|
நான்காம் கட்ட ஈழப்போரில் தென்னிலங்கை விடுதலைப் புலிகளின் முக்கிய போரியல் அரங்காக திறக்கப்பட போகின்றதா?
காலத்தின் தேவை அறிந்து செயற்பட வேண்டிய தார்மீகத் தேவை இயல்பாகவே தமிழ் இனத்திற்கு எழுகின்றது. சிங்கள மக்கள் இனச்சிக்கல் விடயத்தை புரிந்து கொள்ளும் விதம் தொடர்பாக நாம் கூர்ந்து நோக்க வேண்டி இருக்கின்றது. சிங்களப் பேரினவாத மேலாண்மைவாத சிந்தனையினால் சிங்கள மக்களின் இயல்பான நடத்தையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அவர்கள் தமிழர்களின் நியாயமான போராட்டவியலை எவ்விதம் நோக்குகின்றார்கள், அவர்களிடம் இயல்பாக எழுகின்ற கருத்தியல்கள் மற்றும் செயலாக்கற்திறன் எல்லாம்; தமிழர் தரப்பை இனவாத சிந்தனையுடனே சிந்திக்க பழக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள் இது உண்மையில் அவர்களின் அறியாமையினை எடுத்தியம்புகின்றது. அத்தோடு சிங்கள இலத்திரனியல், அச்சு ஊடகங்களினால் இவ்விதமான கருத்தியல்கள் அவர்களுக்கு போதிக்கப்பட்டு வருகின்றமையே இதற்கு காரணமாக கருதமுடியும்.
சிங்களப் பேரினவாதிகளின் இனக்குரோத நடவடிக்கை சிங்கள ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் மேலும் மேலும் மேல்மாடியில் ஒன்றும் அல்லாதவர்கள் என்ற உண்மையை தெளிவாக காட்டுகின்றது. இனவாதத் தீயினால் தமிழ் மக்களை அடக்கியாள எத்தணிக்கும் மட்டமான சிந்தனை வெகுவிரைவில் பாரிய விளைவுதனை எதிர் கொள்ளப் போகிறது. சிங்கள பேரினவாத அரசியல் வாதிகள் விடும் கொட்டாவிகள் எல்லாம் சிங்கள மக்களுக்கு இனிமையான நித்திரையைக் கொடுக்கின்றது என்பது உண்மை. ஆனால் எதையும் பகுத்தறியக்கூடிய சிந்திக்கின்ற புலமைசார் அறிவியலும், களயதார்த்தத்தை புரிந்து கொள்ளக்கூடிய தன்மையும் அறவும் அற்ற மந்தைக் கூட்டமாக சிங்கள மக்கள் இருப்பது. அம்மக்களின் சாபக்கேடாகும்.
சிங்கள கைக்கூலிப்படைகளும், துணை இராணுவக்குழுக்களும் கண்களை மூடிக்கொண்டு செய்யும் இனப்படுகொலைகள் எல்லாம் சர்வதேசம் கண்களை அகலவிரித்துப் பார்த்துக் கொண்டு இருக்கின்றது என்ற உண்மை தெரியாமல் இருப்பது மிகவும் ஆபத்தான விடையம்.
தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான உறுதியான தீர்வை வழங்குவதற்கு சிங்களப் பேரினவாத தேசியம் மற்றும் அவர்களின் சீரழிந்த கலாசாரம், மகாவம்ஷ சித்தாந்தம் என்பவற்றின் அடிப்படைத் தன்மை இடமளிக்காது. சுகபோக சுயநலம் காரணமாகவே தென்னிலங்கை அரசியல்வாதிகள் சிங்கள மேலாண்மையாளராக மாறுகின்றனர். காரணம் தங்களின் வங்குரோந்து அரசியல் அசிங்கத்தில் முகம் கழுவுவதற்கு தமிழர் பிரச்சனையை கையாழுகின்றார்கள்.
ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும். அதாவது இந்த அரசியல்வாதிகளுடைய சுயநலம் அவர்களை எப்போதுமே இறுதியில் ஏன் சிங்கள மேலாண்மைக் கருத்தியலுக்குள் தள்ளவேண்டும்? அவர்களுடைய சிங்கள அடையாளத்தின் அடிப்படைத் தன்மையே அவர்களை இவ்வாறு செய்யத் தூண்டுகின்றது என்பது எனது கருத்து.
தமிழர் பற்றிய சாதகமற்ற வரலாற்று பார்வைகளும் ~சிங்களமாய் இருத்தல்| என்ற உளநிலைக்கு இன்றியமையாத அத்திவாரமாக இருக்கின்றன என்பதை நாம் நோக்க வேண்டும்.
சிங்கள தேசியவாதத்தால் நாம் கடந்த 56 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் பாதிப்புகளுக்குள்ளாகி வந்துள்ளோம். ஆகவே எமது உரிமைகளினை நாம் சிங்கள பேரிவாதிகளிடம் கேட்டுக் கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை. எத்தனை தடவை சிங்கள அரசுகளுடன் பேச்சு மேசையில் பேசியிருப்போம் ஏதாவது பலம் கிடைத்ததா? இனியும் நாம் பொறுமைகாத்து பேச்சுக்கு செல்வதில் அர்த்தமில்லை. சிங்கள அரசபயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்று சேரவேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நின்று கொண்டு இருக்கின்றோம்..
