பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow முழு அளவிலான யுத்தத்தை நோக்கி...
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

முழு அளவிலான யுத்தத்தை நோக்கி... அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 05 November 2006
வடக்கு - கிழக்கில் முப்படைகளும் கடும் தாக்குதலைத் தொடுக்கப் போவதாக போர்ப் பிரகடனப் பாணியில் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வான் வழித் தாக்குதலும் கடும் ஷெல் தாக்குதலும் நடைபெற்று வருகையில் பிரதமரின் இந்தப் போர்ப் பிரகடனமும் வெளியாகியுள்ளது.


ஜெனீவாப் பேச்சுக்களின் தோல்விஇ அடுத்து என்ன என்ற கேள்வியை எழுப்பிய நிலையில் வடக்கு - கிழக்கில் படையினரின் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் நடைபெறுவதால் இதன் விளைவுகள் குறித்து பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

போர்முனையில் எதிரியின் நிலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்படாது பல மைல் தூரத்திற்கு அப்பால் பொது மக்களின் குடியிருப்புகள் மீது தாக்குதல்களை நடத்துவதென்பது ஆத்திரமூட்டும் செயலென்பதுடன் போருக்கான அறைகூவலாகவுமே கருதப்படுகிறது.

கிளிநொச்சியில் மருத்துவமனை சுற்றாடலில் நடைபெற்ற விமானத் தாக்குதலுக்கு இணைத் தலைமை நாடுகள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன. இது விமானப்படையின் மிக மோசமான தாக்குதலுக்கான கண்டனமென்பதைவிடஇ புலிகள் கடும் பதில் தாக்குதலை நடத்திவிடலாமென்ற அச்சத்திலேயே விடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

இல்லையேல்இ குடாநாட்டுக்கான தரைவழிப் பாதையை (ஏ9) திறக்க மறுத்து ஆறு இலட்சம் குடாநாட்டு மக்களின் அவசர மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்க மறுத்த அரசின் பிடிவாதத்தால்இ தாங்கள் அழைப்பு விடுத்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போது இலங்கை அரசின் பிடிவாதத்தை இணைத்தலைமை நாடுகள் கடுமையாகக் கண்டித்திருக்க வேண்டும். ஆனால்இ அது குறித்து இணைத் தலைமை நாடுகள் எதுவும் பேசாதது இலங்கை அரசை உஷார்படுத்தியுள்ளது.

ஜெனீவாப் பேச்சு எதற்காக நடந்தது? என்ற கேள்வியே அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அரசியல் திட்டமெதுவும் தற்போது தங்களிடமில்லையென பேச்சுவார்த்தை மேசையில் அரசு தெரிவித்ததால்இ அவசர மனிதாபிமானப் பிரச்சினைப் பற்றியே பேசியிருக்க வேண்டும். ஆனால்இ அதுவுமில்லைஇ இதுவுமில்லையென இந்தப் பேச்சுக்களால் எதுவுமேயில்லை என்பதை இலங்கை அரசு வெளிப்படுத்திவிட்டது.

இரண்டாயிரம் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லையெனக் கூறி மாவிலாறை திறப்பதற்காக முப்படையினரும் பாரிய படை நடவடிக்கையில் இறங்கினர். அவசர மனிதாபிமானப் பிரச்சினைக்காக படை நடவடிக்கை அவசியமென இலங்கை அரசு அப்போது வலியுறுத்தி படை நடவடிக்கைக்கும் உத்தரவிட்டது.

அப்படியாயின் குடாநாட்டில் சிறைப்பட்டுள்ள ஆறு இலட்சம் மக்களை விடுவிப்பதற்காக விடுதலைப் புலிகள் இன்று ஹஏ9' பாதையைத் திறக்க பாரிய தாக்குதலொன்றை மேற்கொள்ள வேண்டுமென்பதையே மாவிலாறு படை நடவடிக்கை தெளிவுபடுத்துகிறது.

இணைந்த வடக்கு - கிழக்கைப் பிரிக்க வேண்டும்இ திறந்திருந்த ஹஏ9' பாதையை மூடவேண்டும்இ புலிகளுக்கெதிராக பாரிய தாக்குதலைத் தொடுக்க வேண்டும்இ நாடு பிளவுபடுவதைத் தடுக்க வேண்டுமென்றெல்லாம் கோஷமிடும் தென்பகுதி இனவாதிகளுக்கு ஜெனீவாப் பேச்சுக்கள் தோல்வியடைந்தது மிகவும் வாய்ப்பாகிவிட்டது.

