கரவாதத்துக்கு இப்போது
கருத்தியல் என்று ஒன்றுமில்லை. கருத்தியலையும், அரசியலையும் அது கடந்து
விட்டது. நியாயத்துக்குப் புறம்பாக வளர்ந்து வரும் அரச பயங்கரவாதம்
நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான வேறுபாடுகளைக் குலைத்துவிட்டது.
ழான் போத்ரியா மாhர்க்சியம் கடந்த இடதுசாரி சிந்தனையாளராக
வர்ணிக்கப்படுபவர். இவர் இது பற்றி துல்லியமான சிந்தனையை முன்
வைக்கிறார்.
“நன்மை தீமையை வெல்லுவதில்லை. தீமை நன்மையை வெல்லுவதில்லை.
ஒன்றினுள் ஒன்றாகச் சுருக்க முடியாத நிலையில் அவை ஒன்றுக்கொன்று பின்னிப்
பிணைந்தவையாகவும் இருக்கின்றன. இறுதியில் நன்மை தனது “நல்ல தன்மையை”
இழப்பதன் மூலமே தீமையை வெற்றிக் கொள்ள முடிகிறது. உலக அளவிலான அதிகாரத்தை
நாடும் நன்மை, அச் செயல்பாட்டின் ஊடாகவே தனக்கு எதிரான உலகளாவிய
வன்முறையையும் உருவாக்குகிறது” என்கிறார். அரச
பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் ராஜ பக்சே, விடுதலைப்புலிகள்
இயக்கத்தைப் பயங்கர வாதிகள் என்று கூறும்போது, அதை மேற்கத்திய சமூகம்,
கண்களை மூடி ஏற்றுக்கொள்வது எதைக் காட்டுகிறது? இதைத்தான் தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன், தனது மாவீரர் நாள் உரையில்,
“பயங்கரவாதம் என்ற பதத்திற்கு ஒரு தெளிவான தீர்க்கமான வரைவிலக்கணம்
இல்லாததால், தர்மத்தின் வழி தழுவி நிகழும் நியாயமான அரசியற்
போராட்டங்களும் பயங்கரவாதமாகத் திரிவுபடுத்தப்படுகின்றன. இந்த வகையில்
இனவாத ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடும் சுதந்திர
இயக்கங்களுக்கும் பயங்கரவாதச் சேறு ப+சப்படுகிறது. பயங்கரவாதத்துக்கு
எதிரான இன்றைய சர்வதேச எதிர்ப்பியக்கத்தில் அடக்குமுறை அரசுகளின் ராணுவ
பயங்கரவாதம் மூடி மறைக்கப்படுகிறது. ஆயினும் அந்த அரசு பயங்கரவாதத்தை
எதிர்த்து நிற்பவர்கள் மீதே பயங்கரவாத முத்திரை குத்தப்படுகிறது. இந்த
துர்ப்பாக்கிய நிலைதான் எமது விடுதலை இயக்கத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது”
என்று சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாத சேறு ப+சும்
ராஜபக்சேக்களின் பொய்மையை மட்டுமல்ல, உலக ஒழுங்கமைப்பு தனக்கு சாதகமாக
கட்டமைக்கும் பயங்கரவாதத்தையும் மிகச் சரியாகவே அடையாளம் காட்டுகின்ற
வரலாற்று வரிகள் இவை!
இஸ்லாமிய இயக்கங்களுக்கு எதிரான உலகின் நிலைப்பாடு இன்று எல்லா விடுதலை
இயக்கங்களையும் பயங்கரவாதிகளாகக் சித்திரிக்கும் நிலைக்கு விரிக்கப்பட்டுவிட்டது.
கவிஞர் வ.ஐ. ச. ஜெயபாலன் (சமூகவியல் ஆய்வாளர்)
இஸ்லாமிய சர்வதேசியம் எழுச்சி பெற்று அரபு நாடுகள் பலமான ஒரு ஒன்றியமாக
மாறிவிடக்கூடாது என்பதற்காகவும், எண்ணெய் விலையைத் தன் பிடிக்குள் கொண்டு
வருவதற்காகவும் ஆரம்பம் முதலே அமெரிக்கா அரபு நாடுகளில் திட்டமிட்ட சீர்குலைவுகளை
மேற்கொண்டு வந்துள்ளது. அமெரிக்காவின் இந்த எதேச்சாதிகாரம், ஷஅமெரிக்கா எங்களை
விழாவிடாது| என்ற விரக்தியை அரபு நாடுகளில் விதைத்தது. இதுவே இஸ்லாமிய தீவிரவாத
இயக்கங்களின் தோற்றத்துக்கு காரணம். இந்த இயக்கங்கள் இஸ்லாமிய நாடுகளை
சீர்குலைப்பதற்காக அமெரிக்கா கையாண்ட பயங்கரவாத நடவடிக்கைகளின் அடிப்படையில்
அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளை பயங்கரவாத தாக்குதல்களாகவே மேற்கொண்டு
வருகின்றன.
