பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow பேச்சு தோல்வியடைந்தால் அடுத்த கட்டம் என்ன?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பேச்சு தோல்வியடைந்தால் அடுத்த கட்டம் என்ன? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 29 October 2006

ஜெனீவாப் பேச்சுகள் எந்தளவில் வெற்றியளிக்கப் போகின்றதென்பதைஇ இந்தப் பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை இருதரப்பு உடன்பாட்டுடனும் நோர்வேயால் தயாரிக்க முடியாததிலிருந்து உணர்ந்துகொள்ளலாம். பேச்சுக்கான பொதுவான நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்கக்கூட இருதரப்பும் இணங்காத நிலையில் பேச்சுகள் ஆரம்ப மானதால் அதன் முடிவு குறித்து பெரிதும் நம்பிக்கை கொள்ள முடியாதுள்ளது.

போர்நிறுத்த காலத்தில் நடைபெற்ற கடும் போர் இரு தரப்பிடையேயும் பெரும் இடைவெளியை ஏற்படுத்திவிட்டது. பேச்சை தொடங்க ஒரு தரப்பு போர் புரிந்த அதேநேரம்இ மற்றத் தரப்பு போரை முடிக்க பேச்சைத் தொடங்க வேண்டுமென வற்புறுத்தியது. பேச்சென்ற போர்வையில் இருதரப்பும் போரிலேயே நாட்டம் கொண்டிருப்பதாக குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

போர்முனையில் ஏற்படும் வெற்றி தோல்விகளை விட பேச்சுவார்த்தை மேசையில் ஏற்படும் வெற்றி தோல்வி பற்றியே அதிகம் சிந்திக்கப்படுகிறது. போரின் வெற்றி தோல்விகளே பேச்சுக்கான வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் நிர்ணயித்தாலும் களமுனை வெற்றி தோல்விகளை பேச்சுவார்த்தை மேசையில் தங்களது பேரம்பேசும் பலத்திற்கும் எதிர்த்தரப்பை மடக்கும் பலத்திற்கும் பயன்படுத்துவது குறித்துமே அதிகம் சிந்திக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் இராணுவ வெற்றி-தோல்விகளே பேச்சின் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கிறது. பேச்சுக்கு ஒரு தரப்பை வரவழைப்பதற்கோ அல்லது பேச்சுகளில் பேரம் பேசும் ஆற்றலை அதிகரிப்பதற்கோ இங்கு இராணுவ வெற்றிகள் தேவைப்படுகின்றன. இதனால்இ யுத்தத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் சமாதானப் பேச்சுகளுக்கு கொடுக்கப்படுவதில்லை.

யுத்தம் எப்போதுமே சமாதானத்திற்கு எதிரானது. யுத்தம் நடைபெறுகையில் சமாதானப் பேச்சுக்களென்பதுஇ பேச்சுக்கான சந்தர்ப்பத்தை இல்லாது செய்யும் செயல். இதனாலேயே யுத்தத்தை நிறுத்தி பேச்சுக்களை ஆரம்பிப்பதற்காக யுத்தநிறுத்தம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

பேச்சுக்களின் போது இடம்பெறும் யுத்தமானது பேச்சுக்களின் போக்கை மாற்றிவிடுமென்பதுடன் மட்டுமல்லாது யுத்தத்தின் மோசமான விளைவுகள் பேச்சுக்களை இடைநடுவில் முறித்தும் விடும். இதனாலேயே யுத்தத்தை நடத்திக் கொண்டு பேச்சுக்களை நடத்த முடியாதென்பது உணரப்பட்டு போர்நிறுத்தம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்தப் போர் நிறுத்தம் புலிகளின் சமபல நிலையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அடுத்தடுத்த தோல்விகளால் அப்போதைய அரசு தடுமாறிக் கொண்டிருக்கையில்இ அடுத்து ஆட்சிக்கு வந்தவர்களால் புலிகளுடன் உடன்பாடொன்று எட்டப்பட்டு போர் நிறுத்த உடன்பாடு அமுலுக்கு வந்தது.

இந்த உடன்பாடு அமுலுக்கு வந்து நாலரை வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும்இ என்ன காரணத்திற்காக இந்த உடன்பாடு அமுலுக்கு கொண்டு வரப்பட்டதோ அதற்கு எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.

