|
வடக்கு கிழக்கை பிரிக்கும் நீதிமன்றத் தீர்ப்பு இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்! பழ.நெடுமாறன் |
|
|
|
Friday, 20 October 2006 |
|
வடக்கு கிழக்கு இணைப்பு செல்லுபடியாகாது என்று இலங்கை உயர்நீதிமன்றம் அறிவித் துள்ள தீர்ப்பு ஈழத்தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல.அது இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட அறைகூவலாகும்.இவ்வாறு ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் தமிழ் ஈழ. விடுதலை ஆதரவா ளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன்.அவர் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ராஜீவ் காந்தி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒப்பந்தத்தின் படி இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டமை செல்லுபடியற்றது என்று இலங்கை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஈழத்தமிழர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட சவாலும் ஆகும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பு குறித்து இலங்கை அரசு நாடாளு மன்றத்தில் சட்டம் கொண்டுவந்தால் அதை ஆதரிப்போம் என்று இலங்கை ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். எனவே, இந்தியா இதில் தலையிட்டு உடனடியாக இணைப்புச் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவரும்படி இலங்கை அரசை வற்புறுத்தவேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கேட்டுக்கொள்கிறோம். இப்படி அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நெருடல் இணையம்
|