|
சர்வதேசம் என்னும் வார்த்தையை எம் மக்கள் ஒரு அறுதல் மார்க்கமகவே எதிர்பார்க்கின்றனர். ஒருவர் தனக்கு அனைத்து பக்கத்தாலும் தாங்கமுடியாத துயரம்;மற்றும் மரண பயம் வரும் போது கடவுளே என்பது போல் சர்வதேசமே எம்மை திரும்பி பார்- கருணைகாட்டு என்று மரண வலியில் பிணவசமும் கெந்தக மணமும் கலந்த காற்றும், பசியின் வலியும் பச்சிளம் பாலகரின் பரிதவிப்பும், வீடிழந்து தோட்டம் துரவிழந்து மரநிழலில் அவல வாழவும், நோய்களும் அதை தீர்க்க முடியாத துயரமும், ஒட்டிய வயிறும் குழிவிழுந்த கண்களுமாக இன்றய கண்கள் கானலாகிறது. கனவுகள் கலைகிறது. கனவுகள் கலையட்டும், உண்மைகள் வெளிச்சத்துக்கு வரட்டும் மரணப்படுக்கையில் உண்மைகளை மருந்தாக்கி எழுவோம்.
சர்வதேசத்தை ஒரு முறை ஆழ நோக்க முற்படும் போது தாயின் மணிக்கொடி உறவென்று வர்ணிக்கப்படும் எம் தலைமாட்டில் இருக்கும் இந்தியாவில் இருந்தே ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இன்று இலங்கையின் இறையாண்மை விசயத்தில் அதிகம் அக்கறைப்படும் இந்தியாவுக்கு அன்று ஆயுதமும் பயிற்ச்சியும் போரளிகளுக்கு கொடுத்து தனிநாட்டு போரட்டத்தை முன்னெடுக்க உதவும்போது இலங்கை இறையாண்மை விசயம் எங்கே போனது என்ற கேள்வி எல்லேருக்கும் உண்டு. அன்றும் இந்தியா ஒரு குழுவை வழர்க்கவில்லை. பலகுழுவை வழர்த்தது. குழுவுக்குள் மோதலை எதிர்பார்த்தது. ஏதிர்பார்த்தபடி நடந்தது. நுடந்து கொண்டிருக்கிறது. அகிம்சை வழியில் வந்த இந்தியா தியாக தீபம் திலீபனதும் எம் தாய் பூபதியினதும் அறப்போரட்டத்தை அலட்சியப்படுத்தியது. ஆவர்கள் பசியல் துடிதுடித்து மடியும்வரை வேடிக்கை பார்த்தது. ஆயிரக்கணக்கன தமிழ் மக்கள் அமைதிப்படையால் கொல்லப்பட்டனர். குமரப்பா புலேந்திரன் தொடக்கம் நூற்றுக்கணக்கான போரளிகள் கொல்லப்பட்டனர் கொல்லப்பட்டவர் அத்தனைபேரும் தமிழர் இந்த வகையல் சிஙகள பேரினவாத இறையாண்மை என்பது பேணப்பட்டுள்ளது என்பது உண்மை.
யாழ்நகரில் திரும்பும் இடமெல்லாம் ராணுவம் நிற்கும் நிலையில் வெள்ளை வானில் அவர்களையும் அவர்கள் சார்ந்தோரையும் தவிர வேறு யாரும் ஓடித்திரிய முடியாதென்பது மக்களுக்கு மட்டுமல்ல சர்வதேசத்துக்கும் தெரியும். கடத்தலும் கொலையும் யார் செய்கிறார்கள் என்பதும் தெளிவாக தெரியும். சர்வதேசம் கவலைப்பட வேண்டுமானல் 50 மக்கள் ஒன்றக கோரமாக படுகொலை செய்யப்பட வேண்டும். கண்டிக்க வேண்டுமனால் அதன் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் ஒன்று இரண்டாய் கொலைகள் ஆயிரத்தை தண்டும் போதும் ஆது ஒரு பொருட்;டாக மாட்டாது.
