பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow இலங்கைக்கான நிதி உதவித் திட்டங்கள் முடக்கம்: யேர்மனி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இலங்கைக்கான நிதி உதவித் திட்டங்கள் முடக்கம்: யேர்மனி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 15 October 2006

இலங்கைக்கான நிதி உதவித் திட்டங்களை முடக்குவதாக யேர்மனி அறிவித்துள்ளது.

யேர்மனியின் பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஹெய்டி விக்ஜொரெக் ஜியொல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் அமைதி ஏற்படாமல் எதுவித அபிவிருத்தியும் உருவாகப் போவதில்லை.

அமைதி முயற்சிகள் மீளத் தொடங்கும் வகையில் தமிழர் பகுதிகளில் செயற்படுத்தப்பட இருந்த 38 மில்லியன் யூரோ மதிப்பிலான திட்டங்கள் முடக்கப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட நிலையில் தமிழர் பகுதிகளில் பாதுகாப்புக் காரணங்களால் முன்னைய திட்டங்கள் பாதிக்கப்பட்டன.

இருதரப்பினரும் உடனடியாக பேச்சுக்களுக்குத் திரும்ப வேண்டும். இலங்கை மக்களுக்கான நிதி உதவிகள் சென்றடையாத நிலையில் மேலதிக செயற்திட்டங்கள் அர்த்தமற்றது.

சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான பிரச்சனைக்கு இராணுவ வழித் தீர்வு தீர்வாகாது. கடந்த ஆண்டு வெடித்த வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் இடம்பெயர்ந்தும் உள்ளனர்.

பேச்சு மேசைக்குத் திரும்ப வேண்டும் என்று இணைத் தலைமை நாடுகள் விடுத்த வேண்டுகோள் நிறைவேற்றப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..