பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow முகங்கள் ஐந்து - இலங்கைப் பிரச்சினையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

முகங்கள் ஐந்து - இலங்கைப் பிரச்சினையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 24 October 2006

ராஜீவ்காந்தியின் தோற்றுப்போன வெளிவிவகாரக் கொள்கையை இந்தியா இனிமேலாவது கைவிட முன்வரவேண்டும்.

neduramanபழ. நெடுமாறன் (தலைவர் - தமிழர் தேசிய இயக்கம்)

இந்திராகாந்தி காலத்தில் இலங்கையின் இனப்பிரச்சினையை அணுகுவது தொடர்பான வெளியுறவுக் கொள்கை ஈழத் தமிழர்களின் நலன்களையும், இந்தியாவின் பிராந்திய நலன்களையும் கருத்தில் கொண்டு வகுக்கப்பட்டிருந்தது. 1983 ஆம் ஆண்டு கொழும்பில் வெடித்த இனக் கலவரத்தின்போது இந்திராகாந்தி உடனடியாக வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவையும், அந்தத் துறைக்கு ஆலோசகராக இருந்த ஜி. பார்த்தசாரதியையும் இலங்கைக்கு அனுப்பினார். இவர்கள் மூலம், உடனடியாக கலவரம் நிறுத்தப்பட வேண்டும், இல்லாவிடில் இந்தியா தலையிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். உடனே கலவரம் நின்றது. இந்திராகாந்தி பார்த்தசாரதியின் மூலம் வட்டமேசை மாநாடு ஒன்றை ஒழுங்கு செய்தார். இதில், ‘Annexer-C’  என்ற திட்டம் வகுக்கப்பட்டு ஜே. ஆர். ஜெயவர்த்தனாவை நிர்ப்பந்தப்படுத்தி ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டது.
ஆனால் இந்திராகாந்தி இறந்து ராஜிவ்காந்தி பிரதமரானதும். ஜே. ஆர், ‘யுnநெஒரசந ஊ’ திட்டத்தை ஏற்கமாட்டோம் என அறிவித்தார். அது மட்டுமல்லாமல் ஷஇந்தியா டுடே| பத்திரிகைக்கு ஜே. ஆர் கொடுத்த பேட்டியில் “எனக்கு 47 வயது அரசியல் அனுபவம் இருக்கிறது. இந்தியாவின் பிரதமர் ராஜீவுக்கு வயதே 47 தான்” என்றார். நீ ஒரு கத்துக்குட்டி என்று சொல்லாமல் சொன்னார். எவ்வளவு பெரிய அவமானம் இது. திறமையும் அனுபவமும் குறைந்தவர் ராஜீவ்காந்தி என்பதை உணர்ந்து கொண்ட சிங்கள அரசு துணிந்து செயற்பட்டது. ராஜிவ்காந்தியின் கொள்கை வகுப்பாளர்களாக இருந்தவர்களும் அவருக்குத் தவறான வழியைக் காட்டினார்கள். ஜெயவர்த்தனா வஞ்சக வலையை விரித்து அதில் ராஜிவ்காந்தியை விழவைத்தார். ராஜிவ் - ஜெயவர்த்தனா உடன்பாடு ஏற்பட்டது. அந்த உடன்பாட்டை ஈழத் தமிழர்கள் ஏற்கவில்லை. சிங்களவர்களும் ஏற்கவில்லை. இந்தியப் படை இலங்கையை விட்டு அவமானத்துடன் வெளியேறியது.