ஜெனீவாப் பேச்சில் ஹஏ-9' பாதையைத் திறக்க அரசு இணங்கியிருந்தால்இ மக்களின் அவசரமனிதாபிமானப் பிரச்சினை தீர்க்கப்பட அடுத்த சுற்றுப் பேச்சுக்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருக்குமென்பதுடன் அதற்கிடைப்பட்ட காலப்பகுதியில் கூட சுமுகமானதொரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால்இ அதற்கான வாய்ப்பை அரசு இல்லாது செய்துவிட்டது.

ஜெனீவாப் பேச்சில் விடுதலைப் புலிகளின் நிபந்தனைகளுக்கு அரச குழுவினர் விட்டுக் கொடுப்புகள் எதனையும் செய்யாது பேச்சுவார்த்தை மேசையில்இ தாங்கள் பலமாயிருப்பதை அரசு தரப்பு நிரூபித்துவிட்டதாக தென்னிலங்கையில் பெரும் பிரசாரம் செய்யப்படுகிறது.

ஜெனீவாப் பேச்சுக்கள் ஆரம்பமாவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்இ படைத்தரப்பினரின் கை ஓங்கியிருப்பதாக அரசு கருதியது. அதனால்இ புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை மேலும் குறைப்பதற்காக அல்லது இல்லாது செய்வதற்காக அரசு அடுத்தடுத்து படை நடவடிக்கையில் இறங்கியபோது பெரும் தோல்விகளைச் சந்தித்தது.

படையினரின் வலிந்த தாக்குதல்களை வாகரையிலும் முகமாலையிலும் முறியடித்த புலிகள்இ ஹபரண மற்றும் காலியில் நடத்திய தாக்குதல்கள் புலிகளின் கை ஓங்கியிருப்பதை உணர்த்தியதுடன்இ பேச்சுவார்த்தை மேசையில் அவர்களது பேரம் பேசும் ஆற்றலையும் அதிகரித்திருந்தது. இது அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.

ஜெனீவாப் பேச்சுக்களில் ஹஏ-9' பாதையைத் திறக்க வேண்டுமென்ற புலிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டால் அது புலிகளின் கை ஓங்கியிருப்பதை ஒத்துக் கொள்வது போலாகிவிடுமெனவும் புலிகளின் இந்தக் கோரிக்கையை நிராகரிப்பதன் மூலம் அரசின் கையே ஓங்கியிருப்பதாக வெளியுலகுக்குக் காட்ட முடியுமெனவும் அரசு கருதியிருந்தது.

இதன் மூலம் அரசு ஒன்றைத் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்குவதை விட இராணுவ ரீதியில் புலிகளுக்கு தோல்விகளை ஏற்படுத்தி அதன் மூலம் பேச்சுவார்த்தை மேசையில் தங்கள் கையை ஓங்கச் செய்து புலிகளின் கோரிக்கைகளை நிராகரித்து அதன் மூலம் தாங்கள் விரும்புவதை மட்டுமே திணிக்க வேண்டுமென்பது அரசின் எண்ணமாகும்.

இதனால்தான்இ ஜெனீவாப் பேச்சுக்கள் தோல்வியடைந்த மறுநாளே வடக்கு - கிழக்கில் படையினர் கடும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். ஹஏ-9' பாதை திறக்கப்படும் வரை இனிப் பேச்சுக்கு செல்லப் போவதில்லையென புலிகள் அடித்துக் கூறிவிட்டதால்இ ஹஏ-9' பாதையைத் திறக்க அல்லது யாழ். குடாநாட்டைக் கைப்பற்ற புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கலாமென்று அரசு கருதுகிறது.

இதனால் புலிகள் அவ்வாறானதொரு தாக்குதலைத் தொடுக்கலாமென அரசு அச்சமடைந்துள்ளது. அதனைத் தடுக்க வேண்டுமென்பதற்காக வடக்கில் படையினர் கண்மூடித்தனமான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளனர். அதேநேரம்இ கிழக்கிலும் புலிகளின் பகுதிகள் மீது பலத்த தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

மூதூர் கிழக்கிலிருந்து விலகிய புலிகள் தற்போது மட்டக்களப்பு வாகரை பகுதியிலேயே நிலைகொண்டிருப்பதால் அப்பகுதியிலிருந்தே தங்களுக்கு புலிகளால் அச்சுறுத்தலேற்படுமெனவும் வடக்கில் ஹஏ-9' பாதை திறப்பே இன்று மிக முக்கிய விடயமாயிருப்பதால் முகமாலைப் பகுதியிலேயே தங்களுக்கு புலிகளால் அச்சுறுத்தலேற்படுமெனவும் அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன.

