பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow நியூயோர்க் மாநாடும் துணை இராணுவக் குழுக்களும்.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

நியூயோர்க் மாநாடும் துணை இராணுவக் குழுக்களும். அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 29 September 2005

அரசு மறைக்க முயன்ற விவகாரம் அம்பலம் ஏறிவிட்டது அதாவது புரிந்துணர்வு உடன்படிக்கைக்குப் புறம்பாக உடன்பாட்டின் சரத்தை மீறுகின்ற வகையில் துனை இராணுவக் குழுக்களைக் கொண்டு புலிகள் இயக்கத்தின் மீது தாக்குதலைத் தொடுத்து சமாதான முயற்சிகளைச் சீர் குலைக்க முயன்ற அரசின் செயல்பாடு இப் போது சர்வதேச நாடுகளின் முன் அம்பலமாகியுள்ளது.

இறுதியாக நியூயோhக்கில் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை நாடுகள் கூடி விடுத்த அறிக்கையில் அரசின் இந்த செயல்பாட்டிற்கு அழுத்தமான கண்டனத்தையும் ஆட்சேபத்தையும் தெரிவித்துள்ளன.

சமாதான முயற்சிகளைச் சீர் குலைக்கும் வகையில் புலிகள் இயக்கம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்ட போதெல்லாம் இந்த விவகாரத்தை கண்ணானிப்புக் குழுவின் முன்னிலையிலும் சர்வதேச சமூகத்தின் முன்னிலையிலும் கொண்டுவரப்பட்ட போதும் ஸ்ரீலங்கா அரசு அதனை பலமாக மறுத்தே வந்தது.

ஆயினும் ஸ்ரீலங்கா அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் இராணுவத்துடன் சோர்ந்து இயங்கும் குழுக்கள் அரசினால் நன்கு பராமரிக்கப்பட்டு அரசினால் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன என்பதும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டே வந்தது.

ஆனால் கருணா குழு என்ற பெயரில் எவருமே தங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் இல்லையென ஸ்ரீ லங்கா இராணுவப் பேச்சாளர் பிகேடியார் தயா ரெட்னாயக்கா மற்றும் ஸ்ரீ லங்கா செயலகத்தின் பணிப்பாளர் ஐயந்த தனபாலா போன்றோர் தெரிவித்து வந்தனர்.

இந் நிலையில் இலங்கை யுத்த நிறுத்தக் கண்கானிப்புக் குழுவுடன் கருணா குழுவினர் ஒரு சந்திப்பினை மேற்கொண்டதுடன் அதனை தமக்குக் கிடைத்த அங்கீகாரமாகவும் வெளியில் காட்ட முனைந்ததன் விளைவு பொல்லுக் கொடுத்து அடி வாங்கிய கதையாக ஸ்ரீ லங்கா அரசு மாட்டிக் கொண்டது.

கருணா குழுவிடனான சந்திப்பைக் கண்கானிப்புக் குழு வெளிப்படுத்தாத நிலையில் தாமே அதனை வெளிப் படுத்தியதன் மூலம் அரச கட்டுப்பாட்டின் அத்துணைக் குழுக்கள் நன்கு பராமரிக்கப்படுகின்றார்கள் என்பதை கண்கானிப்புக் குழு சர்வதேசத்தின் முன் போட்டு உடைத்துள்ளது.

இந்த செயல்பாட்டின் மூலம் இதுவரைகாலமும் புலிகள் இயக்கத்தின் மீது நடத்தாத்தப்பட்ட பல தாக்குதல்களை ஒரு முறைப்பாடாக கண்கானிப்புக்குழு ஏற்றுக் கொண்டதே தவிர அவற்றை அரசு மேற்கொண்ட யுத்த நிறுத்த மீறலாகக் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் தற்போது அரச கட்டுப்பாட்டில் அரசின் அங்கீகாரத்துடன் இக் குழுக்கள் இயங்குகின்றன என்ற யதார்த்தத்தை அடுத்து புலிகள் இயக்கம் மீது மேற் கொள்ளப்பட்;ட தாக்குதல்கள் யாவும் யுத்த நிறுத்த மீறல்களாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தை தோற்றுவித்துள்ளன.

உண்மையில் புரிதுணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் யுத்த நிறுத்தத்திற்கு ஆழமான ஆபத்தை இந்த துணைக் குழுக்கள் மூலமாக அரசு ஏற்படுத்தி வந்தது.

இத் துணைக் குழுக்களின் செயல்பாடுகளினால் புலிகள் இயக்கத்தின் அரசியல் போராளிகளின் செயல்பாடுகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் நிறுத்தும் அளவுக்கு நிலமையை ஏற்படுத்தியதோடும் கட்டியெழுப்பப்பட வேண்டிய நம்பிக்கைக்குப் பதிலாக சந்தேகங்களையே தோற்றுவித்து வந்தது.

உண்மையில் அரசு என்ற வகையில் ஸ்ரீ லங்கா அரசு சமாதான வழியில் தீர்வு காண்பதற்கான நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்குப் பதிலாக இராணுவ ரீதியாக புலிகள் இயக்கத்தைச் சிதைக்கவும் பலவீனப்படுத்தவும் முயன்று வந்தமை இன்று அம்பலமாகி இருப்பதோடு அரசின் இற்த செயல்பாட்டை சர்வதேச நாடுகள் கண்டிக்கவும் செய்துள்ளன.

இந்த நிலையில் அரசு சமாதான தேவதை வேடம் ப+ணும் அபத்தை நாடகம் உலகின் முன் இனியேறாது என்ற கசப்பான பாடத்தை ஸ்ரீ லங்கா அரசால் உள்வாங்கிக் கொள்ள நிச்சயம் கடினமாகவே இருக்கும்.

இதன் மூலம் வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் எங்கும் நடைபெறும் அநாமதேயமான தாக்குதல்கள் யாவற்றையும் புலிகள் இயக்கம் மீது சுமத்தி புலிப் பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரித்து வந்த அரசு இதுவரை இந்த துணை இராணுவக் குழுக்களைக் கொண்டு மேற்கொண்ட தாக்குதல்களை அரச பயங்கரவாதமாக ஏற்றுக் கொள்ள முன்வருமா?

உண்மையில் அரசின் இந்தத் தாக்குதல்களை எவர் ஏற்றுக் கொண்டால் என்ன ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன அரச பயங்காவாதமாகவே சர்வதேசத்தின் முன் அம்பலமேறியுள்ளது.

இந்தசமாதான காலத்தில் இலங்கையைப் பொறுத்தவரையில் ஸ்ரீலங்கா அரசே அரச பயங்காவாத நடவடிக்கை மூலமாக பயங்கரவாதத்தை வளர்த்த வந்துள்ளது என்ற உண்மை புலப்பட்டு நிற்கிறது.


இந்திரகுமார்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..