ராஜீவ்காந்தியின் இந்த அணுகுமுறையால் இந்தியாவின் பிராந்திய நலன்களேனும் பாதுகாக்கப்பட்டதாவென்றால் அதுவும் இல்லை. சிங்கள அரசு திருகோணமலையில் இருந்த எண்ணெய்க்குதங்களை அமெரிக்காவுக்கு குத்தகைக்கு கொடுக்க முன்வந்த போதும், ஷவாய்ஸ் ஆப் அமெரிக்கா| வானொலி தளம் அமைக்க இடம் வழங்க முன்வந்த போதும் இந்திராகாந்தி அவற்றில் தலையிட்டார். இந்துமாகடலில் எந்த அந்நிய வல்லரசின் தளம் அமைக்கப்பட்டாலும் அது இந்தியாவுக்கு எதிரான செயலாகவே கருதப்படும், அதை இந்தியா ஒரு போதும் அநுமதிக்காது என்று நாடாளுமன்றத்தில் எச்சரித்தார். இதன் விளைவாக சிங்கள அரசும் அமெரிக்காவும் பின்வாங்கின. இந்திராகாந்தியின் காலம் வரையில் எந்த ஒரு அந்நிய சக்தியும் இலங்கையில் காலடிவைக்கத் துணியவில்லை. ஆனால் ராஜீவ்காந்தி பொறுப்பேற்றதும் நிலைமை அடியோடு மாறியது. இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த 1948 இல் இருந்து பாகிஸ்தானின் ஜனாதிபதி எவரும் இலங்கைக்குப் போனதில்லை. ராஜிவ்காந்தி பிரதமரானதும் அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி இலங்கைக்குப் போனார். பதிலுக்கு ஜே. ஆர் ஜெயவர்த்தனாவும் பாகிஸ்தான் போய், ||கா~;மீர் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை உண்டு. அதை நான் ஆதரிக்கிறேன்|| என்று பேசினார். இந்திராகாந்தி இருந்திருந்தால் இந்தத் துணிச்சல் வந்திருக்குமா? அதன் பிறகுதான் பாகிஸ்தானும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு சிங்கள அரசுக்கு ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கத் தொடங்கின. ஈழத்தமிழர்களைக் கொன்று குவிப்பதற்காக மட்டுமல்ல ; இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையை உபயோகிக்க வேண்டும் என்பதற்காகவும்தான் இவ்வளவு ஆயுதங்களைக் கொடுக்கின்றன.

இந்தியாவின் வடக்கு எல்லையில் சீனாவும், மேற்கு எல்லையில் பாகிஸ்தானும் இருப்பதால் வட இந்திய மாநிலங்களில் பாதுகாப்புத் தொடர்பான தொழிற்சாலைகளை அமைப்பதற்கு இந்தியா விரும்புவதில்லை. முக்கியமான ஆயுதத் தொழிற்சாலைகளையெல்லாம் தென் இந்தியாவிலேயே நிறுவியிருக்கிறது. இதனால்தான் இதுவரையில் தென் இந்தியாவில் பாகிஸ்தானின் துணைத் தூதரகம் அமைக்க இந்தியா ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், இலங்கையை தென்இந்தியாவில் தனது நடவடிக்கைகளுக்குரிய களமாக மாற்றுகின்ற நோக்கத்துடனேயே பாகிஸ்தான் இலங்கையுடன் கைகோர்த்துக் கொண்டு செயற்படுகிறது. இலங்கையில் பாகிஸ்தானின் தூதுவராக இப்போது இருப்பவர் சேக் சட் அஸ்லம் சவுத்திரி. இவர் பாகிஸ்தான் விமானப்படையின் துணைத்தளபதியாக இருந்து அண்மையில் ஓய்வு பெற்றவர். இவருக்கு முன்னால் தூதுவராக இருந்தவர் பசீட் வாலி முகமட். இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ். ஐயின் இயக்குநராக இருந்தவர். இப்படிப் பெரிய அதிகாரிகளை பாகிஸ்தான் தூதுவர்களாக அனுப்புகிறதென்றால் இதன் பின்னால் எவ்வளவு சதிகள் இருக்க வேண்டும். ஆனால் தென்வாயிலில் தனக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தைப் புரிந்து கொள்ளாமல் இந்தியாவும் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.

எல்லாவகையிலும் அபத்தமான இந்தக் கொள்கையைத்தான் இந்தியா கடந்த பதினெட்டு வருட காலமாக கடைப்பிடித்து வருகிறது. ராஜிவ்காந்தியின் தோற்றுப் போன இந்த வெளிவிவகாரக் கொள்கையை இந்தியா இனிமேலாவது கைவிட முன்வர வேண்டும். மீண்டும் இலங்டகையுடன் இந்திராகாந்தி காலத்து வெளியுறவுக் கொள்கையை இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். இது இந்தியாவின் நலன்களுடன் ஈழத் தமிழர்களின் நலன்களையும் சேர்த்தே பாதுகாக்கும்.

nerudal_sachithamanban இலங்கையில் இரண்டு மாநிலங்கள், இரண்டுக்கும் தனித்தனியான படைகள்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்


தமிழ்நாட்டில் உணர்வு ப+ர்வமாக பல தலைவர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதை வைத்து இந்தியா எங்களைக் கைவிடாது, எங்களுக்கு ஏதாவது செய்யும் என்ற எண்ணம் பெரும்பாலான ஈழத்தமிழர்களிடம் இருக்கிறது. எங்களுடைய அரசியல் பலவீனமே அப்படி நினைத்ததுதான்.உண்மையில், டெல்லியின் கண்ணோட்டம் ஈழத்தமிழர்களுக்கு சார்பானதாக இல்லை.