இதற்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டும். இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள்
அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் கைப்பாவை அரசுகளை அகற்றி, அந்தந்த நாடுகளின்
நலன்களுக்கு முன்னுரிமை தரக்கூடிய அரசுகளை அமைப்பதற்கான போராட்டங்களின் மூலமே தங்களை
புரட்சிகரமான விடுதலை அமைப்புக்களாக மாற்றலாம். அதுவரை இவற்றை அமெரிக்காவுக்கு
எதிரான பயங்கரவாத இயக்கங்களாகவே உலகம் பார்க்கும். துர் அதிர்~;டவசமாக இஸ்லாமிய
இயக்கங்களுக்கு எதிரான உலகின் இந்த நிலைப்பாடு இன்று எல்லா விடுதலை இயக்கங்களையும்
பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கும் நிலைக்கு விரிகப்பட்டுவிட்டது.
பெரும்பான்மை இனத்தின் விடுதலை இயக்கங்களை விட எப்போதுமே சிறுபான்மை இனங்களின்
விடுதலை இயக்கங்களுக்கு சவால்கள் அதிகம். ஆயுதமும், அதிகாரமும், வளமும் கொண்ட
அரசுகளுக்கு எதிரான போராட்டங்களில் தங்கள் மத்தியில் இருந்து காட்டிக்
கொடுக்கக்கூடியவர்கள் தொடர்பாகவும் அச்சம் இருக்கிறது. இதனால் புரட்சிகர வன்முறைகள்
கட்டுமீறி இடம் பெறுவதற்கான ஏராளமான வாய்ப்புகள் போராட்டங்களில் உள்ளன. இவை
தொடர்பாக விடுதலை இயக்கங்களுக்கிடையே விமர்சனங்கள் இருக்க வேண்டும்.
விமர்சனங்கள்
உத்தமமான நிலையில் அமைகின்றபொழுது வன்முறைகளை ஷதவிர்க்க இயலாத வன்முறை| என்ற
வரையறைக்குள் ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்த முடியும். ஆனால் விடுதலை இயக்கங்களில்
இந்த விமர்சனங்களுக்கு அவகாசம் இருப்பதில்லை. அவகாசத்தைக் கொடுக்காத அளவில் விடுதலை
இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டு விடுகிறார்கள். இதைத் தவிர்ப்பதற்காகவே
விடுதலைஇயக்கம் முந்த வேண்டியுள்ளது.
ர~;யப்புரட்சி, சீனப் புரட்சி பற்றி எழுதப்பட்ட நூல்களை வாசித்ததில் அந்தப்
புரட்சிகளைப் பயங்கரவாதத்தன்மைகளற்ற போராட்டங்களாகத்தான் நாங்கள் அடையாளப்படுத்தி
வைத்திருக்கிறோம். இன்றைக்கு, இந்தப் போராட்டங்களிலும் அளவுக்கு அதிகமான வன்முறைகள்
இடம் பெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஆனால், இந்த வன்முறைகளைக் கொண்டு
ர~;ய சீனப்புரட்சிகளை புரட்சி இல்லை என்று நிராகரித்து விட முடியாது. அதுபோலத்தான்
இந்திய விடுதலைப் போராட்டத்திலும் பகத்சிங், சுபாஸ் சந்திரபோஸ் போன்றவர்களின்
போராட்டங்களில் மட்டுமீறிய வன்முறைகள் இருந்தபோதும் அவற்றைப் பயங்கரவாதமாக யாரும்
சிதைக்க முற்படுவதில்லை.