இந்த நாலரை வருடகாலத்தில்இ போர்நிறுத்த உடன்பாட்டில் ஒரு தரப்பில் கைச்சாத்திட்ட விடுதலைப்புலிகள் மூன்றாவது ஆட்சியாளரைச் சந்தித்துள்ளனர். உடன்பாட்டில் கைச்சாத்திட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ அவரது ஆட்சியைக் கலைத்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கஇ புதிதாக ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்ஷவே அவர்கள்.

ரணிலின் ஆட்சிக்காலத்தில் பேச்சுகள் நடைபெற்றது. ஆனால்இ யுத்தம் நடைபெறவில்லை. சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் பேச்சுமில்லைஇ யுத்தமுமில்லைஇ ஆனால் நிழல் யுத்தம் நடைபெற்றது. மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிழல் யுத்தம் கடும் யுத்தமாகியதுடன்இ இன்று பேச்சுகளும் நடைபெறுகிறது.

புலிகளின் சமபல நிலையின் அடிப்படையில் உருவானதுதான் இந்த போர்நிறுத்த உடன்பாடு. ஆனால்இ இந்த உடன்பாடு கைச்சாத்திட்டது முதல் புலிகளின் சமபல நிலையை வலுவிழக்கச் செய்யும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டன. பேச்சுக்களை புலிகளுடன் ஆரம்பித்த ரணில்இ புலிகளுக்குள் பிளவையும்இ தோற்றுவித்தார்.

வடக்கு - கிழக்கு இணைப்பின் பலத்தை வலுவிழக்கச் செய்வதற்காகஇ புலிகள் அமைப்பில் கிழக்கிற்கு பொறுப்பாயிருந்த வரை பிரிப்பதன் மூலம் புலிகளின் அடிப்படை கோரிக்கையை ஆட்டங்காணச் செய்யலாமென திட்டமிடப்பட்டது.

ஒருபுறம் பேச்சுக்கு புலிகளை அழைத்து அவர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் சூழ்ச்சிகள் நடைபெற்ற அதேநேரம்இ மறுபுறம்இ ரணில் விக்கிரமசிங்க ஹசர்வதேச பாதுகாப்பு வலையமைப்பு' என்ற பெயரில் சர்வதேசத்துடன் இணைந்து புலிகளுக்கெதிராக பாதுகாப்பு வலையமைப்பொன்றை பின்ன முனைந்தார்.

புலிகள் மீண்டும் பெரும் யுத்தத்தை ஆரம்பிக்க முடியாதவாறு அவர்களை இந்த வலையமைப்புக்குள் சிக்கவைப்பதும் அப்படி புலிகள் யுத்தத்தை ஆரம்பிக்கும் பட்சத்தில் சர்வதேசத்தின் முழு ஆதரவையும் பெற்று புலிகளை அடக்குவதுமே அவரது திட்டமாயிருந்தது.

எனினும்இ புலிகளை சர்வதேச பொறிக்குள் சிக்க வைக்க முயன்ற ரணிலைஇ அவர் புலிகளுடன் கூட்டுச்சேர்ந்து நாட்டின் பாதுகாப்பையே கேள்விக் குறியாக்கிவிட்டதாகக் கூறி அவரை ஆட்சியிலிருந்து அகற்றிய் ஜனாதிபதி சந்திரிகா ஆட்சியை கைப்பற்றினார்.

அதேநேரம்இ ரணிலின் ஆட்சிக் காலத்தில் புலிகளுக்கிடையில் ஏற்பட்ட பிளவினால் உருவான கருணா அணியை பயன்படுத்தி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் புலிகளுக்கெதிரான நிழல் யுத்தம் ஆரம்பமானது. சர்வதேச ரீதியில் பொய்ப் பிரசாரங்கள் மூலம் புலிகளுக்கெதிரான தடைகளைப் போடும் அதேநேரம்இ உள்நாட்டில் நிழல் யுத்தத்தை தீவிரப்படுத்துவதும் அவரது திட்டமாயிருந்தது.

ஆனாலும்இ அவர் ஆட்சியிலிருந்து விலக ஆட்சியைக் கைப்பற்றிய மகிந்த ராஜபக்ஷஇ சர்வதேச சமூகத்துடனிருந்து பெரிதும் விலகிய நிலையில் நிழல் யுத்தத்தை நிஜப் போராக்கியதுடன் புலிகளுக்கெதிரான போர் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கெதிராகவும் மிக மோசமான வன்முறைகளையும் பொருளாதாரத் தடைகளையும் கட்டவிழ்த்து வடக்கு - கிழக்கில் மனிதப் பேரவலத்திற்கு வழிகோலியுள்ளார்.