இலங்கையை டெல்லி ஒரு சுண்டக்காய் நாடாகவே பார்க்கிறது. கடற்படையினர் இதுவரை எத்தனை இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்றிருப்பார்கள்? இராமேஸ்வரம் பாம்பன் தீவுக்கு வந்து ஓலைக்குடா என்ற கிராமத்தின் குடிசைகளையெல்லாம் எரித்துவிட்டுப் போனார்கள். இந்தியாவின் ஒரு துப்;பாக்கிச் சூடு இதையெல்லாம் முடிவுக்குக் கொலண்டுவந்திருக்க முடியும். ஆனால் இந்தியா அப்படிச் செய்யவில்லை. சேது சமுத்திரத் திட்டத்துக்கு இலங்கையில் எவ்வளவு கடுமையான எதிர்ப்பு இருந்தது. இந்தியா காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. ஏன்? இவர்களுக்கு இலங்கை ஒரு பொருட்டாகவே இல்லை. இலங்கை ஒரு சிறிய நாடு மட்டுமல்ல ; பக்கத்தில் வேறு எந்த நாடுகளும் இல்லாத ஒரு தனித்தீவு. இதனால், இலங்கை தன் கையை விட்டுப் போகாது, எப்படியும் கடைசியில் தன்னிடம்தானே வந்தாக வேண்டும் என்று நினைப்பில் இலங்கைப் பிரச்சினைகளில் அதிகம் அக்கறை கொள்ளாமல் இருக்கிறது.

இலங்கையின் இனப்பிரச்சினையைப் பற்றி விளக்கமாகத் தெரிந்த தலைவர்கள் குறைவு. லல்லுபிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், அத்வானி போன்ற பெரிய தலைவர்கள் பலருக்கே ஈழத்தமிழர்கள் இலங்கையின் ப+ர்வீக குடிகள் என்று தெரியாது. இந்தியாவில் இருந்துபோன தமிழர்கள் சிங்களவர்களுடன் ஏன் வீணாக சண்டைபோட வேண்டும் என்பதே இவர்களுடைய கண்ணோட்டமாக இருக்கிறது. இந்தப் பிரச்சினையைச் சரியாகப் புரிந்து கொண்டு அணுக முற்பட்ட ஒரே தலைவர் இந்திராகாந்திதான். இவருக்கு முன்பும் ஒருவரும் இல்லை. பின்பும் ஒருவரும் இல்லை. 1960 ஆம் ஆண்டு தமிழர்கள் சத்தியாக்கிரகம் இருந்தபோது, உள்நாட்டு விவகாரங்களில் சத்த்pயாக்கிரகம் தேவையற்றது என்று நேரு சொன்னார். குஜ்ரால் இந்திராகாந்தியின் சீடர். இவர், ஷஅண்டை நாடுகளின் அரசுகள் என்ன செய்கிறதோ அதை நாங்கள் ஏற்றுக் கொள்வோம். அரசுகளுக்கு எதிரான இயக்கங்கள் இந்தியாவில் தளம் அமைக்க விடமாட்டோம்ஷ என்று முழுக்க, முழுக்கத் தலைகீழான நிலையை எடுத்தார். மன்மோகன் சிங் அதிகாரிகள் சொல்வதை ஏற்றுக் கொள்ளவார்.

அதிகார வர்க்கங்களை இலங்கை அரசு விலைக்கு வாங்கக் கூடியது ராஜீவ் காந்தி காலத்தில் வெளியுறவுச் செயலராக இருந்தவர் ரொமே~; பண்டாரி. நவரத்தினப் பரிசு கொடுத்து ஜே. ஆர் இவரைத் தன்னுடைய வழிக்குக் கொண்டு வந்தார். 1940களில் அரசியலமைப்பை உருவாக்கிய போதே இப்படித்தான் நடந்தது. சோல்பரி அழகான பெண்களை விரும்புவார். பெண்களை அனுப்பி அரசியலமைப்பைத் தங்களுக்கு சார்பாக எழுதி வாங்கிக் கொண்டார்கள். சோல்பரியின் மகன்; பிரமச்சாரியாக செங்கலடியில் உள்ள யோகர் சுவாமிகளின் ஆச்சிமரத்தில் நீண்ட காலம் இருந்தார். தந்தையின் பாவத்தைத் தீர்ப்பதற்காகத்தான் மகன் இப்படியானார் என்று சொல்லுவார்கள்.

