|
யாழ்ப்பாணக் குடாநாட்டில் இலங்கை இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட தோல்வி கண்ட தாக்குதல்இ புதன்கிழமையன்று முகமாலை மற்றும் கிளாலிக்கு அருகில் முன்னேறிய துருப்புக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பின்வாங்கச் செய்த நிலையில் அரசாங்கப் படையில் பெரும் உயிரிழப்புக்களை விளைவாக்கியுள்ளது.
யுத்த விமானங்கள் மற்றும் கடற்படை பீரங்கிப் படகுகளின் உதவியுடன் நடந்த தரைத் தாக்குதல்கள், குடாநாட்டின் தென் பகுதியில் புலிகளின் பிரதான நிலைகளை இலக்காகக் கொண்டிருந்தன.
கடந்த மூன்று மாதங்களில் இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் அரசாங்கம் தொடுத்த ஏனைய தாக்குதல்களைப் பொறுத்தளவில்இ தமது தாக்குதல்கள் முற்றிலும் தற்காப்புக்கானது என இராணுவம் கூறிக்கொண்டது. பாதுகாப்புப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்கஇ இராணுவம் புலிகளின் பிரமாண்டமான தாக்குதலை வெற்றிகரமாகத் தோற்கடித்ததாகவும் நூற்றுக்கணக்கான புலிப் போராளிகளை கொன்றதாகவும் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஆரம்பத்தில் வெறும் 22 அரசாங்கப் படைகளே உயிரிழந்துள்ளதாகவும் 110க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் கதை விரைவில் நொருங்கிப் போனது. வியாழன் மாலை அளவில்இ 55 சிப்பாய்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு மேலும் 78 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 283 காயமடைந்துள்ளதாகவும் சமரசிங்க ஏற்றுக்கொண்டார். இந்த புதிய எண்ணிக்கைஇ புலிகளின் கூற்றுடன் மிகவும் நெருக்கமாக ஒத்ததாக உள்ளது. தாம் ஒரு மிகப்பெரும் இராணுவத் தாக்குதலை தோற்கடித்ததாகவும் 200க்கும் மேற்பட்ட துருப்புக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் புலிகள் தெரிவித்திருந்தனர்.
75 சிப்பாய்களின் சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக அனுப்பிவைக்க புலிகள் தாயாராகிக் கொண்டிருப்பதையும் சமரசிங்க அங்கீகரித்தார். அவர் வெளிப்படையான உண்மையை விளக்கவில்லை: இராணுவம் "தற்காப்பு" நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் புலிகள் ஏன் தமது பிராந்தியத்தில் இருந்து சடலங்களை கையளிக்கின்றனர்? புலிகளும் சமன்த வீரசிங்க என்ற 18 வயது சிப்பாயை கைதுசெய்துள்ளனர்.
2002 யுத்த நிறுத்த உடன்படிக்கையை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழு பத்திரிகைகளுக்கு கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது: "புலிகள் 75 துருப்புக்களின் சடலங்களை கண்டெடுத்திருந்தால்இ எதிரிகளின் "எச்சரிக்கைகளுக்கு" மத்தியிலும் எதிரிகள் பிரதேசத்திற்குள் இராணுவம் ஒரு புதிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது என்பதையே காட்டுகிறது."
முழு பிரச்சாரத்தைப் பொறுத்தளவில்இ இராணுவ ஸ்தாபனத்தின் மனநிலை துயரார்ந்ததாக உள்ளது. ஏ.எஃப்.பி. செய்திச் சேவைஇ உயர்மட்ட பாதுகாப்பு ஆதாரத்தில் இருந்து மேற்கோள் காட்டி தெரிவித்ததாவது: "இராணுவம் பெருந் தோல்வியைக் கண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.... அது ஒரு பெரும் தவறாக இருந்தது." இன்னுமொரு செய்தியும் இராணுவ உயர்மட்ட ஆதாரத்தில் இருந்து மேற்கோள் காட்டியிருந்தது. கடுமையான எதிர்த் தாக்குதல்களுக்கு முகங்கொடுத்த நிலையில் இராணுவம் தாக்குதலை கைவிடத் தள்ளப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷஇ "சிப்பாய்களின் தேவைகளை நிரப்புமாறு அனைத்து வைத்தியசாலைகளுக்குமான அமைச்சர்களுக்கு" கட்டளையிட்டிருந்ததை குறிப்பிட்ட ஏ.எஃப்.பி. செய்தியும் அரசாங்கத்தின் கவலையை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஜூலையில் கிழக்கில் மாவிலாறு பிரதேசத்தில் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு எதிராக இராணுவம் தனது முதல் தாக்குதலைத் தொடுத்ததில் இருந்துஇ இராணுவம் மோதல்கள் சம்பந்தமான செய்திகளை தணிக்கை செய்ய முயற்சித்து வந்துள்ளது. எவ்வாறெனினும்இ உயிரிழப்புக்கள் குவிந்து வருகின்ற நிலையில் புதுப்பிக்கப்பட்ட யுத்தம் இராணுவத்திற்குள் அதிருப்தியை உருவாக்கிவிட்டுள்ளதற்கான வளர்ச்சி கண்டுவரும் அறிகுறிகள் உள்ளன.