ஆனால் இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை உலகு பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்திய பிறகு
விடுதலை இயக்கங்களையும் அந்தப் பட்டியலில் சேர்த்து விடும் நோக்கில் அதிகார
வர்க்கங்கள் செயற்படத் தொடங்கியுள்ளன. மக்களுக்கெதிரான ஆதிக்க அரசுகள் விடுதலை
இயக்கங்களின் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களை, விடுதலை இயக்கங்களின் இருப்பையே
நிராகரிப்பதற்குரிய விமர்சனமாக வளர்த்தெடுக்கின்றன. இந்தப் பின்னணியிலேயே எமது
விடுதலை இயக்கத்தையும் பார்க்க வேண்டும். எல்லா விதமான விமர்சனங்களுக்கும் அப்பால்
வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசம் சார்ந்த சுயாட்சி என்ற ஈழத்தமிழர்களின் ஐம்பது வருட
கால அபிலாi~யை விடுதலைப்புலிகளே முன்னெடுத்துச் செல்கிறார்கள். பயங்கரவாதம் என்ற
முத்திரை குத்தப்பட்டதால் இந்த விடுதலைப் போராட்டம் தோற்றுவிடாது.
உலகமயமாக்கல் விடுதலை கேட்டுப் போராடுகின்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக
உள்ளது.
மாலை சேனாதிராஜா (இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்)
தனிச் சிங்களச் சட்டம் 1956 இல் கொண்டு வரப்பட்டபோது தமிழர்கள் அதை அறவழிப்போராட்டம்
மூலம் எதிர்த்தார்கள். தந்தை செல்வநாயகம் அவர்கள் நடத்திய சத்தியாக்கிரகத்தில் அரச
பிரதமரே காடையர்களை ஏவிவிட்டார். அவர்கள் தடியடி நடத்தியதில் பெரும் இரத்தக்களரியே
ஏற்பட்டது. இப்படி, தமிழ் மக்கள் தங்களுடைய உரிமைகளுக்காக ஜனநாயக முறையில் குரல்
கொடுத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களது உரிமைக்குரலை சிங்கள அரசாங்கங்கள்
தங்களது முப்படைகளையும், காடையர்;களையும் ஏவி ஒடுக்கியே வந்துள்ளது.
1958 இல் இருந்து காலத்துக்குக் காலம் திட்டமிட்ட இனக்கலவரங்களை ஏற்படுத்தி
தெற்கில் இருந்து தமிழர்களை விரட்டியடித்தது. பாதுகாப்பாக இருப்போம் என்று தமிழர்கள்
நினைத்திருந்த வடக்கு கிழக்கு பகுதிகளிலும் அவர்கள் அரச படைகளினால் சுட்டும்,
விமானங்களிலிருந்து குண்டு வீசியும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.
இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு என்று சொல்லும் பேரினவாத சித்தாந்தம் தமிழர்களைப்
ப+ண்டோடு அழிக்கும் பயங்கரவாதத்தை இன்றுவரை செய்து கொண்டுதான் இருக்கிறது. இந்த அரச
பயங்கரவாதம்தான் தமிழ் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்தது.. ஆனால் இந்த வரலாற்று
நியாயத்தை உலக அரசுகள் கண்டு கொள்வதாக இல்லை. அமெரிக்காவும் இலங்கை அரசும்
விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று சொல்லும்போது அவையும் பயங்கரவாதிகள் என்றே
ஒப்புவிக்கின்றன.
உலகில் நீண்டகாலமாக மூன்று கட்டமைப்புகள் இருந்து வந்திருக்கின்றன. ஒன்று
அமெரிக்காவினுடைய தலைமையை ஏற்றுக்கொண்ட ஏகாதிபத்தியக் கட்டமைப்பு. இரண்டாவது சோவியத்
ர~;யா, சீனாவை மூன்னுதாரணங்களாகக் கொண்ட கம்ய+னிச நாடுகள். மூன்றாவது இந்த இரண்டு
அணிகளிலும் சேராத அணி சேராநாடுகள். இந்த உலக ஒழுங்கில் ஒடுக்கப்பட்ட இனங்களின்
போராட்டங்களுக்கு ஒரு இடைவெளி இருந்தது. சோவியத் ர~;யாவினுடைய தலைமையில் இருந்த
நாடுகள் ஓரளவுக்கு ஆதரவாக இருந்தன. உதாரணத்துக்குச் சொல்வதானால், கிழக்குப்
பாகிஸ்தானில் முஜீபர் ரஹ்மானுக்கு ஆதரவாக இந்திராகாந்தி அம்மையார் இராணுவத்தை
அனுப்பியபோது அமெரிக்கா அதைக் கடுமையாக எதிர்த்தது.
