பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow “தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்”
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

“தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்” அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
இதை எழுதியவர்: ஆக்கம்: சபேசன் - மெல்பேர்ண் - அவுஸ்திர   
Wednesday, 11 October 2006
தொகுப்புக்கள் உள்ளடக்கம்
“தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்”
பக்கம் 2
பக்கம் 3
பக்கம் 4
பக்கம் 5
பக்கம் 6
பக்கம் 7
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய காலகட்ட நிலவரம் குறித்துப் பலவிதமான கேள்விகள் நம்மவர் மத்தியில் எழுந்திருப்பதை நாம் காண்கின்றோம். சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பிரகடனப் படுத்தப்படாத யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீது நடாத்தி வருகி;ன்றது. 

சம்பூர் போன்ற பிரதேசங்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன. தமிழ்ப்பொதுமக்கள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றார்கள்.

சமாதானப்பேச்சு வார்த்தைகள் சரியான முறையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தேங்கி போயுள்ளன.

சமாதானப் பேச்சு வார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க தயார் என்று சொல்கின்ற சிpறிலங்கா அரசு அதே வேளை தொடர்ந்தும் வான்தாக்குதல்களையும் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களையும் நடாத்தி வருகின்றது.

இப்படிப்பட்ட காலகட்டத்தில் எம்மவர் நெஞ்சங்களில் கேள்விகளும் குழப்பங்களும் எழுவது இயல்புதான்.

‘சிறிலங்கா அரசும், மேற்குலக நாடுகளும் சமாதானப்பேச்சு வார்த்தைகளை முறையான விதத்தில் அணுகாத போது விடுதலைப் புலிகள் ஏன் இன்னும் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் அக்கறையாக இருக்கின்றார்கள்?

தமிழீழ விடுதலைப் புலிகள் பலவீனமடைந்து விட்டார்களா?

இராணுவ ரீதியாகப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா?

தமிழ் மக்கள் மீதான கொலைகளையும், மனிதஉரிமை மீறல்களையும் இன்னும் எத்தனை நாள்தான் பொறுத்திருந்து பார்ப்பது?

விடுதலைப்புலிகளின் அடுத்த கட்ட நகர்வுதான் எதுவாக இருக்கும்?

- என்ற கேள்விகள்தான் இன்று எமது மக்களின் நெஞ்சங்களை நிறைத்திருப்பதையும் நாம் காண்கின்றோம்.

இவை சம்பந்தமாகச் சில முக்கிய விடயங்களையும், கருத்துக்களையும் முன்வைத்துத் தர்க்கிக்க விழைகின்றோம்.

சமாதானப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று கொண்டிருந்த காலத்தில் நிரூபித்திருக்க முடியாத பல விடயங்கள் இப்போது அதாவது சமாதானப்பேச்சு வார்த்தைகள் நடைபெறாத காலத்தில் நிரூபிக்கப்பட்டு வருகின்றன.

வெளிப்படையாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தடைகளையும், அழுத்தங்களையும் மேற்குலகம் விதித்திருந்தாலும் மிக அண்மைக் காலமாக மேற்குலகம் சரியான திசையில் தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டு வருவதை நாம் அவதானிக்கின்றோம்.

தொடர்கிறது...



 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..