யாழில் பசியால் வகுப்பறையில் மயங்கிவிழும் சிறர்கள் பரிதவிக்கும் முதியவர்கள் பாலுக்களும் பாலகர்கள் சர்வதேசத்துக்கு தெரியமல் இல்லை. ஒரு கிலோ அரிசி பருப்பு சீனியின் விலை தெரியாமல் இல்லை தீப்பெட்டியின் விலையும் என்னவென்று தெரியும் வாகரையின் ஓலம் கேட்காத அளவுக்கு செவிடர்கள் இல்லை மாரிமழையில் மரநிழலில் பல்லாயிரம் மக்கள் பரிதவித்து வாழும் நிலையை காணத அளவுக்கு குருடரும் இல்லை. பேரினவாதப் பேய்கள் மேல் நடவடிக்கை எடுக்க மாட்டாரகள். கண்துடைப்பு கவலைகளாலும் நோகத கண்டனங்களாலும் கடத்தல்கள் கொலைகள் நிக்காது அரிசிவிலை குறையாது அவல வாழ்வு தீரது என்பது தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் தெரியும் ஆனால் என்ன பிரயேசனம் நம்மேல் கரிசனைப்பட நாமென்ன எண்ணை வியாபாரிகளா இல்லை அவர்கள் வியாபாரத்தின் கூட்டாளிகளா?
பேரவலத்தை ஏற்படுத்தும் தைரியம் பேரினவாத அரசுக்கு யார்கொடுப்பது? ஆறு லட்சம் மக்களை பட்ணிபோடும் துணிவு யார் கொடுத்தது அகதியாக்கி அகதிகள் வாழும் இடத்தில் குண்டு போட்டு கொல்லும் தைரியம் யார் தந்தது? இதே சர்வதேசம் தான் கொடுத்தது. போர் காலத்தில் புலிகளை தடை செய்யாத மேற்குலகம் சமாதானகலத்தில் அத்தோடு அதிகார பகிர்வையோ ஆக குறைந்தது சுனாமி உதவிகட்டமைப்பை கூட எதிர்த்து ஆட்சிக்கு வந்த இனவாத அரசுக்கு தயிரியம் கொடுப்பது போல் தடை செய்தது, இன்று அப்பாவி மக்களை கொன்று குவிப்பது முதல் பட்டினி போடுவது வரை புலிகளை சட்டி செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் நடக்கும் என்பதும் தடை செய்யும் போது சர்வதேசத்துக்கு தெரியாமல் இருக்க ஒரு நியாயமும் இல்லை, சமதரப்பாக பேச்சுக்களில் விமானப்படைக்கான பயிற்சி மற்றும் இதர இரணுவ தளபாடங்கள் யாவும் யாருடையது? சுpறார்களில் நாடி இலங்கைக்கு வருபவர்கள் யார்? இதற்கு விடையாகவும் சிறார்கள் மேல் கரிசனைப்படுபவர்களே உள்ளனர்
சிங்கள பேரினவாத வல்லுறுகள் சர்வதேசத்தின் செல்லப்பிள்ளைகள் என்றால் அது ஒன்றும் மிகையனது இல்லை. பாகிஸ்த்தான் பல்குழல் பீரங்கிகளை வளங்கினால் இந்தியா பதிலுக்கு ராடர் கருவிகளை கொடுக்கும் அல்லது பயிற்ச்சியை வழங்கும்;. பாகிஸ்தான் தளபதிகள் போர் நிலையை பார்வையிட்டால் அடுத்து இந்திய தளபதிகள் வருவார்கள். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது இங்கு நன்றாக பொருந்தும்;;. இதில் தாமதங்கள் ஏற்படும் பட்சத்தில் அரச பிரதிநிதி ஒருவர் இரு நாட்டுக்கும் மாறி மாறி போய்வருவார். நடக்கவேண்டிய காரியங்கள் வேகமாக நடக்கும்;.