எமது விடுதலையை நாம் உறுதிசெய்யும் நான்காம் கட்ட ஈழப்பபோரின் ஆரம்பப்பகுதியில் நின்று கொண்டு சிங்கள அரசபயங்கரவாதத்திற்கு எதிராக சவால் விடப்போகின்றோம் என்ற யாதார்த சிந்தனை இயல்பாகவே எம்மில் எழுந்துள்ளது. எமது தலைவரின் வழிகாட்டலும், தளபதிகளின் இராணுவத் தந்நிரோபயங்களும், விடுதைப் போராளிகளின் போரிடும் நுட்பமும், மனேபலமும் தமிழ்மக்களின் எழுச்சியான போராட்டங்களும் தான் எமது இருத்தலுக்கான நியாயங்களாக இருக்கின்றன.
நான்காம் கட்ட ஈழப்போரில் தென்னிலங்கை தான் விடுதலைப்புலிகளின் போரியல் அரங்காக திறக்கப்பட போகின்றதா? என்ற கேள்வி தென்னிலங்கை இராணுவப் போரியல் ஆய்வார்களின் சிந்தனையில் தட்டுப்பட்ட ஒரு விடையம். இது மறுப்பதற்கு இல்லை அவ்வாறு இருந்தாலும் அவர்களின் தாக்குதல்கள் எவ்வாறு அமையப் போகின்றது என்பது புரியாத புதிராக இருக்கும். அத்தொடு உலகப்போரியலை ஒத்த தன்மை மற்றும் வரலாற்றியல் சார் இராணுவ நடவடிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உலக அரங்கில் விடுதலைக்காக போராடிய, போராடும் அமைப்புக்களில் விடுதலைப் புலிகள் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். போராடும் காலத்திலேயே ஒரு நாட்டிற்குரிய உட்கட்டமைப்புக்களை சிறப்பாக நிறுவியதுடன், ஒரு வலிமையான தேசத்திற்குரிய முழுமையான படை அமைப்பையும் கொண்டுள்ளார்கள். தரைப்படை, கடற்படை, காவல்படை, விசேட படை அணிகள் என விரிவாக்கம் பெற்ற படையணிகள் தற்போது விமானப்படையையும் கொண்டுள்ளனார் இருப்பினும் விடுதலைப்புலிகளின் நான்கு படையணிகளும் போரியல் கள அரங்கின் தமது வீரத்தினையும், சாதனைகளினையும் வெளிப்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை.
சிறிலங்காவின் நாடாளுமன்றம், முக்கிய பொருளாதார வர்த்தக நிலைகள், கட்டுநாயக்கா விமானத்தளம், சிங்கள முப்படைகளின் தலமையகங்கள், இராணுவப்புலனாய்வுத் தலமையகம். பலாலி விமானத்தளம் முக்கிய இராணுவ பரிவர்த்தன நிலையங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். விடுதலைப்புலிகளின் அதி உன்னத தாக்குதல்களுக்கு இவை உட்படப் போகின்றன.
2001ம் ஆண்டில் புலிகளின் விசேட கரும்புலி படையணியால் மேற்கொள்ளப்பட்ட கட்டுநாயக்கா தாக்குதலும் அரசின் போரிடும் வலுவை மேலும் உடைத்துவிட்டது. அதாவது அங்கு இழந்த விமானப்படை விமானங்களை விட சர்வதேச விமான நிலையத்தில் சிங்கள அரசின் விமானங்களுக்கு ஏற்பட்ட அழிவும் அதன் தொடர்ச்சியாக சுற்றுலாத்துறை, அன்னிய முதலீடு என்பவற்றில் ஏற்பட்ட வீழ்ச்சிகளும் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது.
2001 இல் சிங்கள அரசின் பொருளாதார வளர்ச்சி -1.4 விகிதம் என்றால் போரின் வலிமை எப்படிப்பட்டது என சொல்லத் தேவையில்லை என்பது ஒருபுறம், இதன் பின்னர் சிங்கள அரசால் போரை தொடர முடியாதது என்பது மறுபுறம். போர் புரிவதற்கு பொருளாதாரம் மிக முக்கியமானது. Marx and Lenin இன் கருத்துப்படி படை பலமும் பொருளாதாரமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒரு நீண்ட போரின் வெற்றி நாட்டின் பொருளாதார வலுவில் தங்கியுள்ளது. அதாவது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமெனில் சமரை விரைவாக முடிக்க வேண்டும் மாறாக சமரை தொடர வேண்டுமாயின் நாட்டை வளமாக வைத்திருக்க வேண்டும் என்ற கருதுகோள் நடைமுறையில் உள்ளது.
சிறிலங்கா அரசைப் பொறுத்தளவில்; பொருளாதார வளர்ச்சியும் இல்லை நாட்டை வளமாக வைத்திருக்கவும் இல்லை இந்நிலையில் போரியல் நடவடிக்கையினை சிறிலங்கா அரசு முன்னெடுத்தால் பாரிய இழப்பு எற்படும் என்பது மிகத்தெளிவாகத் தெரிகின்றது. விடுதலைப்புலிகளின் தாக்குதல் படைச்சம நிலைக்கு தென்பகுதி எப்பொதுமே இலக்காவது தவிர்க்கமுடியாதது. இந்த நிலையில் தென்பகுதி சிங்கள மேலாண்மைவாதிகளின் வீடுகளுக்கு மேலாக வான்புலிகளின் வான்படை விமானங்கள் பறக்கும் பறக்கத்தான் போகின்றன அப்போது எமக்கு வலியைத்தந்தவன் அதன்வலியை உணரத்தான் போகின்றான்; என்ற உண்மையை இன்று கூறிவைக்க விரும்புகின்றேன்.
ஜெ . டானியல்.
|