|
|
|
தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தோல்வி முகம் |
|
|
|
Friday, 06 October 2006 |
|
பக்கம் 1 / 2
1. ஈழத் தமிழரின் அடிமை வாழ்வு நீங்கவேண்டும்.
2. ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்கும் உள்ள உறவுகள் சீரடையவேண்டும்.
இந்த இரு நோக்கங்களுடன் என்னாலான மிகச் சிறிய அளவிலான முயற்சிகளைச் சென்னையிýருந்து மேற்கொண்டு வருகிறேன்.
1. ஈழத் தமிழரின் பாதுகாப்பும் தன்னாட்சியும் ஈழத் தமிழரிடமே இருக்கவேண்டிய தேவை,
2. 1987þ91 கால, ஈழத் தமிழர் þ இந்தியப் பொருந்தா நிகழ்வுகளை மறப்பது,
3. இந்தியாவில் அகதிகளின் நலம்,
4. சிங்களப் படைகளுக்கு இந்தியா உதவக் கூடாதமை,
5. இந்திய நலன்களுக்கு மாறாக ஈழத் தமிழர் செயற்படார் என்ற உறுதி,
6. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை இந்தியா அழைத்துப் பேசுவது,
7. தமிழகத்தின் பல்வேறு துறைகளிலும் உள்ள தமிழர்களை ஈழத்துக்கு அனுப்புவது,
8. இந்த நோக்கங்களை ஒட்டிய கருத்துருவாக்கக் கட்டுரைகள், ஒý / ஒளிபரப்புகள்,
9. இந்த நோக்கங்களை முன்னெடுக்கச் செல்வாக்குள்ள தமிழகத் தமிழர் மற்றும் இந்தியர்களிடம் ஈழத் தமிழர் பால் நல்லெண்ணத்தை உருவாக்குவது
போன்றவை என் முயற்சிகளுட் சிலவாக அமைந்து வந்தன.
இந்தப் பின்னணியில் 28.8.2006 முதலாக 23.9.2006 ஈறாக வரையுள்ள மூன்று வார
காலப் பகுதியில் நிகழ்ந்தவற்றைப் பதிவு செய்யவேண்டியது என் கடன். கடந்த
ஒன்றரை ஆண்டுகளாகவே சென்னைக்கு வரும்பொழுதெல்லாம் பழம்பெரும் விடுதலைத்
தியாகியும் நாடாளுமன்ற உறுப்பினராகிய மாவை சேனாதிராசா என்னுடனேயே
தங்குவார். ஈழத் தமிழர் இந்திய உறவுகள் மேம்பாடடையும் முயற்சிகளுக்கு
எனக்கு ஒத்தாசையாக இருப்பார். இதற்காகச் சில மாதங்களுக்கு முன்னர் ஒருமுறை
இருவருமாகத் தில்ýக்கும் போய் வந்தோம்.
தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கு முன் பெப்புருவரியில் ஒரு சுற்றாகவும்,
தேர்தலுக்குப் பின் சூலையில் ஒரு சுற்றாகவும் தமிழகத் தலைவர்களைச்
சந்தித்தோம். பெப்புருவரியில் நடந்த பல்வேறு சந்திப்புகளின் செய்திகள்
வெளிவராதவாறு காத்துக்கொண்டோம். தேர்தலுக்குப் பிந்தைய சூலை மாதச்
சந்திப்புக்கு இரா. சம்பந்தனும் வருவார் என மாவை சேனாதிராசா என்னிடம்
தெரிவித்திருந்தார். எனவே தமிழகத் தலைவர்களிடம் அதைக் கடிதமாக
முன்கூட்டியே தெரிவித்திருந்தேன். தமிழக முதல்வர் கலைஞர், எதிர்க கட்சித்
தலைவர் செயலýதா, மார்க்சிய பொதுவுடைமைக் கட்சி இவை தவிர ஏனைய கட்சித்
தலைவர்கள், ஈழத்தவர் இருவரின் வரவை ஆவலோடு பார்த்திருப்பதாக என்னிடம்
தெரிவித்தனர்.
ஒப்பியவாறு இரா. சம்பந்தன் வரவில்லை. எனவே மாவை சேனாதிராசாவும் நானும்
இச்சந்திப்புகளைத் தொடர்ந்தோம். சந்திப்புகளின் செய்திகளும் வெளிவந்தன.
இரா. சம்பந்தன் தனது குடும்பச் சூழ்நிலையே வர இயலாமைக்குக் காரணம் எனத்
தெரிவித்திருந்தார். அக்காலத்தில் அவர் இந்தியாவில் இருந்தார். அவருக்குப்
பதிலாக வேறொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அவர் அனுப்பியிருக்கலாம்.
இந்தச் சந்திப்புகளின் தேவை, அவசியம் பற்றி இரா. சம்பந்தன் போதுமான அக்கறை
கொண்டிருக்கவில்லையென அப்பொழுது எனக்குத் ளதான்றியது.
அடுத்த சுற்றுச் சந்திப்புக்களுக்காக, இரா. சம்பந்தன் தலைமையிலான
நாடாளுமன்ற உறுப்பினர் குழுவுடன் 10.8 முதலாகச் சென்னையில் தங்கி இருக்கப்
போவதாகவும் ஏற்பாடுகளைச் செய்யுமாறும் மாவை சேனாதிராசா என்னைத்
தொலைப்பேசியில் கேட்டுக்கொண்டார். அவர்கள் அனைவரும் சென்னை வந்து சேர்ந்த
பின் தமிழகத் தலைவர்களைத் தொடர்புகொள்வதே ஏற்றது எனக் கருதிய நான்,
காத்திருந்தேன். முந்தைய அநுபவம் பாடமாக இருந்தது.
|
|