பாகிஸ்தானுக்கு மேற்குலகம் கொடுக்கும் தீவிரவாதத்துக்கு எதிரான அழுத்தமும் இலங்கையில் ஆழமாக காலுன்ற ஒரு காரணமானது. இஸ்லாமிய தீவிரவாத சக்திகளின் பாதி நடவடிக்கையையாவது இலங்கையில் தள்ளிவிடுவது தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. இலங்கைக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்குமிடையிலான மக்கள் தொடர்பு இலங்கைக்கு பாலியல் பலவீனத்தில் வரும் மேற்குலகத்தினர் மற்றும் தென்னிந்தியாவுக்கு இலகுவாக நுளைய கூடிய கடல்வளித்தெடர்பு என்பன ஆழமாக காலுன்ற காரணமானது இந்த வகையில் இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கின் யிகாத் கட்டமைப்பை ஸ்திரமாக்கியது. நிலுவையிலிருந்த இந்திய உளவு முகவர்கள் இரட்;டை முகவர்களாக்கினர்.(தினார்களுக்கு முன்னால் ரூபாய்கள் தாக்குப்பிடிக்க முடியாது) இவ்வாறு நிலமை மோசமாவதை உணரந்த ஓய்வு பெற்ற இந்திய உளவுத்துறை அதிகாரிகள் கூச்சல் போட(பாகிஸ்த்தான் விமானிகள் கிபிர் விமானத்தை ஓட்டும் போது தவறுதலாக வேறு திசைக்கும் பறக்கலாம் என்ற கவலை இருக்கத்தானே செய்யும்) இந்திய அரசு பாகிஸ்தான் நடவடிக்கை பற்றி நோர்வே அனுசரணையாளரிடம் நேரடியக முறையிடுமளவுக்கும் கொழும்பில் பாகிஸ்த்தான் தூதுவர் குண்டுதாக்குதலுக்கு உள்ளாகும் அளவுக்கும் நிலமை போனபோது ஆனால் இலங்கை அரசு நினைத்தால் கூட இனி ஒன்றும் செய்யமுடியாது என்னுமளவுக்கு கட்டமைப்பு இறுக்கமாகி விட்டது என்றே நம்பப் படுகிறது, இந்த முறண்படு கிளம்பிய போது தமிழ் மக்களுக்கு ஒரு நப்பாசை தோன்றியது அது இந்தியா இனி தமிழருடன் அநுசரித்து போகலம் என்பதாகும் முல்லையில் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்த தமிழக உணவாளர்கள் போரட்டமும் இந்த நப்பாசைக்கு நம்பிக்கை கொடுத்தது ஆனால் பாகிஸ்தானின் இடத்தை இலங்கையில் தான் கைப்பற்றும் முயற்சியே இந்தியாவுக்கு உண்டு என்பதை தனக்கே உரிய பாணியில் நிருபிக்கிறது. மிக் ரக விமானங்களுக்கான பயிற்சியை இலங்கை படைக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது அதிலும் ஓரு பயிற்சித்தளம் தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஆகும். ஏதிர் வரும் காலங்களில் மிக் விமானங்கள் நொந்து நூலாகிப்போன மக்களின் மிச்;ச உயிரையும் எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை, தாய்பாலே பிள்ளைக்கு விசமாவது போல் ஒரு உணர்வு. கணணிக் காலமானலும் இராமனும் இராவணனும் புராணத்திலும் புத்தகத்திலலும் மட்டுமில்லை.
