|
சீனாவின் போலியான தயாரிப்பு |
|
|
|
Saturday, 10 September 2005 |
|
உங்களுக்கு என்ன பொருள் வேண்டும்? எந்த நாட்டு பெயர் போட்டு, என்ன வர்த்தகக் குறியீட்டுடன் வேண்டும். அத்தனை குறியீடுகளும் போட்டு பொருட்களை சீனாவில் இருந்து அந்தப் பொருட்களை மலிவு விலையில் பெற முடியும். சீன ஆடைகள் மட்டும் இப்போது ஐரோப்பாவின் பிரச்சனையல்ல தளவாடங்கள், இயந்திரங்கள், லீகோ விளையாட்டுப் பொருட்கள், சலவை இயந்திரம், வானொலிப் பெட்டிகளென சகல விதமான பொருட்களையும் போலி முத்திரைகளுடன் தயாரித்து அனுப்புகிறது சீனா. கடந்த 2003 ம் ஆண்டு மட்டும் 100 மில்லியன் போலியான பொருட்கள், போலி வியாபார சின்னங்களுடன் ( றேட்மார்க் ) ஐரோப்பா வந்துள்ளன. இப்பொருட்கள் 100 கோடி யூரோ பெறுமதியானவை. 2002 ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் சீனாவின் போலி முத்திரை பொறிக்கப்பட்ட பொருட்களின் வரவு 18 விதத்தால் அதிகரித்துள்ளது.
Ravi
|