இவ்விரு பகுதியையும் மையமாக வைத்து சூழவுள்ள பகுதிகளில் பாரிய தாக்குதல்களைத் தொடுப்பதன் மூலம் புலிகளை தொடர்ந்தும் சினமூட்டி இப்பகுதிகளில் அவர்களைப் பாரிய தாக்குதல்களுக்குத் தூண்டும் அதேநேரம் அதனை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதன் மூலம் புலிகளைத் தோற்கடிக்கலாமென்பதே இவர்களது திட்டமாகும்.

ஆனால்இ படையினர் எதிர்பார்க்கும் இடங்களில்இ அவர்கள் எதிர்பார்த்திருக்கும் நேரங்களில் புலிகள் என்றுமே தாக்குதல் தொடுத்ததில்லை. இதனால்இ படையினருக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட ஒரு சில தாக்குதல்களை விட பல தாக்குதல்கள் புலிகளுக்கு மிகப் பெரும் வெற்றியாக அமைந்தன.

அதேநேரம்இ படையினர் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கைகள் பலவற்றைப் புலிகள் முன்கூட்டியே அறிந்திருந்ததால் ஒரு சில தாக்குதல்களைவிட பல தாக்குதல்களை புலிகள் இலகுவாக முறியடித்து படையினருக்கு மிகப் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தனர். தேவைக்கேற்ப பின் நகர்ந்து தங்களது இழப்புகளையும் தவிர்த்திருந்தனர்.

ஜெனீவாப் பேச்சுக்கு முன்னர் கூட திருகோணமலை சம்பூர் பகுதியில் படையினர் மேற்கொண்ட பாரிய நடவடிக்கையின் போது பின்நகர்ந்த புலிகள்இ பெரும் இழப்புகளைத் தவிர்த்து தங்கள் வளங்களை பாதுகாப்பான இடத்துக்கு பின்நகர்த்தியிருந்தனர்.

அதேநேரம்இ வாகரை மற்றும் முகமாலைப் பகுதியில் படையினர் மேற்கொண்ட பாரிய படை நடவடிக்கைகளின் போது மிகக் கடுமையான பதிலடி கொடுத்து அவர்களுக்கு மிகப் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தனர்.

சம்பூர் நோக்கி படையினர் நகர்ந்த போது விலகிச் சென்றது போல் வாகரையிலும் முகமாலையிலும் அவர்கள் பின்நகரவில்லை. பின் நகரவும் முடியாதென்பதால் மிகக் கடுமையான பதிலடி கொடுத்தனர்.

வடக்கு - கிழக்கில் யுத்த முனைகளில் தாக்குதல்கள் நடத்தப்படுவதை விட புலிகளின் நிலைகளெனக் கூறி தினமும் மக்கள் குடியிருப்பு பகுதிகளிலேயே படையினர் கடும் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். இதனால் தினமும் அப்பாவித் தமிழ் மக்கள் சிறுகச் சிறுக பல்வேறு விதங்களிலும் கொல்லப்பட்டு வருகின்றனர்.

விமானத் தாக்குதல்இ ஷெல் தாக்குதல்இ துப்பாக்கிச் சூடுஇ ஆட்கடத்தல்இ காணாமல் போதலென தினமும் வடக்கு - கிழக்கில் யுத்த முனைகளுக்கப்பால் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் பெருமெடுப்பில் மக்கள் கொல்லப்படும் போது மட்டுமே ஒரு சில நாட்களுக்கு அது பெரும் பரபரப்பாயிருப்பதுடன் வெளியுலகத்தின் கவனத்திற்கும் வருகிறது. ஆனால் சிறுகச் சிறுக தினமும் நடைபெறும் கொலைகளை எவருமே பெரிதுபடுத்துவதாயில்லை.

அண்மையில் கூடஇ படையினரின் இவ்வாறான செயல்களுக்காக வடக்கு - கிழக்கிற்கு வெளியே படையினருக்கு எதிராக புலிகள் கடும் தாக்குதலைத் தொடுத்திருந்தனர். இதனால் படைத் தரப்பு பாரிய சேதங்களைச் சந்தித்தது. ஹபரணயிலும் காலியிலும் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றிருந்தன.

