|
`சமாதான செயல்முறையும் ஊடகத்தின் பிரயோகமும்' என்னும் தொனிப்பொருளில் அரசியல் விவகார அமைச்சு மற்றும் தகவல் ஊடக அமைச்சு என்பன இணைந்து ஊடகவியலாளர்களுக்கு நடத்திய செயலமர்வில் பலஸ்தீன ஆய்வாளரும் அமெரிக்கன் பல்கலைக்கழக பேராசிரியருமான `மொஹமட் அபு நிமர்' ஆற்றிய உரையின் தொகுப்பு:
ஒரு நாட்டில் மோதலைத் தோற்றுவிப்பதிலோ அல்லது சமாதானத்தைத் தோற்றுவிப்பதிலோ ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இதில் ஊடகங்களின் பங்களிப்பை, மோதலைத் தோற்றுவிப்பதில் ஊடகங்களின் பங்கு, மோதலின் போது ஊடகங்களின் பங்கு மற்றும் மோதலை முடிவிற்குக் கொண்டுவருவதில் ஊடகங்களின் பங்கு என 3 வகையாக பிரித்து ஆராயலாம். மோதலை முடிவிற்குக் கொண்டு வருவதில் ஊடகங்களின் பங்கு பற்றிப் பார்த்தால் இதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஏனெனில், மோதலை முடிவிற்குக் கொண்டு வருவதில் அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தகப் பிரமுகர்கள், உதவி வழங்கும் நாடுகள், சமயத் தலைவர்கள் மற்றும் தனி நபர்கள் எனப் பலரும் ஈடுபட்டாலும் இவர்கள் அனைவரையும் இணைத்துச் செயற்படும் ஆற்றல் ஊடகங்களுக்கு மட்டுமே உண்டு. ஏனெனில், இத்தரப்பினர்களுக்கிடையே தனித்தனியே தொடர்புகள் கிடையாது. ஆனால் இத்தரப்பினர் அனைவரையும் இணைக்கும் வலு ஊடகங்களுக்கு மட்டுமே உள்ளது. இதனால் தான் சமாதானத்தை உருவாக்குவதில் மற்றைய அனைத்துத் தரப்பினரையும் விட ஊடகங்களுக்கு கூடிய பணி உண்டு என குறிப்பிட்டேன். ஆனால் எந்த ஒரு மனிதனாலும் நடுநிலையாக செயற்பட முடியாது. அவர்களது உணர்வுகள், கருத்துகள், பண்புகள் என்பன அவர்களை பக்கச் சார்பானவர்களாகவே செயற்பட வைக்கின்றன. இதனால் தான் எந்த ஒரு ஊடகத்தாலும் நடுநிலையாக செயற்பட முடியாத நிலை காணப்படுகிறது. இதேவேளை, ஊடகங்கள் மோதலைத் தணிப்பதில் காட்டும் அக்கறையைவிட மோதலைத் தூண்டும் வகையிலேயே அதிகம் செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுப்பப்படுகிறது. நான் பிலிப்பைன்ஸில் சமாதான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளேன். அங்கு பெரும்பான்மையாக உள்ள கிறிஸ்தவ அரசுக்கு எதிராக சிறுபான்மை முஸ்லிம்கள் மின்டோனா பகுதியில் போராட்டமொன்றை நடத்தி வருகின்றனர். ஆனால் அங்குள்ள ஊடகங்கள் பல அரசுக்கு ஆதரவான போக்கையே கடைப்பிடிக்கின்றன. அங்கு முஸ்லிம் இனத்தவர் ஒருவர் குற்றம் செய்தால் அங்குள்ள பத்திரிகைகள் `முஸ்லிம்' ஒருவர் என்பதை சுட்டிக்காட்டியே செய்தி வெளியிடும். ஆனால் அதே தவறை கிறிஸ்தவர் ஒருவர் செய்தால் அவை ஒரு போதுமே `கிறிஸ்தவர்' என சுட்டிக்காட்டி செய்தி வெளியிடுவதில்லை. `நபர்' ஒருவர் என்றே செய்திவெளியிடும். இதேபோலவே நான் 1980 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இதே பணியில் அங்கு சுமார் 500 இற்கும் அதிகமான நிறுவனங்கள் ஈடுபட்டன. ஆனால் இச் சமாதானப் பணியை முக்கியப்படுத்தி ஒரு போதுமே ஊடகங்கள் செய்தி வெளியிட்டதில்லை. ஆனால் எங்கோ ஒரு மூலையிலுள்ள சந்தைப் பகுதியொன்றில் சிறு குண்டு வெடித்தால் கூட அதை அவை முக்கியப்படுத்தி செய்தி வெளியிடுகின்றன. இலங்கையிலும் இதே போன்றதொரு நிலையே காணப்படுகின்றது என்றே நினைக்கிறேன். இதேவேளை, பல ஊடகங்கள் தமக்கென ஒரு பார்வையை வைத்திருக்கின்றன. அதாவது குதிரைக்கு அது அக்கம் பக்கம் பார்க்காத படி கண்கள் கட்டப்பட்டிருப்பது போல அவை தமது கண்ணோட்டத்திலே தான் எந்த விடயத்தையும் நோக்க முற்படுகின்றன. எப்போதும் தமது தரப்பு செய்தது எதுவாய் இருந்தாலும் அது சரி. மற்ற தரப்பு செய்வதெல்லாம் பிழை என்ற எண்ணத்துடனேயே செயற்படுகின்றன. அவர்கள் தமது பார்வையை விசாலமாக்கிக் கொள்ள விரும்புவதில்லை. இதனால் இந்த ஊடகங்களை வாசிப்பவர்களும் ஒரு குறித்த கருத்தை உடையவர்களாய் இருப்பார்களே ஒழிய குறித்த விடயம் பற்றி மறுதரப்பு என்ன கருத்தைக் கொண்டிருக்கிறது என்று சிந்திப்பதில்லை. இதேவேளை, ஒரு செய்தி பிரசுரிக்கப்படும் போது