இந்தியா தன்னுடைய மாநிலங்களுடன் எப்படி நடந்து கொள்கிறது என்பதையும், பார்க்கவேண்டும். ஒக்டோபர் 1,2006 இல் இந்தியா முழுக்க ஒரு சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. அதன்படி மருந்துகளில் அவற்றின் பெயர் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் கட்டாயமாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஹிந்திக்குக் கொடுத்திருக்கிற முன்னுரிமையை மாநில மொழிகளுக்குத் தரவில்லை. இதைத்தானே இலங்கை அரசும் செய்து கொண்டிருக்கிறது. இந்தியா தன்னளவில் செய்யாத ஒன்றை இலங்கையில் எங்களுக்காகச் செய்து தரும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இந்தியா எங்களைக் கண்டு கொள்ளாது என்பதால்தான் பெரியவர் செல்வநாயகம் வட்டுக்கோட்டையில் தனிநாட்டுத் தீர்மானம் கொண்டுவந்தபோது இந்தியாவிடம் ஆலோசனையோ, உதவிகளோ கேட்கவில்லை. ஆனால் அமிர்தலிங்கம் அந்தத் தவறைச் செய்தார். அமிர்தலிங்கம் செல்வநாயகம் மாதிரியோ, பிரபாகரன் மாதிரியோ தீர்க்கதரிசனம் உள்ள ஒரு தலைவர் இல்லை.

இலங்கையில் ஒரு மில்லியன் மக்களுக்கு 8000 பேர் என்ற அளவில் படை இருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் விகிதாசார அடிப்படையில் அதிக படையினரைக் கொண்ட நாடு இலங்கைதான். இந்தப் படை பலத்தைக் கொண்டு புலிகளை ஒடுக்கிவிடலாம் என்று நினைத்தால் அது தவறானது. ஒடுக்க ஒடுக்க மக்கள் பசுக்களாக ஒதுங்கிச் செல்ல மாட்டார்கள். புலிகளாகத்தான் பாய்வார்கள். டெல்லி, ஷஇலங்கையில் இரண்டு மாநிலங்கள் இரண்டுக்கும் தனித்தனியான படைகள்| என்ற புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் மட்டுமே இலங்கையில் அமைதி திரும்பும். இவர்கள் முதலமைச்சராக நியமித்த வரதராஜப் பெருமாளும் கடைசியில் ஷதமிழீழம்தான் தீர்வு| என்று சொல்லி விட்டுத்தானே திரும்பினார். இதற்குப் படைகளை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. தூதரகரீதியான பொருளாதாரரீதியான அழுத்தங்களே இலங்கை அரசை வழிக்குக் கொண்டுவரும். ஆனால் இந்தியா அதைச் செய்யுமா என்பதுதான் பிரச்சினையே.

சம~;டி தீர்வையும் ஸ்ரீPலங்கா நிராகரித்தால் தமிழர்கள் பிரிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்.

suresh சுரே~; பிரேமச்சந்திரன் ( பாராளுமன்ற உறுப்பினர் -  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு)

இந்தியா நூறு கோடிக்கு மேல் மக்கள் தொகையைக் கொண்ட, பல மொழிகளையும் மதங்களையும் கொண்ட, பல்லினச் சமுதாயம் வாழுகின்ற ஒரு நாடு. இன்னும் ஒரு வகையில் கூறுவதாக இருந்தால் இந்தியா என்பது பல தேசங்களைக் கொண்ட ஒரு நாடு. இந்திய அரசியல் சாசனமும் கூட ஷமாநிலங்களின் ஒன்றியம்| என்றுதான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறது. முப்பது மாநிலங்களைக் கொண்ட இந்திய அரசு ஒரு அரைச் சம~;டித்தன்மையைக் கொண்டது. இதனால் கூடுதலான அதிகாரங்கள் கேட்டுப் பல மாநிலங்கள் போராடி வருகின்றன. இந்தியாவுக்கு எல்லைகளாக இஸ்லாமியக் குடியரசுகளான பாகிஸ்தானும் வங்காள தேசமும், கம்ய+னிச நாடான சீனாவும், நேபாளம், ப+ட்டான,; பர்மா போன்ற நாடுகளும் இருக்கின்றன. இந்த நாடுகளிலிருந்து வரக்கூடிய பல்வேறு எல்லைப் பிரச்சினைகளுக்கும், இராணுவ சர்வாதிகாரம,; மன்னராட்சி, கம்ய+னிசம் போன்ற சித்தாந்தங்களுக்கும் இந்தியா முகங் கொடுக்க வேண்டியுள்ளது. இவற்றின் அடிப்படையிலேயே இந்தியா தனக்கான வெளியுறவுக் கொள்கைகளை வகுத்துள்ளது. அவற்றில் ஒன்றுதான், ஷஇலங்கையின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் தாங்கள் அங்கீகரிக்கிறோம்| என்று இந்தியா அடிக்கடி சொல்லிக்கொள்கிற விடயம்..