கடந்த வெள்ளியன்றுஇ கிழக்கு மாவட்டமான மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டிலான மாங்கேணி பிரதேசத்தை கைப்பற்றிய இராணுவம் இன்னுமொரு பெரும் நடவடிக்கையை முன்னெடுத்தது. புலிகளில் இருந்து பிரிந்து சென்ற துணைப்படையான கருணா குழுவில் 80 பேருடன் சேர்ந்து 300 அரசாங்கத் துருப்புக்கள் இந்த இராணுவ நடவடிக்கையில் பங்குபற்றியதாக கைதுசெய்யப்பட்ட சிப்பாயான ஆர்.எம்.எஸ். ரட்னாயக்க கண்காணிப்புக் குழு அலுவலர்களிடம் தெரிவித்தார். பாதுகாப்புப் பேச்சாளர் கருணா குழுவுடன் அல்லது ஏனைய தமிழ் துணைப் படைகளுடன் எந்தத் தொடர்பும் கிடையாது என மீண்டும் மீண்டும் நிராகரித்தார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நடந்த புதிய தாக்குதல்களின் குறிக்கோள் தெளிவானது. 2000 ஆண்டில் ஆனையிறவு இராணுவ தளத்தைப் புலிகள் கைப்பற்றியபோதுஇ தசாப்த கால நாட்டின் உள்நாட்டு யுத்தத்தில் இராணுவம் கடுமையான பின்னடைவைக் கண்டது. இந்தத் தளம் குடாநாட்டுக்கான பிரதான நுழைவாயிலாகும். ஆனையிறவு கைப்பற்றப்பட்டமையானது யாழ்ப்பாணத்தை நோக்கியும் மற்றும் குடாநாட்டின் வடக்கில் ஏனைய இராணுவத் தளங்களை நோக்கியும் புலிகள் துரிதமாக முன்னேற வழிவகுத்தது. இந்தவாரம் இராணுவம் தொடுத்த தோல்விகண்ட நடவடிக்கைஇ ஆனையிறவை மீண்டும் கைப்பற்றும் முயற்சியாகும்.
ஜெனீவாவில் அக்டோபர் 28-29ம் திகதிகளில் திட்டமிடப்பட்டுள்ளவாறு சமாதானப் பேச்சுக்களின் மூலம் மோதல்களுக்கு முடிவுகட்ட எதிர்பார்ப்பதாக அரசாங்கம் கூறிக்கொள்வதை இந்தத் தாக்குதல் கேலிக்கூத்தாக்கியுள்ளது. ஜெனீவா பேச்சுக்கள் சம்பந்தமாக நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரஸ்கருடன் செல்வாயன்று கலந்துரையாடிய போதுஇ இராணுவம் முகமாலைக்கு அருகில் துருப்புக்களையும் டாங்கிகளையும் நகர்த்திக்கொண்டிருப்பதாக புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வன் முறைப்பாடு செய்தார். இராணுவம் தனது ஆத்திரமூட்டல் தாக்குதலை முன்னெடுக்குமானால் புலிகள் பேச்சுவார்த்தையில் தமது பங்களிப்பைப் பற்றி சிந்திக்கவேண்டி வரும் என அவர் எச்சரித்தார்.
திங்களன்றுஇ அமெரிக்கஇ ஐரோப்பியஇ ஜப்பான் மற்றும் நோர்வே தூதுவர்களுடன் பேசிய போதுஇ ஜனாதிபதி இராஜபக்ஷஇ "அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு அர்ப்பணித்துக்கொண்டிருந்த போதிலும்இ பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தக்க எதிர் நடவடிக்கை எடுக்கத் தள்ளப்பட்டுள்ளது" என மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். ஒவ்வொரு இராணுவ தாக்குதலையும் "தற்காப்புக்காக" என கூறிக்கொண்ட இராஜபக்ஷவின் சொற்கள் பெறுமதியற்றவை. அரசாங்கத்திற்கு நன்நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் இல்லை என்பதற்கான மேலும் ஒரு அறிகுறியே இந்தவாரத் தாக்குதலாகும்.