இந்த மூவரதும் கைங்கரியங்கள் போர்நிறுத்த காலத்திலேயே நடைபெற்றுள்ளன. இதனால்இ இன்று போர்நிறுத்த உடன்பாடு முழுமையாகச் செயலிழந்துள்ள அதேநேரம்இ நாட்டில் மிகப்பெரும் போர் வெடிப்பதை தடுப்பதற்காக இந்த உடன்பாட்டுக்கு மீண்டும் உயிரூட்டி கண்காணிப்புக் குழுவுக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

தற்போதுஇ ஜெனீவாவில் நடைபெறும் பேச்சுக்களில் இதனை வலியுறுத்தவே புலிகள் முனைகின்ற போதும் இதற்கு வாய்ப்பளிக்க அரசுதரப்பு மறுக்கிறது. இதனால்இ வடக்கு - கிழக்கில் இன்று தோன்றியுள்ள மனிதப் பேரவலம் குறித்து உடனடித் தீர்வை காண்பதற்கு மறுத்துள்ள அரசுஇ சாத்தியப்படாத விடயங்கள் பற்றி பேசி பேச்சுக்களை முறித்து தொடர்ந்தும் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்த முனைகிறது.

அண்மைக் காலத்தில் வடக்கு - கிழக்கில்இ குறிப்பாக திருமலை மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய படை நடவடிக்கைகள் மூலம் புலிகளைத் தோற்கடித்து அவர்களது போரிடும் ஆற்றலையே அழித்துவிட்டதாகக் கருதிய அரசுஇ இவ்வாறான பாரிய இராணுவ அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வதன் மூலம் புலிகளை பேச்சுவார்த்தை மேசையில் தங்கள் விருப்பப்படி மடக்கிவிட முடியுமெனக் கருதியது.

இதனாலேயேஇ பேச்சுக்கான திகதி குறித்த பின்பும்இ புலிகளை மேலும் பலவீனமாக்கி பேச்சுவார்த்தை மேசையில் அவர்களது பேரம் பேசும் ஆற்றலையே இல்லாது செய்து விடலாமென்ற நினைப்பில்இ கிழக்கில் வாகரையை கைப்பற்றியும் வடக்கில் ஆனையிறவைக் கைப்பற்றியும் தங்கள் ஆற்றலை நிரூபிக்க முடியுமெனப் புறப்பட்ட அரசு பேரிடிகளைச் சந்தித்தது.

வாகரையிலும்இ முகமாலையிலும் புலிகளின் முறியடிப்புச் சமர்கள் படைத்தரப்புக்கு பேரிழப்புகளை ஏற்படுத்தியது மட்டுமல்லாது பேரதிர்ச்சியையும் ஏற்படுத்திய அதேநேரம் இனியொரு படை நடவடிக்கையை மேற்கொள்ளவே கூடாதென்ற பாடத்தையும் புகட்டியது.

அத்துடன்இ புலிகளின் பலம் குறித்தும் படையினரின் பலம் குறித்தும் தாங்கள் போட்டிருப்பது பெரும் தப்புக் கணக்கென்பதையும் உணரவைத்த அதேநேரம்இ புலிகள் மிகவும் பலவீனமாயிருக்கிறார்களென்பதை அம்பலமாக்கலாமெனப் புறப்பட்டுஇ இன்று படையினரே மிகவும் பலவீனமாயிருக்கிறார்களென்பது அம்பலமாகியுள்ளது.

அரசும் படைத்தரப்பும் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கிடையில் ஹபரணயிலும் காலியிலும் புலிகள் நடத்திய பாரிய தாக்குதல்கள்இ யுத்தம் தங்கள் வாசலை நோக்கி வந்து கொண்டிருப்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. அத்துடன்இ இது பேச்சுவார்த்தை மேசையில் பேரம் பேசும் ஆற்றலையும்இ தலைகீழாக்கியுள்ளது.

தற்போதைய நிலையில் ஹஏ-9' பாதை திறக்கும் விவகாரத்தையே் அரசு சிக்கெனப் பிடித்துள்ளது. இதனைப் பயன்படுத்தி புலிகளை வழிக்கு கொண்டு வரமுடியுமென அரசு கருதுவதால்இ பேச்சுவார்த்தையில் ஹஏ-9' பாதை திறப்பதை தனது பேரம் பேசலுக்கு முக்கியமாகப் பயன்படுத்த முனைகிறது. ஆனாலும்இ இதனைக் கூட புலிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தும் நிலையே இன்று உருவாகியுள்ளது.