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தனிநாடுதான் தீர்வாக இருக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் இலங்கையில் பிரிவினை இந்தியாவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என இந்தியா கருதுவதால் ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தீர்வு காணப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்துகிறது. வடக்கு, கிழக்கு பிரதேசம் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் என்பதை 1987 இல் இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அரசு வடக்கு கிழக்கைப் பிரிக்கும் எந்த ஒரு முயற்சியையும் இந்தியா ஏற்றுக்கொள்ளாது. இன்று இந்திய அரசு சர்வதேச நாடுகளும் சம~;டி அரசியலமைப்பு முறைய+டான ஒரு தீர்வைக் கொண்டு வரவே விரும்புகின்றன. அந்த சம~;டி என்பது இந்தியாவில் இருப்பதுபோன்ற அரைகுறைச் சம~;டியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அது மிக அதிகபட்ச உரிமைகளையும், அதிகாரங்களையும் கொண்ட சம~;டி அரசியலமைப்பு முறையாக இருக்க வேண்டும். அவ்வாறான ஒரு தீர்வை நிராகரிப்பதற்கு இந்தியாவுக்கு எந்த முகாந்திரமும் இருக்க முடியாது. ஆனால் இவ்வாறான ஒரு தீர்வை நோக்கி இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் ஒரு வாய்ப்பை அளித்து சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கு ஒரு முழுமையான சம~;டி அரசியலமைப்பு முறையொன்றை வழங்குகின்றதா என்பதை அவதானிப்பதுதான் எங்களது கடைசி முயற்சியாக இருக்கமுடியும். சம~;டிதீர்வையும் ஸ்ரீPலங்கா அரசு நிராகரித்தால் தமிழர்கள்; பிரிந்து போவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொள்ளும் வகையில் நாமும் எமது செயற்பாடுகளை முன்னெடுப்பது அவசியம்.

ராஜீவ்காந்தி கொலைக்குப் பிறகு இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பது இந்தியாவில் குழப்பங்களை உருவாக்கவும், அரசாங்கங்களைக் கவிழ்க்கவும் பாவிக்கப்படுமளவுக்கு முக்கிய பிரச்சினையாக மாறியது. இதனால்தான், இந்தியா இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தனது கண்காணிப்புக்குள் வைத்திருந்தாலும் தூர நின்றே அவதானித்து வந்தது. ஆனால் இன்று அந்த நிலையை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் மேற்கொள்ளும் நெருக்கமான உறவு தன்னுடைய நலன்களைப் பாதிக்கும் என்று கவலைப்படுகின்றது. இதனால் தூர நின்று அவதானிப்பதைத் தவிர்த்து தன்னால் ஆக்கப+ர்வமாக என்ன செய்ய முடியும் என இந்தியா ஆராயத் தொடங்கியிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

இதன் விளைவுகளிலிலான்றாகத்தான் முதலில் முஸ்லீம் காங்கிரஸ் தலைவரையும், தொடர்ந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரையும் டெல்லி அழைத்துப் பேசியது. யுத்த விரிவாக்கத்தை நியாயப்படுத்துகின்ற அரசுடன் சேர்ந்து இயங்குகின்ற குழுக்களையும் சந்தித்தது. இதனை, டெல்லி இலங்கைத் தமிழர்களின் பரந்துபட்ட கருத்துக்களை உள்வாங்க முயற்சிப்பதாகப் புரிந்து கொள்ளலாம். எது எப்படி இருந்தாலும் வட கிழக்கில் இராணுவ பலத்துடன் இருக்கும் விடுதலைப்புலிகளையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் தவிர்த்து எதனையும் செய்துவிட முடியாது. இந்த அடிப்படையில்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் டெல்லி விஜியம் அமைந்தது. கூட்டமைப்பு டெல்லிக்கு அழைக்கப்பட்டதென்பதே முதலாவது டீசநயம வாசழரபா. ஏனெனில் கடந்து 16 வருடங்களாக நீடப்பட்டிருந்த கதவை நாங்கள் திறந்துள்ளோம். இதன் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முடிவுகள் எடுப்பதில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய அதிகாரிகளுடனும், அரசியல் தலைவர்களுடனும் கூட்டமைப்பின் குழுவினர் கலந்துரையாடலை நிகழ்த்தியுள்ளனர். தொடர் சந்திப்புக்கான கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.; இந்தியா தனது பங்களிப்பை அதிகரிக்கும் விதமாக அமைந்துவரும் இந்தச் சூழ்நிலையைத் தமிழ்மக்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த வேண்டும்.