இந்தத் தாக்குதலின் குறிக்கோள்இ அரசாங்கப் பேச்சுவார்த்தையாளர்களின் கைகளைப் பலப்படுத்துவதும் மற்றும் புலிகளை குறிப்பிடத்தக்க விட்டுக்கொடுப்புகளை செய்யுமாறு நெருக்குவதுமாகும். கடந்த வார சண்டே டைம்ஸ் பத்திரிகையின் "நிலவர அறிக்கை"இ அரசாங்கத்துடன் உயர்மட்ட பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள இராணுவத் தளபதிகள்இ எந்தவொரு சமாதானப் பேச்சிலும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. "இராணுவத்தின் வெற்றிகள் பாதுகாக்கப்படுவதோடு தேசிய பாதுகாப்பு நலன்களை மேலும் ஆபத்திற்குள்ளாக்க கெரில்லாக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இராணுவ உயர் மட்டத்தினர் உறுதியாக இருக்கின்றனர். புலிகள் 'மீண்டும் ஒன்று சேர்ந்துஇ மீண்டும் ஆயுதபாணியாகி மேலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்த உள்ளதாக அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்இ" என அந்த பத்தி தெரிவித்துள்ளது.
நோர்வே தூதுவர் பிரட்ஸ்கர் மற்றும் விசேட தூதுவர் ஜோன் ஹன்சன் பவர் ஆகியோருடன் அக்டோபர் 3 நடந்த கலந்துரையாடலில்இ இராணுவத் தளபதி சரத் பொன்சேகாஇ புலிகள் தமது பலத்தை எப்போது காட்டினாலும் அதற்கு எதிராக இராணுவம் காத்திமான நடவடிக்கை எடுக்கும் என பிரகடனம் செய்தார். "இராணுவத்தைப் பொறுத்தளவில்இ பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னெடுக்கும் புலிகளின் இயலுமையை எங்கெல்லாம் கட்டுப்படுத்த வேண்டுமோ அங்கெல்லாம் அவர்கள் தமது வலியத் தாக்கும் நடவடிக்கையை மேற்கொள்வார்கள்" என்று அவர் குறிப்பிட்டதுடன்இ புலிகள் பலவீனமடைந்திருப்பதாகவும் இராணுவம் புலிகளுக்கு "ஒரு புத்தியிர்ப்பை" வழங்கத் தயாரில்லை எனவும் பொன்சேகா பிரகடனம் செய்தார்.
இந்தவாரம் இராணுவத்தை பின்வாங்கச் செய்தமை ஜெனீவா சமாதானப் பேச்சுக்களின் மேலும் உந்துதலைக் கொடுக்கும் என புலிகள் சந்தேகத்திற்கிடமின்றி நம்புவர். "புலிகளின் பிராந்தியத்தினுள் இராணுவம் மேற்கொண்ட தாக்குதல் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை அவமதித்துள்ளதுடன் வன்முறைகளைக் கைவிட்டு பேச்சுக்களில் ஈடுபடுமாறு இணைத் தலைமை நாடுகள் விடுத்த அழைப்பையும் ஓரத்தில் துடைத்துக்கட்டியுள்ளதுஇ" என புலிகளின் பேச்சாளர் இராசையா இளந்திரையன் நேற்றுத் தெரிவித்தார். இது அதிகாரப் பரவலாக்கல் உடன்படிக்கை ஒன்றுக்காக இராஜபக்ஷ அரசாங்கத்தை நெருக்குமாறு பெரும் வல்லரசுகளுக்கு விடுக்கும் இன்னுமொரு பயனற்ற வேண்டுகோளாகும்.
குறிப்பிடத்தக்க வகையில்இ அரசாங்கத்தின் தாக்குதல் தோல்வியடைந்த செய்திகளுக்கு மத்தியில்இ அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் சீன் மெக்கொமக் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கை சமாதானப் பேச்சுக்களை வரவேற்றபோதிலும்இ "தற்போது இலங்கையில் நடைபெறும் வன்முறைகள் உடன்படிக்கையை ஆபத்தில் தள்ளியுள்ளதையிட்டு அமெரிக்க ஆழமாக கவலையடைந்துள்ளது" என பிரகடனம் செய்தது. சமாதானம் பற்றி நேர்மையாக அக்கறை செலுத்துவதற்கு அப்பால்இ வாஷிங்டன் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷ அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்திற்கு மௌனமாக ஆதரவளித்தது. நடவடிக்கைகள் திட்டமிட்டபடி இடம்பெறவில்லை என்பதையிட்டு மட்டுமே அது "கவலையடைந்துள்ளது."
அரசாங்கத்தின் உண்மையான திட்டங்கள் 2007ம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அம்பலத்திற்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான இராணுவச் செலவு 96 பில்லியன் ரூபாயில் இருந்து 139.6 பில்லியன் ரூபாய்கள் வரை 45 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டம் ஏற்கனவே இந்தாண்டு 76 பில்லியன் ரூபாயில் இருந்து 96 பில்லியன் ரூபாய்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இது யுத்தம் உக்கிரமடைந்த பின்னர் ஏற்பட்ட அதிகரிப்பாகும்.
வேலை மற்றும் அத்தியாவசிய சேவைகள் இழப்புஇ அதே போல் அதிகரிக்கும் உயிரிழப்பின் ஊடாக இராஜபக்ஷவின் யுத்தத்தின் சுமைகளை சாதாரண உழைக்கும் மக்கள் சுமக்கத் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது.
நெருடல் இணையம்
|