அடுத்து ஒரு விசேட கோட்டன் இஸ்ரேல், இது இலங்கைக்கு எப்படி கடன் வாங்குவது என்றும் செல்லும் வாங்கிய மில்லியன்கனை சுலபமாக எடுத்தும் கொள்ளும். மணலாறு வெலியோயா என்று மறி தமிழர் தாயகம் துண்டாடப்பட்ட வெலியோயா அபியவிருத்தி திட்டம் முதல் மகாவலி அபிவிருத்திட்டம் வரை பல திட்டங்களை தீட்டி கொடுத்து அபிவிருத்தி பணத்தின் அரைவாசிக்குமேல் ஆயுத விற்பனை செய்து அபகரித்தது. என்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடன் வழங்கல் என்று அமரிக்கா கொடுப்பதும் கடனளியாக்கிவிட்டு கொடுத்த பணத்தை இஸ்ரேல் அமரிக்க கூட்டுத்தயாரிப்பு விமானங்கள் அயுதங்கனை விற்று லாபத்தோடு பெற்றுக்கொள்வதும் வழமையான விடயம், சுனாமிப்பணம் தமிழர் பகுதிக்கு வரமல் சேர வேண்டிய இடம் சேர்ந்து விட்டது,
பனையால் வீழ்ந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் கிபிர் சுப்பர் சொனிக் சுப்பர் டோறா போன்ற கொடிய கொலை கருவிகள் வெந்த புண்ணில் திரவகம் ஊற்றுவது போல் குழந்தை பெரியோர் வயது வேறுபாடின்றி கொன்று குவிக்கிறது. கொடிய கிபிர் வரும் போது சத்ததில் குழந்தைகள் இதயம் பயந்து துடிப்பதை கட்டியணைத்து குப்புறப்படுக்கும் தாய்க்கே புரியும்;
கொடிய இந்த கொலை கருவிகளை அளிக்க ஆயுதமில்லாதபோது தன்னையே ஆயுதமாக்கி கரும் புலியாகி பகை முடிக்கிறான் புலி வீரன். உலோக ஏவுகணைகளுக்கு பதிலாக உயிரும் உணர்ச்சியும் கண்ணீரும் உள்ள ஒரு மானுடனக எம் மாவீர செல்வங்கள் கெந்தக நெருப்போடு நெருப்பாவதுக்கு சர்வதேசத்தின் வஞ்சகத்தின் பங்கு எவ்வளவு தூரம் உள்ளது?
சர்வதேச சட்டங்களுக்கு புறம்பான கொடிய ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு உரிமை போரட்டத்தை பயங்கரவத போரட்டம்;, உலக அமைதிக்கு அச்சுறுத்தல் என தொண்டை கிழிய கத்தி யூதர்களின் பத்திரிகையான யெவழையெட pழளவ கனடா நாட்டில் புலிகளை தடை செய்ய பிரதான காரணமானது. ஏனைய கனேடிய பத்திரிகையை விடவும் யுத இனத்தவர் பத்திரிகை துள்ளி குதிப்பதின் கபடத்தனத்துக்கு பின்னால் எத்தனை கொடிய ஆயுதங்கள் விற்கப்பட்டதென்ற கணக்கும் அதற்கான பயங்கர வாதம் என்ற நியாயப்படுத்தலும் மட்டுமே உள்ளது.
இவ்வாறன நியாயப் படுத்தல்களுக்கு பக்க பலமாக சிங்கள பேரினவாத அரசுகள் தமிழரை பவித்தது. இந்த வகையில் கதிர்காமர் என்ற தமிழ்ப் பெயர் உலகெல்லாம் வலம் வந்து கொலைக்கருவிகளை தருவிக்க நன்கு பயன்பட்டது. இலங்கை வரலாற்றில் அதிகம் விமானப்பயணம் செய்தவரும் இவரே. இதேபோல் ஆங்கிலேயர் கலந்தொட்டே வறிய தமிழரை வதைத்து கல்வியை தட்டிப்பறித்து அரச பதவிகளில் கோலோச்சிய தமிழர் வம்சாவழிகளை இனம்கண்டு அவர்களையும் நியாயப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியது, இவ்வாறானவர்களின் ஆங்கில