sivathamby விடுதலைப்புலிகள் இல்லை என்றால் இலங்கையில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கான தலைமை வேறு கிடையாது என்பதை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.
பேராசிரியர் கா. சிவத்தம்பி

இந்தியாவில் ஆறு கோடித் தமிழர்கள் வாழ்ந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் அயல் நாடான இலங்கையில் வாழுகின்ற தமிழர் பிரச்சினை ஒரு வெளிநாட்டுப் பிரச்சினையே. இதன் காரணமாக, இவ்விடயத்தை இந்தியா உள்நாட்டுப் பிரச்சினையொன்றைக் கையாளுவது போல கையாளாது. இந்தியாவில் வெளிவிவகாரம் ஒன்றினைத் தீர்மானிப்பதில் மூன்று நிறுவனங்களுக்கு முக்கிய இடமுண்டு. ஒன்று - வெளிவிவகார அமைச்சு. இரண்டு - பாதுகாப்பு அமைச்சு. மூன்றாவது இந்திய வெளிவிவகார விடயங்களை அலசி ஆராய்கின்ற சுநளநயசஉh யனெ யுயெடலளளை றுiபெ – சுயுறு. இந்த மூன்றும் எந்தவொரு தீர்மானத்தையும் இந்திய நலன் என்ற கண்கொண்டே பார்க்கும். இதிலுள்ள முக்கியத்துவம் என்னவென்றால் இந்திய நலன்களைத் தீர்மானிப்பதில் அரசியல்வாதிகளுக்கு இடம்கிடையாது. இந்த உண்மை கிரு~;ணமேனன் காலம் முதல் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் நிலைப்பாடு இந்திய நிலை நின்றே நிர்ணயிக்கப்படுமே தவிர இலங்கையின் விருப்பப்படியோ, இலங்கைத் தமிழரின் விருப்பப்படியோ தீர்மானிக்கப்படாது.

எனவே, இங்கு மேற்கிளம்பும் வினா இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தனது நலன்கள் என்று எவற்றைப் பார்க்கும் என்பதாகும். இந்தப் பிரச்சினையின் புவியல் அம்சம் இந்தியாவை எவ்வாறு பாதிக்கிறது?. இந்தியாவிலுள்ள தமிழர்களை எவ்வாறு பாதிக்கிறது? இலங்கை என்ற அரசியல் அலகினுள் இந்தப் பிரச்சினை பெறும் இடம் - அதாவது இந்திய வம்சாவழித் தமிழரின் பிரச்சினையில் நடந்து கொண்ட முறைமை போன்று இந்தியா இதில் நடக்க முடியுமா? எடுக்கும் நிலைப்பாடுகள் இலங்கை அரசாங்கத்துடனான உறவுகளை எவ்வாறு பாதிக்கும், விடுதலைப்புலிகளும் அவர்களது போராட்டமும் இந்தியாவுக்குள் ஏற்படுத்தக்கூடிய உந்துதல்கள், ஊடாட்டங்கள். விடுதலைப்புலிகளின் தென்னாசிய நிலைப்பட்ட உறவுகளுக்கான சாத்தியப்பாடுகளும் அவற்றுக்கான பதிற்குறிகளும் (சுநளிழளெந) என்று பலவற்றைப் பட்டியலிடாம். இவைதான் இந்தியாவின் நிலைப்பாட்டையும் நிலைப்பாட்டு வெளிப்பாடுகளையும் தீர்மானிக்கின்றன. மேலே கூறியவை மூலம் இந்தியாவுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினை எவ்வாறு ஓர் அரசியல் பிரச்சினையாக, இராஜதந்திர பிரச்சினையாக, பிராந்திய பலப்பிரச்சினையாக உள்ளது என்பது தெரிய வரும்.

