பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow ஓசையில்லா விமானம் வடிவமைப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஓசையில்லா விமானம் வடிவமைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 08 November 2006

nerudal__42283206_exhausts_203கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் மாசச்யூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து, ஓசையில்லா விமானத்திற்கான ஒரு புரட்சிகரமான வடிவமைப்பை வெளியிட்டுள்ளார்கள்.எஸ் ஏ எக்ஸ் 40 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமானம் எழுப்பும் ஓசையானது, விமான நிலைய எல்லைகளுக்கு வெளியே உணர முடியாததாக இருக்கும்.

மற்ற மரபு ரீதியான விமானங்களை விட இந்த விமானம் குறைந்த அளவே எரிபொருளை உபயோகிக்கும். மூன்று வருட உழைப்பின் பலனாக இந்த வடிவமைப்பு உருவாகியுள்ளது.இந்தப் புதிய வகை விமானத்தின் உருவம், வளையும் இறக்கைகள் வடிவமைப்பு எனக் கூறப்படும் திட்டத்தின்படி அமையும்.ஒழுங்கற்ற பரப்பினால் ஏற்படும் காற்றுக் கொந்தளிப்பால் தான் விமான ஓசைகள் ஏற்படுவதால், இந்த விமானத்தை வடிவமைத்தவர்கள், எந்த அளவுக்கு இயலுமோ அந்த அளவுக்கு அதன் வெளிக்கட்டமைப்பை வழவழப்பாக செய்துள்ளனர்.

இது போன்ற இலகுவான வடிவமைப்புடைய விமானங்களால், விரைவாக விண்னில் எழும்ப முடியும், மேலும் தரையிரங்கும் போது ஓடுபாதையை நோக்கி மெதுவாக இறங்க முடிவதால், மரபு ரீதியான மற்ற விமானங்களை விட ஓசை குறைவாக இருக்கும்.விமானம் ஏறும் போதும் தரையிரங்கும் போதும் விமானத்தைச் சுற்றி ஏற்படும் காற்றுக் கொந்தளிப்புத் தான் விமானத்தினால் ஏற்படும் ஓசைக்கு காரணம்.இந்தப் புதிய வடிவமைப்பின் மூலம், விமானத்தின் மேற்பரப்பின் ஊடேச் செல்லும் காற்றின் கொந்தளிப்பானது விமானத்தின் பின்பகுதியிலுள்ள கொந்தளிப்பற்ற காற்றை எதிர்கொள்ளும் போது, ஒருவிதமான சமன் ஏற்பட்டு விமான ஓசை குறைகிறது


bbc
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..