வடக்கு - கிழக்கில் யுத்த முனைக்கப்பால் அப்பாவித் தமிழ் மக்களே படையினரின் தாக்குதலுக்குள்ளாகின்றனர். ஆனால் வடக்கு - கிழக்கிற்கு வெளியே நடைபெற்ற புலிகளின் தாக்குதல்கள் (ஹபரணஇ காலி) படையினருக்கு எதிரானதாகவேயிருந்தது.

தற்போது கூட விமானப்படையினர் வடக்கு - கிழக்கில் குடியிருப்பு பகுதிகளிலேயே தாக்குதல்களை நடத்துகின்றனர். முல்லைத்தீவில் புதுக்குடியிருப்பு பகுதியில் செஞ்சோலை சிறுவர் இல்லம் மீதான தாக்குதலைப் போன்றே கிளிநொச்சியிலும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக ஆஸ்பத்திரி இந்தத் தாக்குதலுக்கிலக்காகவில்லை. எனினும் பொதுமக்கள் ஒரே தடவையில் பெருமளவில் இலக்கு வைக்கப்படும் தாக்குதல் தொடர்வதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

புலிகள் பாரிய தாக்குதலுக்கு தயாராகி வருவதாகக் கூறிக்கொண்டும் புலிகளின் நிலைகளெனக் கூறிக் கொண்டுமே பொதுமக்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர். தங்களது தாக்குதலைத் தொடர்வதற்கு இது அவர்களுக்கு நல்ல வாய்ப்பாயுள்ளது. எனினும் இதனால் ஏற்படப் போகும் பின் விளைவுகள் பற்றி சற்றும் சிந்திக்காது இந்தத் தாக்குதல்கள் தினமும் தொடர்கின்றன.

குடாநாட்டுக்கான தரை வழிப் பாதையை மூடிவிட்டு கடல் வழிப் பயணத்தில் மக்கள் பணயம் வைக்கப்படுகின்றனர். பெருமளவு படையினர் பயணிக்கும் கடற்படைக் கப்பல்களில் பொதுமக்களும் ஏற்றப்படுகின்றனர். வேறு வழியில்லாததால் அவர்களும்இ படையினருக்கு பாதுகாப்பாக வரவேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குடாநாட்டில் நிலைகொண்டுள்ள படையினருக்கான அனைத்து விநியோகங்களும் தாராளமாக நடைபெறுகிறது. அப்பாவிப் பொதுமக்கள் பணயம் வைக்கப்பட்டே குடாநாட்டின் பாதுகாப்பை படையினர் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

இரு தரப்புக்குமிடையே அடுத்த கட்டப் பேச்சுக்கள் இடம்பெறுவதாயின் அதனை ஹஏ-9' வீதியே தீர்மானிக்குமென்பதால் இதனை மையமாக வைத்து கடும் மோதல்கள் தொடரப் போகின்றன. ஆனாலும் இந்தப் பாதையை திறக்க வேண்டுமென சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்காதது பெரும் ஆச்சரியமாகவேயுள்ளது.

இந்த நிலையில் புலிகளுக்கெதிராக முப்படைகளதும் தாக்குதல் கடுமையாக இருக்கப்போவதாக பிரதமர் கூறியிருப்பதன் மூலம் முழு அளவில் போர் வெடிக்கப் போவது உறுதியாகிவிட்டது. இதனால் வடக்கு - கிழக்கை விட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இதன் தாக்கம் இனி எதிரொலிக்கப் போகிறது.

இம்முறை வெடிக்கப் போகும் போரின் கடுமையை தென் பகுதி நிச்சயம் உணருமென்பதை புலிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஹபரணயிலும் காலியிலும் படையினரே இலக்கு வைக்கப்பட்டனர். எனினும் வடக்கு - கிழக்கில் அப்பாவிப் பொது மக்களும் அவர்களது வாழ்விடங்களும் ஆஸ்பத்திரி போன்ற அத்தியாவசிய நிலைகளும் தாக்கப்படுவதால் தென் பகுதியிலும் இதன் தாக்கம் எதிரொலிக்குமென அரசு கருதுகிறது. 


விதுரன்
Comments (1) >>

j.m.fernando said:

 
very good reseached about our country,because we must fight against sri lankan forces otherwise no freedom to our tamil people, LTTE is good but why do late to war, please your oppinion.
November 06, 2006
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..