இக்கட்டத்தில், இலங்கைத் தமிழர் என்ற நிலையில் இருந்தும் இந்தியா தனது கவனத்திற் கொள்ள வேண்டிய அம்சங்கள் உண்டு என்பதனை தெரியப்படுத்துவது நமது கடமையாகின்றது. இந்தியா விடுதலைப்புலிகளுடான உறவு சிதைந்தமை காரணமாக இந்தப் பரப்பில் மேலதிகமாக சிலரை முன்னிலைப்படுத்த விரும்பலாம். முஸ்லிம்களை கொண்டு வருவதில் நியாயப்பாடு இல்லாமல் இல்லை. ஆனால் அதற்கு மேல், தமிழர்களைக் கொண்டு வருகின்றபோது அவர்களது பிரதிநிதித்துவ வலுவை, அதாவது அவர்களது தலைமையை சாதாரணத் தமிழ் மக்கள் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை இந்தியா கருத்தில் எடுக்க வேண்டும். விடுதலைப்புலிகளின் முந்திய வரலாறு சம்பந்தமாக சில பிரச்சினைகள் உன்டென்;பதை மறுதலிக்காமல் இந்த உண்மையைக் கூற வேண்டியுள்ளது. இலங்கைத் தமிழர்களின் உரிமை போராட்டத்தில் விடுதலைப்புலிகளே தலையிடம் வகிக்கின்றனர்.; விடுதலைப்புலிகள் இல்லையென்றால் இலங்கையில் தமிழர் உரிமை போராட்டத்துக்கான தலைமை வேறு இன்று கிடையாது என்பதை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும்.

இலங்கைத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினைத் தீர்வுக்கு அரசாங்கம் எந்தவொரு மாற்று வழியையும் முன்வைக்கவில்லை. அது மாத்திரமல்லாமல், அரசாங்கத்தை ஆதரிக்கும் தென்னிலங்கைச் சக்திகள் மாற்று அரசியல் தீர்வு என ஒன்று கொடுக்கப்படாமலே விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றனர். அந்தச் சக்தியினர் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் வழியாக பெற்றுக்கொள்ளப்பட்டனவற்றையும் எதிர்க்கின்றனா.; இவற்றையும் இந்தியாவின் கவனத்துக்கு எடுத்துச் செல்வது நமது கடமையாகும்.

bakthavathsalam ஈழத் தமிழர்களின் மீது எந்தத் தீர்வையும் இந்தியா திணிக்கக் கூடாது.
பீ.வீ. பக்தவத்சலம் (வழக்கறிஞர், தலைவர்- மக்கள் உரிமைக் கழகம்)

வரலாற்றுரீதியாகப் பார்த்தால் இந்தியா என்றைக்குமே ஒரு நாடாக இருந்ததில்லை. பிரிட்டி~;காரர்கள் தங்களுடைய வியாபாரத் தேவைகளுக்காக மொழியால், மதத்தால், இனத்தால் வேறுபட்ட நாடுகளை ஆயுதமுனையில் இணைத்தே இந்தியா என்ற தேசத்தை உருவாக்கினார்கள். அவர்கள் சுதந்திரம் வழங்கிவிட்டுப் போனதாகச் சொல்லப்பட்ட காலத்தில்கூட அறுநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. ராஜாக்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். வல்லபாய் பட்டேல் இவர்களையெல்லாம் ஆயுதமுனையில் சரணாகதியடையச் செய்து ஒன்றிணைத்தார். இன்றைக்கும், வட மாநிலங்களில் தனிநாடு கேட்டுப் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பல்வேறு தேசிய இனங்களை வலுக்கட்டாயமாக இணைத்து வைத்திருக்கும் இந்தியா, ஈழத்தமிழர்களின் தேசியஇனப் போராட்டத்தில் எப்படி நியாயமாக நடந்து கொள்ளும்?

