பிரதான பக்கம் arrow காணொளி arrow தமிழ் கனேடியர்களின் அரசியல் நுழைவு – ஒரு கண்ணோட்டம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழ் கனேடியர்களின் அரசியல் நுழைவு – ஒரு கண்ணோட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 16 November 2006

பல மாதங்களாக தமிழ் மக்களிடையே பலத்த பரபரப்புக்குள் பேசப்பட்டுவந்த நகர மன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் கடந்த வாரம் நிறைவடைந்துள்ளது.


கடந்த பல வருடங்களாக தமிழ் கனேடியர்களிடத்தில் பல வேற்றுமைகள் மற்றும் சில மூட நம்பிக்கைகள் முளைவிட்டு இருந்தன. இந்தச் செயற்பாடுகளை கடந்த காலங்களில் தெளிவாகவும,; நிதானத்துடன் வெளிக்கொண்டு வந்திருந்த பலர், சில உண்மைகளை தெளிவாக்குவதற்காக இந்த வருடம் மௌனம் காத்து வந்தனர்.

இந்த வகையில், வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகள் சமூக உணர்வு, மேம்பாடு குறித்த பல உண்மைகளை தமிழ் கனேடியர்களுக்கு உணர்த்தியிருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

கனேடியத் தமிழர்கள் அதிகமாக போட்டியிட்ட ஒரு வரலாற்றுத் தேர்தலாக இந்தத் தேர்தல் இருந்துள்ளது. மக்களிடத்தில் வேட்பாளர்கள் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் உலாவிய போதிலும், தமிழ் என்ற உணர்வின் காரணமாக எல்லோரும் ஒற்றுமையாக இந்தத் தேர்தலை எதிர்நோக்கியது கனடியத் தமிழர்களின் ஒற்றுமைக்கு ஒரு படிக்கல்லாகும்.

இந்தத் தேர்தலில் வெற்றிபெற்ற நீதன் சண்முகராஜா மற்றும் லோகன் கணபதி ஆகியோரின் கடின உழைப்பும், தமிழ் உணர்வும் மற்றும் கடந்த காலங்களில் கற்றுக்கொண்ட அரசியலின் நெளிவு சுழிவுகள் என்பன அவர்களின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடியத் தமிழ் சமூகத்தினரால் தலைமத்துவ பண்புகள் நிறைந்து காணப்பட்ட பலா,; மக்களின் ஆதரவுடன் பொதுவாழ்வில் நிமிர்ந்தவுடன் - சுயநலங்களுக்கு அடிபணிந்து தானின்றி ஓரணுவும் அசையாது என்ற அகங்கார நிலைக்கு மாற்றம் பெற்றதனை கடந்த கால நிகழ்கால கணிப்புக்கள் கனடியத் தமிழர்களுக்கு நன்கு புலப்படுத்தியுள்ளது.

இந்த வகையில், வெற்றிபெற்ற இரண்டு வேட்பாளர்களும் இந்த நடைமறையைப் பின்பற்றுவரா அல்லது பாரம்பரியமான சிந்தனையில் செயற்படுவார்களா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்தத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல், மாறான முடிவுகளை பெற்ற பேராசிரியர் இலகுப்பிள்ளையினையும் இந்தப் பத்தியில் நாம் சற்று அலசுவது காலத்தின் கட்டாயம்.

கடந்த 2003 தேர்தல்களின்போது, நான் மேலே குறிப்பிட்டடது போல், கனடியத் தமிழ் சமூகத்தினரால் தலைமத்துவ பண்புகள் நிறைந்து காணப்பட்ட ‘இளைஞர் ஒருவரின்’ வழிகாட்டலில் சில இளைஞர்கள்  செயற்பட்டதன் விளைவாக பேராசிரியர் தோல்விகண்டார் என்று அன்றைய காலகட்டத்தில் பரப்புரைகள் செய்யப்பட்டு வந்தது. அதில் உண்மையும் இருக்கலாம்.

எனினும், இந்த வருடத்தில் நடைபெற்ற தேர்தலில் பேராசிரியருக்கு எந்தவித குறுக்கீடோ அல்லது இடைஞ்சல்களோ ஏற்படுத்தப்படவில்லை. மாறாக, தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவு தமிழ் அமைப்புக்களினால் கொடுக்கப்பட்டது. இருந்தும் பேராசிரியர் தோல்வியடைந்துள்ளார்.

என்ன காரணம்?

ஒருவன் தனது சமூகத்துடன் எந்தவகையில் தொடர்புகளை மேற்கொள்கிறான் என்பதினை வைத்து மக்கள் இந்த ஒருவனை எடைபோடுகின்றனர். மேலும், இந்த ஒருவர் பொது வைபவங்களில் கூட்டுச்சேரும் பிரபலங்கள் யார் என்பது குறித்து மக்கள் மட்டுமல்லாமல் ‘சமூகங்களும்’ கண்காணிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்வது முக்கியமானதாகும்.

மேலும், தேர்தல் நடக்கும் பிரிவுகளில் வசிக்கும் மக்களை சந்திக்காது, ரொரன்ரோப் பெரும்பாகத்தில் நடைபெற்ற விழாக்கள் ஒன்றுகூடல்களுக்குச் சென்று தனக்கான ஆதரவை நாடியமை, பேராசிரியரின் அரசியல் அறிவின்மையை மக்களுக்கு கோடிட்டுக்காட்டியுள்ளமை இங்கு கவனிக்கத்ததக்கது.

இந்த வகையில், மார்க்கம் நகரசபையில் போட்டியிட்ட பேராசிரியர் இலகுப்பிள்ளையின் தோல்வி ஏன் என்பது புலப்படும்.

கருத்துகளை அனுப்புவதற்கு: andrew.rasiah@gmail.com 


andrew.rasiah@gmail.com
Comments (1) >>

rahulan said:

 
he got more votes than last election.reason why he lost is many tamils did not vote and there are other nationalities( whites and chinese voters) morethan us who vote for their national nomenees.AT LEAST HE TRIED.MAY BE NEXT TIME HE WILL WIN.REMEMBER NEPPOLIAN TRY 7 TIMES TO WIN ONE BATTLE.
KEEP TRYING
November 16, 2006
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..