குடாநாட்டுக்கான பாதையை திறந்து அங்கு ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தை நீக்க அரசு முன்வர வேண்டுமென சர்வதேச சமூகம் கூறி வருகையில் இப்பாதையை படையினர் தொடர்ந்தும் மூடி வைத்திருப்பதன் மூலம் இ அரசு மிகப்பெரும் மனிதாபிமானப் பிரச்சினையை உருவாக்கி வருவதை இந்தப் பேச்சுவார்த்தை மேசையில் வைத்து புலிகள் முழு உலகுக்கும் நன்கு தெளிவுபடுத்தியுள்ளனர்.

அத்துடன்இ மனிதப் பேரவலத்துக்கு வழிவகுத்துள்ள மனிதாபிமானப் பிரச்சினையொன்றை இலங்கை அரசு தனது பேரம்பேசலுக்கு பயன்படுத்த முயல்வதையும் இந்தப் பேச்சுக்கள் மூலம் புலிகள் அம்பலப்படுத்தியுள்ளனர். இதனால்இ இந்தப் பேச்சுக்களில் ஹஏ-9' பாதையை தனது துருப்புச் சீட்டாக பயன்படுத்த இலங்கை அரசு முயன்ற போதும் அந்தத் துருப்புச் சீட்டை புலிகள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தியுள்ளனர்.

இதனால்இ யாழ். குடாநாட்டுக்கான தரை வழிப்பாதையை புலிகள் தங்கள் படைபலம் மூலம் திறப்பது நியாயமென்ற கருத்தை இந்தப் பேச்சுக்கள் மூலம் புலிகள் முழு உலகத்திற்கு எடுத்துரைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவேஇ யாழ். குடாநாட்டின் மீது புலிகள் பாரிய தாக்குதலொன்றைத் தொடுப்பதன் மூலம் அங்கு மனிதப் பேரவலத்துக்குள் சிக்கியுள்ள ஆறு இலட்சம் மக்களையும் அதிலிருந்து மீட்க மேற்கொள்ளப்படுமொரு மீட்பு நடவடிக்கையாகவே இது கருதப்படப் போகிறது.

புலிகளுக்கெதிரான யுத்தத்தின் மூலம் அவர்களை மிகவும் பலவீனமாக்கி அல்லது தோற்கடித்து விட்டு அதனைப் பயன்படுத்தி பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை இல்லாது செய்து விட முயன்ற அரசுக்குஇ கடைசி நேரங்களில் வாகரைஇ முகமாலைஇ ஹபரண மற்றும் காலியில் புலிகள் கொடுத்த அடிகள் பேரிடியானது மட்டுமல்லாது களமுனையிலும் பேச்சுவார்த்தை மேசையிலும் தாங்கள் போட்டவையெல்லாம் தப்புக்கணக்குகளாகிவிட்டன என்பதையும் உணரவைத்துள்ளது.

இந்த நிலையில் இந்த ஜெனீவாப் பேச்சுக்களின் வெற்றி குறித்து சிந்திக்க முடியாதிருப்பதால் அடுத்து ஏற்படப் போகும் விளைவுகள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. வடக்கு - கிழக்கிற்கு வெளியே யுத்தம் வந்துவிட்ட நிலையில்இ ஜெனீவாப் பேச்சுக்கள் தோல்வியுற்றால் நாடு முழுவதும் யுத்தம் நடைபெறுமென்பதில் ஐயமில்லை.

பலத்த பிரயத்தனங்களின் மத்தியில் இருதரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவந்தும் அது பலனளிக்காது போய்விட்டால்இ மீண்டும் பெரும் யுத்தம் நடைபெற்று அதில் ஏற்படும் பாரிய விளைவுகளின் பின்பே இரு தரப்பையும் அடுத்த சுற்றுப் பேச்சுக்கு கொண்டுவர முடியுமென்பதால் ஜெனீவாப் பேச்சுக்கள் தோற்றால் பெரும் யுத்தம் வெடிப்பதையும் அதனைத் தடுக்க சர்வதேச சமூகமும் முன்வராதென்பதுமே இன்றைய யதார்த்தமாகும்.


விதுரன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..