அறிவை வைத்து தனது பயங்கரவாத செயல்களை போரளிகளின் குற்றங்களாக சர்வதேசத்தின் முன்னால் தமிழர்களின் வாயலே முன்வைத்தது, சிங்கள பேரினவாதிகள் அடிக்கடி தமிழ் புத்தியீவிகளே சொல்கிறார்கள் என்று உதாரணம் எடுத்து சர்வதேசத்தின் முன் ;வைப்பார்கள், இந்த புத்தியீவிகளின் பரப்புரைகளுக்கு இந்திய உளவு நிறுவனம் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் போரளிகளுக்கு இடையிலான மோதலும் சாதகமாக அமைகின்றது
இவ்வாறு கோரமாக தமிழரை கொன்றொழிக்க துணைபோனவர்களுக்கு பல்கலைகழக மானியத்தில் அதிகாரபதவி, ஆரசபதவி உளநாடு வெளிநாடுகளில் உல்லாச வீடுகள் மேற்படிப்புக்கான அரச சார்பு பரிந்துரைகள் பெருந்தெகை பண உதவி என வழங்கப்படுகிறது, இவ்வாறு மனித உரிமைகள் என்ற முக மூடியுடன் அரச கைக்கூலிகளாய் செயல்படும் இவர்கள் போரட்டத்துக்கு எதிராக எழுதுவது, ஆதரவாக எழுதுபவர்களை தடுப்பது, இடது சாரி ஆதரவாளர் குரல்களை மட்டுப்படுத்துவது, தடைகளை தாண்டி உண்மை உணர்வுடன் எழுதுபவர்களை அரசுக்கு இனம்காட்டி கொல்வது. போன்ற பன்முக நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது, இதற்கு தங்களை விட புத்திசாலிகள் இருக்க கூடதென்ற ஒல்லாந்தர் காலம் முதல் ஒட்டிக்கொண்டுவரும் வன்மமும் ஒரு காரணம் என்றால் அது மிகையில்லை, தமது இனம் எவ்வகை கொலை கருவிகளால் கொல்லப்படுகிறது, அதன் பயன்பாடுகளால் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் என்ன, எத்தனை ஆயிரம் மக்கள் ஊனம்மாக்கப்பட்;டனர,; எத்தனை லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர் என்ற பிரச்சனைகளை புத்திமான்கள் என்றவகையில் சர்வதேசம் முன்னால் முன்வைக்க வேண்டியவர்களே கொடும் ஆயுதங்கள் தங்குதடையின்றி வருவதர்க்கும் தமிழ் மக்கள் கொல்லப்படவும் காரணமாகின்றனர், வேற்றின கல்வி மான்கள் சிலர் மிக மிக சிறிய ஒரு பிரதேசத்தில் உலகின் பல முனைகளில் உள்ள கொடிய ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவது தமிழீழத்தில் மட்டுமே. இந்து மற்றும் ஆகிம்சை வழி இந்தியாவின், இஸ்லாமிய பகிஸ்த்தான் மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகள், கிருத்துவ ஆதிக்க அமரிக்க ஜரோப்பிய, புத்தமத சாயல் உள்ள சீன என்று மத பேதங்களோ முதலாளித்துவம் சார்ந்த நாடுகள் அல்லது பொது உடமை சார்ந்த நாடுகள் என்ற பேதங்களோ வளர்ந்த நாடுகள் வளர்ந்து கொண்டிருக்கும் நாடுகள் பின்தங்கிய நாடுகள என்ற பேதமின்றி தமிழரை கொல்ல கொலை கருவிகள் வழங்கப்படுகின்றது. இவ்வாறு ஒரு சிறிய பிரதேசத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் மீது திணிக்கப்படும் சர்வதேச வஞ்சகத்தையும் அதை காவிவரும் சிங்கள பேரனவாத்தையும் துணையான துரோகத்தமிழர் சதிகளையும் தாண்டி மூன்று தசப்பத்தமாக நகரும் போரட்டத்தின் மூலசக்தியாக மாவீரர்களின் தியாகம் உள்ளது,