அச்செய்தி எழுதப்பட்ட மொழி நடை, அது பிரசுரிக்கப்பட்ட இடம், அது செய்திக்குக் கொடுக்கப்பட்ட இடம், அச்செய்தி பிரசுரிக்கப்படும் காலப்பகுதி என்பன அச்செய்தியின் உள்ளடக்கத்தைவிட கூடிய தாக்கம் செலுத்துகின்றன. உதாரணமாக இஸ்ரேலிய, பலஸ்தீன பத்திரிகைகளை எடுத்துப் பார்த்தால் பலஸ்தீனப் போராளி ஒருவர் இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தினால் அச் செய்தியை இஸ்ரேலிய பத்திரிகைகள் முன்பக்கத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என கொட்டை எழுத்தில் வெளியிட்டு வழியில் இரத்தமும் சதையும் சிதறிக்கிடக்கும் புகைப்படத்தை வர்ணத்தில் பெரிதாக வெளியிட்டிருக்கும். ஆனால் அச் செய்தியில் தாக்குதலில் உயிரிழந்தவர்களைப் பற்றி இருக்குமே தவிர தாக்குதல் நடத்தியவர் பற்றி எதுவுமே இருக்காது. இதேநேரம், இச்செய்தி பலஸ்தீன ஊடகங்களில் சொல்லப்பட்டவர்களைப் பற்றி எதுவும் குறிப்பிடாது, தாக்குதல் நடத்தியவர் யார், அவரது குடும்பத்தில் எத்தனை பேர் இதுவரை இஸ்ரேலிய படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு இஸ்ரேலியரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களுடன் பிரசுரிக்கப்பட்டிருக்கும். இதேநேரம், இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் பலஸ்தீனர் ஒருவர் உயிரிழந்திருந்தால் அச் செய்தி இஸ்ரேலிய ஊடகங்களில் உட்பக்கங்களில் எங்கோ ஒரு மூலையில் சிறிய செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருக்கும். அதுவும் பலஸ்தீனர் தாக்குதல் நடத்த முற்பட்டபோது பாதுகாப்பிற்காக படையினர் சுட்டனர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். இங்கு ஒரே செய்தியை ஒவ்வொருவரும் தமக்கேற்றவகையில் வடிகட்டி தமக்கு சார்பானவற்றை மட்டும் பிரசுரித்திருப்பதை அவதானிக்கலாம். ஆனால் இவ்வாறான நிலை வளர்வதற்கு ஊடகங்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. நமது பெற்றோர், ஆசிரியர்கள் மதத் தலைவர்கள் ஆகியோரும் பெரும் பங்கு வகிக்கின்றனர். நான் சிறுவனாய் இருக்கும் போது உணவு உண்ண மறுத்தால் அல்லது வீட்டிற்கு வெளியே விளையாடினால, உணவை உண், உள்ளே வா இல்லையெனில் யூதர் வந்து உன்னைப் பிடித்துச் சென்று விடுவார்கள் என பயமுறுத்துவர். ஆனால் நான் வளர்ந்த பின் ஆராய்ந்து பார்த்ததில் 1948 ம் ஆண்டிலிருந்து இன்றுவரை இக் காரணங்களுக்காக யூதர்களால் எந்தவொரு பலஸ்தீனியர்களும் கடத்திச் செல்லப்பட்டதாகத் தெரிய வரவில்லை. எனவே, நாம் ஒரு செய்தியை எழுதும்போது அதே விடயத்தை மறு தரப்பு எவ்வாறு நோக்குகிறது என்பதையும் கவனத்தில் எடுப்பது அவசியம். ஏனெனில் எமக்குச் சார்பான ஒரு செய்தியை எழுதும் போது மறு தரப்பு எம்மை இரையாக்க முயற்சிப்பதாகவும் அதை எமது தரப்பு முறியடித்து விட்டதாகவும் எண்ணும் வகையிலான வெற்றிக் களிப்புடனேயே செய்தியை வெளியிடுகிறோம். ஆனால் மக்களின் அபிப்பிராயத்தைத் தோற்றுவிப்பதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. எனவே ஊடகங்கள் எப்போதும் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டுமேயொழிய பிரச்சினையை வளர்க்கும் வகையில் வெளியிடக் கூடாது. ஈராக்கிற்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்தில் அமெரிக்க பத்திரிகையாளர்கள் அமெரிக்கப் படையினருடன் ஒன்றாகவே பயணம் செய்து செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் அமெரிக்கப் படையினரின் ஷெல் புறப்படும் இடத்தின் நிலைமை பற்றி அறிக்கையிட்டார்களே தவிர, அந்த ஷெல்லிலிருந்து வெடிக்கும் இடத்தில் ஏற்பட்ட அவல நிலைமை பற்றி அறிக்கை விடவில்லை. இதனால் தான் 60 சதவீதத்திற்கும் அதிகமான அமெரிக்க மக்கள் இந்த யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். இதேவேளை, இப்போது பலஸ்தீனப் பகுதிகளில் இருந்து யூதக் குடியேற்றங்கள் வாபஸ் பெறப்படுகின்றன. இதை அறிக்கையிடும் போது யூதர்களை நம்ப முடியாது. அவர்கள் மீண்டும் எம பா.பார்த்திபன்
|