உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இலங்கை அரசு சதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 28 September 2005

இலங்கை அரசு சதி - டக்ளஸ் சங்கரி கருணா என்ற மூவேந்தர்கள் அறிவார்களா இதை ? 
லக்ஸ்மன் கதிர்காமர் என்னும் தமிழ் பேசத்தெரியாத தமிழ்ப் பெயருடைய ஒருவனைத் தமிழருக்கு எதிராக நன்கு பயன்படுத்திவிட்டு அவருடைய பிரச்சாரம் என்னும் அரசியல் விபச்சாரங்கள் ஆரம்பத்தில் அதிக வருமானத்தை அரசாங்கத்திற்கு ஆட்டித்தந்திருந்தாலும். பின்னர் சர்வதேச சமூகத்தால் அது விலைகோராத பொருளாகக் கதிர்காமர் கதி மாறியது.

அவரினால் இனி எங்களுக்கு பயன் எதுவும் இல்லை என்பதனை உணர்ந்த சிங்கள அரசு திட்டமிட்டுச் வெளிநாட்டுச் சதியொன்றின் மூலம் கொலை செய்துவிட்டு அவருடைய மரணச்சடங்கை சிங்களத்தில் நடாத்தி உலகம் எங்கும் போலப்பரைப்புரை நடாத்திவிட்டு சலித்துப்போய் இருக்கிறது. இன்று கொலைக்கு அடையாளம் தேடுகிறது. கதைகளைச் சோடித்துத் தூதுவரகம் தூதுவரமாக அனுப்பி வருகிறது. இருக்கும் போது பெற்ற பயனில் கொஞ்சமாதல் இறந்த பின்னர் பெறமுடியுமா என்ற உலகத்தைக் கையேந்தி நிற்கிறது. விடுதலைப் புலிகள் மீது தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு விட்டு அதே சூட்டுடன் கதிர்காமரையும் கொலை செய்துவிட்ட கதிர்காமரின் கொலையினை விடுதலைப் புலிகள் தான் மேற்கொண்டார்கள் என்று கதை அளக்கிறது அரசு. இதன் உண்மையை உலக சமூகம் உணர வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழனின் ஆதங்கமுமாகும். சமாதானம் ஒன்ற போர்க்குள் புலிகள் மீது பாவத்தைப் போட்டு சர்வதேச வலைக்குள் மாட்ட முனைகிறது. கதிர்காமருக்கு இலங்கையரசு எத்தகைய ஒரு சதியைச் செய்ததோ அதே போன்ற ஒரு சதியைக் கருணாவுக்கும் செய்யும் என்பது உண்மை.

கிரானில் இருந்து
நிமலன். 


நிமலன்.
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..