ஒவ்வொரு மாவீரனது வீர மரணத்தின் பின்னாலும் பெரும் வீரசாதனை வரலாறு உண்டு, அவர்கள் சீன தென்னாபிரிக்க டாங்கிகளை எதிர் கொண்டவராக, பாகிஸ்தானின் பல்குழல் பீரங்கிகளை எதிர்கொண்டவராக, பிரிட்டனின் பீரங்கிகளை எதிர்கொண்டவராக, இஸ்ரவேல் அமரிக்காவின் கடற்கலங்களை வான்கலங்களை எதிர்கொண்டவரக என்னும் பல நாட்டினது போரக்கலங்கனை எதிர்கொண்டு சமர்புரிந்தவராக மாவீரகள் உள்ளனர.; பல நாடுகளில் பல யுத்தங்கள் நடந்துள்ளன அவர்கள் ஏதோ ஒரு தரப்பினது கலங்களை அது பொது உடமை சார்ந்த அல்லது முதலாளித்துவ தரப்பினதோ அல்லது மத இன சார்புடையவரது கலங்களையோ எதிர்கொண்டிருப்பார் ஆனால் எம் மாவீரர்கள் எல்லாத்தரப்பினரதையும் மொத்தமாக எதிர்கொண்டவரக உலகில் வேறுபட்டு நிக்கின்றனர்
இதேபோல் ராணுவ பலம் வாய்ந்த, அனுபவம் வாய்ந்த நாடுகளின் போர்த்தளபதிகள் முன்னெடுத்துக்கொடுத்த திட்டங்களை எதிர்கொண்டவராக. இதிலும் பல்வேறு தரப்பினரது திட்டமிடல்கள், போர் பயிற்ச்சிகளை பெற்ற இரணுவத்தை எதிர்கொண்டவரக உள்ளனர். ஊதாரணமாக இந்தியத்தளபதிகள் பகிஸ்தான் தளபதிகள் இருவரும் தங்கள் அனுபவத்தில் இருந்து பயிற்ச்சியும் ஆலோசனையும் கொடுக்கிறார்கள். இஸ்ரேல் அமெரிக்க பிரிட்;டன் போன்ற நாடுகளும் பயிற்சி அலோசனை வழங்குகின்றனர், இவ்வாறு உலகின் பல்வேறு போர்களங்களில் மூலம் பெறப்பட்ட அநுபவங்களில் இருந்து திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட போர் நடவடிக்கைகளை சந்தித்த ஓவ்வொரு மாவீரனது போர்க்களமும் வித்தியசமானது உலகின் எனைய போர்க்களங்களில் இருந்து வேறுபட்டது.
உயிரை ஆயுதமாக்கி எதிரியின் பாசறை அழித்தவர்கள் நவீன போர்க்கலங்களை அழித்த மாவீரர்கள் நஞ்சுண்டு பாசறைகளை காத்தமாவீரர்கள் பெரும் சமர்புரிந்து வீரகாவியமானவர்கள் அகிம்சை வழியில் வீரகாவியமான தியாகி திலீபன் என எம் தேச விடுதலைக்காக காலம் நேரத்துக்கேற்ப சூழலுக்கு ஏற்ப போரடி மடிந்து விடுதலையின் பாதையாக தேசமெங்கும் விதைக்கப்பட்டுள்ளனர்
ஒரு பிள்ளை பெற்ரோரின் சொல்லை மதிக்காமல் புகைக்கலாம் மது அருந்தலாம் கேளிக்;கை விருந்துகளில் உலகில் தங்கங்த்தையும் வைரத்தையும் தோண்டிக்கொண்டிருக்கின்றனர் நாம் விதைத்துக்கொண்டிருக்கிறோம் கார்த்திகையில் மழைச்சாரல் வருமோ இல்லையோ மக்களின் கண்ணீரின் சாரலில் கார்த்திகை பூக்கள் நனைகின்றது, தலைவரின் சிந்தனைக்கும் செயலுக்குகம் பலமாகவும், போரட்டத்தை தாங்கும் துண்களகவும் வாழும் எம் மாவீரர்களுக்கு என்றும் மரணமி;ல்லை, அவர்கள் காட்டும் வழியில் விடுதலை வெகு தூரமில்லை,
மலரவன் (கனடா)
|