|
இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு இந்தியா தீவிரமான பங்களிப்பைக் கூடுதலாகச் செய்ய முன்வராமல் தவறு இழைத்திருப்பது இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு நேர்ந்த இமாலயத் தவறாக இருக்கப் போகிறது என்று இந்தியாவின் புலனாய்வு முகவர் நிறுவனமான "றோ'வின் முன்னாள் தலைவரான ஜே.கே. சின்ஹா எச்சரித்திருக்கிறார்.
இலங்கை விவகாரத்தில் ஒதுங்கியிருந்ததன் மூலம் பெரும் இராஜதந்திரத் தவறை இந்தியா செய்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
""இலங்கையின் சமாதான முயற்சிகளில் இந்தியா ஓரமாக ஒதுங்கியிருந்து பார்வை
யாளனாக இருப்பதோடு திருப்தியடைந்து விட்டது. இதற்கு விடுதலைப் புலிகள்
பற்றிய ஐயமும், அவநம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்'' என்றும் சின்ஹா
குறிப்பிடுகிறார்.
"றோ' எனப்படுகின்ற ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவு நிறுவனமே இந்தியாவின்
தேசியப் புலனாய்வு முகவர் நிறுவனமாகும். இதன் தலைவராக ஜே.கே. சின்ஹா கடந்த
வருடம் வரை பதவி வகித்து பணியாற்றியி ருக்கிறார்.
"இந்தியன் டிபென்ஸ் றிவியூ' என்ற இந்தியப் பாதுகாப்பு விவகார சஞ்சிகையில்
இவர், "தெற்காசிய அயல் பரப்பில் இந்தியா தனது பாதையை இழந்து வருகிறது'
என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அந்தக் கட்டுரையிலேயே இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியா ஓரத்தில்
நின்று பார்வையாளனாக இருப்ப தோடு திருப்திப் படாமல் தீவிர பங்களிப்பைச்
செய்திருக்க வேண்டியதன் அவசியத் தைத் தொட்டுக் காட்டியிருக்கிறார்.
நல்ல
நோக்கத்தை வெளிக் காட்டும் நல்வார்த்தை களும், வாய் ஜாலங்களும் இன்று
கொள்கைப் பிடிமானத்துக்கும், நம்பகத் தன்மைக்கும் மாற்றீடாகி வருகின்றன
என்றும் இவர் கட்டுரையில் ஒரு இடத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
சமாதான முன்னெடுப்புகள் படிப்படியாக சிதைந்து போவதற்கு இந்தியா அனுமதித்து முற்றிலும் ஒரு பார்வையாளனாகவே இருந்து வந்திருக்கிறது.
இலங்கையில் மீண்டும் ஒரு சிவில் யுத்தம் தலைதூக்கும்போது இந்தியா பாரிய
விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் சின்ஹா தனது கட்டுரையில்
குறிப்பிட்டிருக்கிறார்.
""இலங்கையின் கள நிலைமையை இந் தியா முற்று முழுதாக விளங்கிக் கிரகித்துக்
கொள்ள இயலாமையும், கடந்த கால கசப் பும், சமாதான சக வாழ்வுக்கான தீர்வைப்
பெற்றுக்கொடுப்பதற்காக விடுதலைப் புலி களுடன் தொழில் உறவைப் பேணுவதற்குத்
தயக்கம் காட்டுவது போன்றவை எல்லாம் இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு
இழைக்கப்பட்ட இமாலயத் தவறு என்பதை நிரூபிக்கப் போகிறது'' என்றும் சின்ஹா
எச்சரித்திருக்கிறார்.
ஒஸ்லோ உடன்பாடு
இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலி களுக்குமிடையே 2002 ஒஸ்லோவில் செய்து
கொள்ளப்பட்ட உடன்படிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு புதுடில்லி தவறிவிட்டது
என்றும் சின்ஹா, இந்திய வெளிவிவகார அமைச்சைச் சாடியிருக்கிறார். இந்த
ஒஸ்லோ உடன்படிக்கையானது, சமஷ்டி ஆட்சியமைப்பு முறையிலான தீர்வொன்றைப்
பரிசீலிப்ப தற்கு விடுதலைப் புலிகளை முதல் தடவை யாக இணங்க வைத்திருந்தது.