இந்தியா புரட்சிகரமான மாறுதல்களையும் என்றைக்குமே விரும்பியதில்லை. கட்டப்பொம்மன், திப்புசுல்தான், ஜான்சிராணி என்று நூற்றுக்கணக்கானோர் பிரிட்டி~; ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராடியிருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் இந்தியாவில் இற்றைவரை உரிய மதிப்பு தரப்படவில்லை. புரட்சிகரமான சிந்தனைகள், இயக்கங்கள் இந்திய மக்களிடையே வளராததற்கான காரணம் கத்தியின்றி, இரத்தமின்றி அகிம்சாவழிப் போராட்டம் நடத்திய காந்தி அல்ல. எவருக்கும் எப்படியும் அடிபணிந்து தங்களுடைய காரியத்தைச் சாதித்துவிடும் பிராமணீய மனோபாவம்தான் இதற்குக் காரணம். இந்தியா சுதந்திரம் பெற்ற போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் மவுண்ட் பேட்டன் பிரபு. பிரிட்டி~; ஏகாதிபத்தியத்தின் ஆளுநரான இவரையே சுதந்திர இந்தியாவின் ஆளுநராக வேண்டுமென்று நேரு மன்றாடி இருக்க வைத்ததார். எந்த நாட்டிலும் இப்படி நடக்காது. அதுமட்டுமல்ல ; மவுண்ட் பேட்டன் தான் ஆளுநராக இருப்பதற்குச் சில நிபந்தனைகளை விதித்தார். அவர் இருக்கும் வரை சுபா~; சந்திரபோசுக்கு இந்தியாவில் எந்த விழாவும் எடுக்கக் கூடாது என்பதும் அவற்றில் ஒன்று. நேரு ஏற்றுக் கொண்டார். இந்த அடிமை மனோநிலைதான் பிராமணர்கள் வழியாக இன்று எல்லாத் தரப்புகளிலும் ஊறிப்போயுள்ளது.

சுதந்திர இந்தியாவில் கிராமப் பஞ்சாயத்துக்களுக்கே அதிக அதிகாரம் என்பது காந்தியின் கனவு. ஆனால் பிரிட்டி~; ஏகாதிபத்தியத்தின் காபன் பிரதியாகவே இன்றளவும் இந்திய அரசியலமைப்பு நீடிக்கிறது. பிராமணர்களுடனான உறவால,; திராவிட நாடு கோரியவர்கள் கடைசியில் அதைக் கைவிட்டார்கள். தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தைக்கூட இவர்களால் பெற்றுத்தர முடியாமல் போய்விட்டது. நான் 45 வருடங்களாக வழக்குரைஞராகப் பணியாற்றி வருகின்றேன். நீதிமன்றங்களில் தமிழில் என்னால் வாதிக்க முடியவில்லை. பழமொழிகளைத் தமிழில் சொல்வதற்குக் கூட நீதிபதியிடம் அநுமதி பெறவேண்டியுள்ளது. ஏன் இப்படி? என்று கேட்க முடியாதபடி புரட்சிகரமான உணர்வுகள் இங்கே முனை மழுங்கடிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில் தமிழ் நாட்டுத் தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு உதவுவார்கள் என்று நினைப்பது குருடனிடம் வழி கேட்ட கதைமாதிரித்தான்.

வங்காள தேசத்தை உதாரணம் காட்டி, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா படைகளை அனுப்ப வேண்டும் என்று சொல்பவர்களும் இருக்கிறார்;கள். இந்திரா காந்தி பாகிஸ்தான் மீது கொண்டிருந்த விரோதம் காரணமாகவே படைகளை அனுப்பினார். அந்தப் படைகள் மிக மோசமாக அங்கு நடந்து கொண்டபடியால்தான் முஜீபர் ரஹ்மான் பதவியேற்ற நாளன்றே டாக்கா பல்கலைக் கழக மாணவர்கள் ஷஇந்திய இராணுவமே வெளியேறு| என்று குரல் கொடுத்தார்கள். இலங்கைக்கு யார் சார்பாக இந்தியா படைகளை அனுப்பினாலும் அது வல்லரசொன்றின் விஸ்தரிப்பாக அமையுமே தவிர தமிழர்களுக்கோ, சிங்களவர்களுக்கோ நன்மை தராது. இந்த நிலையில் இந்தியா செய்யக்கூடிய ஒன்று இருக்குமானால், அது இலங்கை அரசை யுத்தத்தை நிறுத்த வைத்து விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வைப்பதுதான். ஈழத்தமிழர்கள் மீது எந்தத் தீர்வையும் இந்தியா திணிக்கக் கூடாது. அது போராடிக் கொண்டிருக்கிற அவர்களே தீர்மானிக்க வேண்டியது. பேச்சு வார்த்தை மேசையில் சம~;டித் தீர்வு கிடைத்தாலும், அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி விடுதலையை வென்றெடுக்க முடியும். ஏனெனில் ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்| என்று முழங்கிவிட்டு இன்றைக்கு தமிழே இல்லாமல் இருக்கின்ற தமிழ் நாட்டுத் தமிழர்களைப் போல அல்ல ஈழத்தமிழர்கள். 1950களிலேயே மருத்துவக் கல்வியைத் தமிழில் கொண்டுவந்தவர்கள் அவர்கள்.


பொ. ஐங்கரநேசன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..