பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow நளினியை விடுதலை செய்ய கருணாநிதியிடம் திருமாவளவன் கோரிக்கை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

நளினியை விடுதலை செய்ய கருணாநிதியிடம் திருமாவளவன் கோரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 07 October 2006
ராஜீவ் வழக்கில் ஆயுள் தண்டனை காலத்தை நிறைவு செய்திருக்கும் நளினியை தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

மதுரையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கிருஸ்ணசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய திருமாவளவன், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்தது போல் ராஜீவ் வழக்கில் சிறையில் உள்ள நளினியையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..