|
சிறிலங்கா அரசாங்கத்துக்கு சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கில் சர்வதேச அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த சட்ட ஆலோசகர் ஜேம்ஸ் ரோஸ் இது தொடர்பில் கூறியதாவது:
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு ஆணையம் அமைப்பதை சிறிலங்கா அரச தலைவர்
மகிந்த ராஜபக்ச முன்னர் வரவேற்றிருந்தார்.
ஆனால் தற்போது உள்நாட்டு
ஆணையத்தை அமைக்க உள்ளது.
கடந்த கால எந்த ஒரு வன்முறை தொடர்பிலான விசாரணைகளையும் அரசாங்கம்
அக்கறையோடு நடத்தவில்லை.
உள்நாட்டு நிர்வாக அமைப்புக்கள் செயற்படவில்லை
என்பதையே இது வெளிப்படையாகக் காட்டியது.
உள்நாட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவானது பல்வேறு வன்முறைகள் தொடர்பில்
விசாரணைகளை மேற்கொண்டாலும் அதில் தாக்கமானது எதுவும் நிகழவில்லை.
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்துடன்
சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினர் சிறார்களை
படையணிகளில் சேர்ப்பது குறித்து அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டும்.
தங்களது பிரதேசத்தில் படையணிகளில் சிறார் சேர்ப்பு குறித்து
அரசாங்கத்துக்கு நன்கு தெரியும்.
ஆனால் சிறிலங்கா இராணுவத்தினர் அதனை
கண்டுகொள்வதில்லை.
இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக செயற்படவேண்டும்.
சிறிலங்கா மனித
உரிமைகள் ஆணையமும் முறையாகச் செயற்படவில்லை.
அதிகரித்து வரும் வன்முறைகளை
அது கட்டுப்படுத்தவில்லை என்றார் அவர்.
|