இதனை முன் னெடுத்திருந்தால் அவ்வளவு சிகக்கல்கள் ஏற்பட்டிருக்காது.
ஒஸ்லோ பேச்சில் ஏற்பட்ட ஆக்கபூர்வ மான முன்னேற்றத்தைக் கட்டி வளர்ப்பதற்
குப் பதில் புலிகள் மீதுள்ள ஐயம், அவநம் பிக்கை காரணமாக கொள்கை
முன்னெடுப்புகள் தொடர்பான செயல்களை மழுங்கடிப் பதற்கு இடமளித்து ஓரமாக
நின்று வெறும் பார்வையாளனாக இருப்பதோடு இந்தியா திருப்திடைந்து கொண்டது
என்றும் சின்ஹா இந்தியா மீது குற்றஞ்சாட்டுகிறார்.
சந்திரிகா மீதும் குற்றச்சாட்டு
தனது இந்தக் கட்டுரையில் அவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை
யும் சாடியிருக்கிறார். வடக்கு கிழக்குக்கு இடைக்கால நிர்வாக சபை ஒன்றை
நிறுவுவதற்கான யோசனை ஒன்றை விடுதலைப் புலிகள் ரணில் விக்கி ரமசிங்கவின்
அரசிடம் 2003ஆம் வருட பிற்பகுதியில் சமர்ப்பித்து ஒரு சில நாள் களுக்குள்
ரணிலின் அரசை ஆட்டம் காண வைத்து கவிழ்க்கும் நடவடிக்கைகளை எடுத் ததற்காகவே
சந்திரிகா குமாரதுங்கவை அவர் சாடியிருக்கிறார்.
ரணிலின் அரசைக் கவிழ்ப்பதற்கு சந்திரிகா குமாரதுங்க அரசியலுக்கு ஒவ்வாத
அகௌரவமான, அரசியலமைப்புக்கு விரோத மான முறையில் நடக்க முற்பட்ட பொழுது,
இந்தியாவும், சர்வதேச சமூகமும் அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு வேண்டிய
அத்தனையையும் செய்திருக்க வேண்டும்; செய்யத் தவறிவிட்டன.
விடுதலைப் புலிகள் தொடர்பான இந் தியாவின் மாறுபட்ட போக்கும் சமாதான
முன்னெடுப்புகளுக்குப் பின்னால் நின்று அதற்கு ஆதரவான முறையில் செயற்படத்
தவறியமையும், இந்தியாவுக்குப் பாரிய செலவைத் தரப் போகிறது. இந்தியா பெரிய
சங்கடத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறது.
தமிழ் நாட்டில் எழும் உணர்வலைகள் காரணமாக, விடுதலைப் புலிகளைத் தோற்
கடிப்பதற்கு இலங்கை அரசக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்க முடியாது.
இதேவேளை, புலிகள் விடயத்தில் அவர் களுக்கு எதிரான அறிக்கைகளை படாடோப மாக
வெளியிட்டு வந்தமையால் சமாதானப் பேச்சு மூலம் தீர்வை முன்னெடுப்பதற்கு
இருந்த வழிகளை மறைத்து விட்டிருக்கிறது என்றும் சின்ஹா எழுதியிருக்கிறார்.
இலங்கை அரசையும் சின்ஹா விட்டு வைக்கவில்லை.
இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையில் வலுக்கட்டாயமாக வெளி யேறச்
செய்வதற்கு விடுதலைப் புலிகளுடன் சேர்ந்து சதிசெய்த இலங்கை அரசு, இப்
பொழுது விடுதலைப் புலிகளுக்குக் கடிவாளம் போட்டு அதிகாரம் செலுத்துவதற்கு
புது டில்லி அரசுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. அதேநேரம், நிலையான
சமாதானம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு பிராந்திய வல் லரசு என்ற பங்களிப்பை
வழங்குமாறும் கேட்டு நிற்கிறது என்றும் கட்டுரையில்
தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
|