|
மோதல்கள் குறித்து அமெரிக்கா கவலை |
|
|
|
Thursday, 12 October 2006 |
|
பேச்சுகள் மீளத் தொடங்கும் நிலையில் மோதல்கள் வெடித்துள்ளமை குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் மெக்கொர்மக் வெளியிட்டுள்ள அறிக்கை:
இருதரப்பினரும் பேச்சுக்களை மீளத் தொடங்க ஒப்புக்கொண்டமையை வரவேற்கிறோம்.
ஆனால் பேச்சுக்களை சீர்குலைக்கும் வகையிலான தற்போதைய வன்முறைகள் குறித்து கவலை கொள்கிறோம்.
இருதரப்பும் போர் நடவடிக்கைகளைக் கைவிட்டு ஜெனீவா பேச்சுக்களுக்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரச சார்பற்ற மனிதாபிமான பணியாளர்கள் பணிகளை
மேற்கொள்வதற்கான நடவ்டிக்கைகளை இருதரப்பினரும் உறுதி செய்ய வேண்டும்
என்றார் அவர்.
|