|
பிரான்சில் நினைவுநாள் நிகழ்வு |
|
|
|
Monday, 09 October 2006 |
 தமிழீழ விடுதலைக்காய் களமாடி வீரமரணமான லெப் கேணல் குமரப்பா, லெப் கேணல் புலேந்திரன், உட்பட பன்னிரு வேங்கைகளின் நினைவாகவும் தியாக தீபம் லெப் கேணல் திலீபன், கேணல் சங்கர், கேணல் ராயூ, லெப் மாலதி, லெப் கேணல் நாதன், கப்டன், கஜன், ஆகியோரின் நினைவாகவும் நேற்று மாலை பாரிஸின் புறநகர் பகுதியான La Plaine St Denis உள்ள L S C மண்டபத்தில் நினைவெழுச்சி மாலை 04.00 மணிக்கு ஆரம்பமாகியது.
இந் நிகழ்வில் பொதுச் சுடரினை வீரவேங்கை கையிலனின் சகோதரரான திரு
அருள் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை
வீரவேங்கை குட்டியின் சகோதரரும் பிரான்ஸ் நாட்டின் நிதிப்
பொறுப்பாளாருமாகிய திரு. ஜெயா அவர்கள் ஏற்றி வைத்தார், ஈகைச் சுடரினை
கப்டன் கஜனின் சகோதரரான திரு பிறேம் அவர்கள் ஏற்றிவைத்தார்.
இதைத்
தொடர்ந்து பிரான்ஸ் வாழ் தமிழீழ மக்கள் மலர் வணக்கம் செலுத்தினர்.
கலைபண்பாட்டுக் கழகத்தின் சின்னஞ்சிறுவர்களும், சிறுமியர்களும், விடுதலைப்
பாடல்களையும், நியூலி சூமார் தமிழ்ச் சோலை மாணவர்களும், T Boys நடனக்
குழுவினரும், நிருத்தியாலய மாணவிகளும், T Style நடனக் குழுவினர்கள்
விடுதலைப் பாடல்களுக்கு எழுச்சி நடனம் வழங்கியிருந்தனர். நிகழ்வில் பங்கு
பற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரான
திரு. ஜெயானந்த மூர்த்தி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
இறுதி நிகழ்வாக
தமிழீழ தேசியக் கொடி இறக்கல் நிகழ்வுடனும், நம்புங்கள் தமிழீழம் நாளை
பிறக்கும் என்ற எழுச்சி பாடலுடன் இந் நிகழ்வு 20.00 மணிக்கு நிறைவு
பெற்றது.
நெருடல் இணையம்
|