இந்தியா பாகிஸ்தானை விட்டு வெளியேறவேண்டும் என்று அமெரிக்கா பாதுகாப்புச் சபையில்
பிரேரணை கொண்டுவந்த போது ர~;யா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து
நிறுத்தியது. அது மட்டுமல்லாமல் வங்காளதேசத்தை முதலாவதாக அங்கீகரித்துப் பிரகடனமும்
செய்தது.
ஆனால் முன்பு இருந்த உலகக் கட்டமைப்பை இன்று உலகமயமாக்கல் வெகுவாக
மாற்றிவிட்டிருக்கிறது. ஆயுதரீதியாக நாடுகளை அடிமைப்படுத்திச் சுரண்டி வளர்ச்சி
பெற்ற வல்லரசு நாடுகள் தொடர்ந்தும் அந்நாடுகளைத் தங்களுடைய பிடிக்குள்
வைத்திருக்கும் பொருளாதார ரீதியான மூலோபாயம்தான் உலக மயமாக்கல். இதில் சோவியத் ர~;யா
சிதைக்கப்பட்டுவிட்டது.
எல்லா நாடுகளும், பொருளாதார ரீதியாக ஒன்றையொன்று, அதிலும் குறிப்பாக
அமெரிக்காவைச் சார்ந்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. இந்த வகையில்
உலகமயமாக்கல் விடுதலை கேட்டுப் போராடுகின்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே உள்ளது.
அமெரிக்கா பயங்கரவாதம் என்று சொல்லும் போது, ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் மற்றைய
நாடுகளும் எழுந்தமானமாக அதை ஆமோதிக்கின்றன. அண்மையில் நான் ஐரோப்பாவுக்குச்
சென்றிருந்த சமயம் விடுதலைப்புலிகள் மீதான தடை ஒரு தலைப்பட்சமானது என்று சொன்னபோது
அதை யாரும் நிராகரிக்கவில்லை.
அதே, சமயம், இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதித்து அது மேற்கொண்டுவரும்
இனஒழிப்பை நிறுத்தச் சொல்லி நிர்ப்பந்திக்க இவர்கள் தயாராகவில்லை. உலக மயமாக்கல்
பெரும் தடையாக இருக்கிறது.
ஆனால் சமீபகாலமாக உலகமயமாக்குதலுக்கு எதிரான குரல்கள் பலம் பெற்று வருகின்றன. தென்
அமெரிக்க நாடுகளில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசுகள் இதற்கு உதாரணம்.
பயங்கரவாதம் என்று குற்றச் சாட்டையும் தாண்டி விடுதலையை வென்றெடுப்பதற்கான காலமும்
ஒன்ற வரும்.
பயங்கரவாதிகள் என்று குற்றம்சாட்டப்பட்ட பலருக்கு பின்னாளில் ஐக்கிய நாடுகள் சபை
செங்கம்பள வரவேற்புக் கொடுத்திருக்கிறது.
இந்த நிலை எங்களுக்கும் வரும்.
அதுவரை நம்பிக்கை இழக்காமல் போராடுவோம்.
அந்த நம்பிக்கைதான் எங்களுக்கு இருக்கின்ற ஒரே பலம்.
ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தில் ஆயுதம் தாங்குவது ஒரு படிநிலை!
தோழர் ஆர். நல்லகண்ணு (இந்திய கம்ய+னிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்)
இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான விடுதலைப் பேராட்டத்துக்குப் பிறகும் பல
போராட்டங்கள் நடந்திருக்கிறது. சுதந்திரம் கிடைத்து நேரு தலைமையில் காங்கிரஸ்கட்சி
ஆட்சி அமைத்தவுடன் கம்ய+னிஸ்ட்கட்சி ஒரு போராட்டம் நடத்தியது. சுதந்திரத்துக்கான
தேசிய இயக்கத்தில் காங்கிரசுடன் கம்ய+னிஸ்ட் கட்சியும் ஒரு அங்கம். ஆனால் மன்னர்
ஆட்சி ஒழிப்பு, விவசாயிகளுக்கு நிலங்களைப் பகிர்ந்து கொடுத்தல், மொழிவாரியாக
மாநிலங்களைப் பிரித்தல் போன்றவற்றைக் காங்கிரஸ் அரசு நிறைவேற்றாமல் மன்னர்களுடனும்
நிலச்சுவாந்தர்களுடனும் சமரசப் போக்கை; கடைப்பிடித்ததால் காங்கிரஸ் அரசை எதிர்த்துப்
போராட நேர்ந்தது. ஆயுதம் தூக்கிப் போராடினோம். விடுதலைப்போராட்டத்தின் போது
பிரித்தானிய அரசு எங்களை ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்யும் வன்முறையாளர்கள் என்று
ஒடுக்கியது.
விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் அரசு எங்களை வளர்ச்சியைத் தடுக்க சதி செய்யும்
வன்முறையாளர்கள் என்று ஒடுக்கியது. இதில் நான்கூட ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில்
அடைக்கப்பட்டேன். அன்று எழைடநnஉந – வன்முறை என்றதைத்தான் இன்று வநசசழசளைஅ –
பயங்கரவாதம் என்கிறார்கள்.
இந்திய விடுதலைப்போராட்ட காலத்தில் பகத்சிங் ஷசோசலிஸ்ட் நவ நிர்மாண சபா| என்ற
குழுவாக இயங்கியவர். அவர் டெல்லியில் இருந்த பிரித்தானிய மத்திய பாராளுமன்ற
கட்டிடத்தின் மீது குண்டு வீசியபோது, இப்படி மோதி ஒரு ஆட்சியைக் கவிழ்த்து
விடமுடியுமா| என்று அதற்குக் காங்கிரசில் எதிர்ப்பு இருந்தது. பகத் சிங்கும்,
ஷஇதனால் பிரச்சினை தீரும் என்று தான் நினைக்கவில்லை.
இலண்டனில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதுதான் நோக்கம்| என்றுதான்
சொன்னார். பின்னர், அவர் தூக்கில் இடப்பட்டபோது மக்களிடம் அது பேரெழுச்சியை
ஏற்படுத்தியது என்று நேருவே குறிப்பிட்டிருக்கிறார். அது போல, ஆ~; துரையை
வாஞ்சிநாதன் புகையிரதத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தன்னைத் தானே சுட்டுத்
தற்கொலை செய்து கொண்டார். இவையெல்லாம் விடுதலைப்போராட்டத்தில் மக்களை எழுச்சியுடன்
இணைத்தது. தியாகத்தின் எல்லை கடந்து தங்களை அர்ப்பணித்த இவர்களைப் பயங்கரவாதிகள்
என்று சொல்லி விட முடியுமா?
என்னைப் பொறுத்தவரையில் தனி நபர் ஒருவர் தன்னுடைய நலன்களுக்காக மேற்கொள்ளுகின்ற,
அறத்துக்குப் புறம்பான செயல்பாடுகளை பயங்கரவாதம் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால்
சமூகத்தின் நலன்களுக்காக, அந்த மக்களையும் இணைத்து நடைபெறுகின்ற பொழுது அது ஜனநாயகப்
போராட்டம். இது வர்க்கப் போராட்டமாகவோ, மொழியுரிமைப் போராட்டமாகவோ,
விடுதலைப்போராட்டமாகவோ இருக்கலாம். இந்த ஜனநாயகப்போராட்டத்தில் ஆயுதம் தாங்குவது ஒரு
படிநிலை. அது அறவழிப்போராட்டமா அல்லது ஆயுதப்போராட்டமா என்பதை ஆதிக்க சக்திகள்தான்
தீர்மானிக்கின்றன. நிலைமை இவ்வாறு இருக்கும்போது ஆயுதரீதியான நடவடிக்கைகள்
எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாக பயங்கரவாதம் என்று குற்றம் சொல்ல முடியாது.
இலங்கையில் தமிழ் மக்கள் ப+ர்வகுடிகள். இலங்கை சுதந்திரம் அடைந்த போது தனி நாடாகவோ
அல்லது மாநிலசுயாட்சியாகவோ அவர்களை ஆழுகின்ற உரிமையை அவர்களிடமே ஒப்படைத்திருக்க
வேண்டும். ஆனால் அவர்களின் பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்ப்பதற்குப் பதிலாக
அடக்குமுறையில் ஒடுக்கிவிடலாம் என்று அரசு நினைத்தது. அதுவேதான் ஆயுதரீதியான
போராட்டம் அங்கு வெடிக்கக் காரணமாக அமைந்தது. விடுதலைப்புலிகள் அதை முன்னெடுத்துச்
செல்லுகிறார்கள். விடுதலைப்புலிகள் வேறு தமிழ் மக்கள் வேறு என்று நாங்கள்
பார்க்கவில்லை. அவர்களைப் பயங்கரவாதிகள் என்று ஒடுக்க முயல்வது நல்லது அல்ல.
தினக்குரல்
|