|
தமிழீழப் பேரரசும் தமிழ் மக்களும் |
|
|
|
Wednesday, 06 December 2006 |
|
கார்த்திகை 27 . இந்து சமுத்திரத்தின் ஒரு சிறு தீவை உலகமெங்கும் உற்று நோக்கும் பெருமை பெற்ற நாள். தம் உதிரத்தாலும் உயிராலும் சுதந்திரப் பயிரை உறுதியேற்றிய வீர மறவர்களின் தியாகத்தை நினைவு கூரும் நாள். அதே நேரம் இந்து சமுத்திரப் பிராந்திய அரசியல், மையங் கொண்டிருக்கும் அரசியல் சுழற்சியின் மையப் புள்ளியாக விளங்கும் தமிழீழத் தேசியப் போராட்டத்தின் தலைமைத்துவம் வாய்திறந்து எதிர்கால அரசியல்ப் போக்கின் திசையினை எதிர்வு கூரும் நாள்.
இதுவரை உலக நாடுகளின் எதிர்பார்ப்புக்கும் ஆலோசனைகளுக்கும் ஏற்ப
இழுபட்டு சிங்களப் பேரின வாதிகளின் முகத்திரையைக் கிழித்து தக்க
ஆதாரத்துடன் நிறுவுவதற்காக தமிழ்த் தேசியம் எடுத்த நடவடிக்கைகளும்
விட்டுக் கொடுப்புகளும் முடிவுக்கு வந்த நாள். சிங்களப் பேரினவாதிகளின்
தகிடுதத்த அரசியலையும் தமிழருக்கான தக்க தீர்வு எதுவுமற்ற அவர்களின் கையறு
நிலையையும் தெளிவாக சர்வ தேசம் புரிந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழ்த்
தேசியத்தின் பாதை எதுவென்பது வெகு தெளிவாக எடுத்துக் கூறப்பட்ட நாள்.
சுந்திரத் தமிழீழப் பேரரசைத் தவிர வேறெதுவும் தமிழருக்கான அபிலாசைகளைப்
பெற்றுத் தரமாட்டாது என்று நிறுவப்பட்ட நாள். சர்வதேசத்துக்கும் சிங்களக்
கபட அரசியல் வாதிகளுக்கும் இனியும் தமிழ்த் தேசியம் ஏமாறத் தயாரில்லை
என்பதையும் ஏமாற மாட்டாது என்பதையும் வெகு ஆணித் தரமாகக் கூறப்பட்ட நாள்.
சமாதானம் என்றும் அதன் நிமித்தமான பேச்சுவார்த்தை என்ற போர்வையிலும்
விரயமாக்கப் பட்ட நாட்களையும் வீணே பறி கொடுத்த உயிர்களையும் நினைத்துப்
பார்க்கின்றோம். சிங்களப் பேரினவாதிகளின் நஞ்சு கலந்த உள்ளக் கிடக்கையைத்
தெளிவாக சர்வதேசம் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவு படுத்த எமக்கு
நிறையவே சந்தர்ப்பங்களும் கிடைத்திருந்தன. உயர்பாதுகாப்பு வலையங்களை
அகற்றுதல் , சுனாமிப் பாதிப்பில் ஏற்பட்ட அனர்த்தங்களை மீளக்கட்டமைத்தல்,
பொருளாதாரத் தடைகளை அகற்றி சுமுக நிலமையைக் கொண்டு வருதல் போன்ற பல
முன்முயற்சிகள் பற்றிய அனைத்துப் பேச்சு வார்த்தைகளும் சிங்களப் பேரின
வாதத்தின் அழுகிய மன நிலையை வெளிக் கொண்டு வருவதற்கும் சர்வ தேசத்திற்கு
மட்டுமல்லாது தமிழ் மக்களும் நன்கு புரிந்து கொள்ளும் வகையில்
வெளிச்சத்திற்கு கொண்டு வரப் பெரிதும் உதவியது.
சிங்களப் பேரினவாதிகளுடன் சமாதானம் பற்றியும் பேச்சு வார்த்தையின் மூலம்
தீர்வு கண்டு விடலாம் என்றும் அற்ப சொற்ப நம்பிக்கைகளுடன் இருந்த மிதவாதத்
தமிழ்மக்களின் நம்பிக்கையையும் ஆட்டங்காணச் செய்ததுடன் உண்மை நிலையையும்
புரிந்து கொள்ள இப் பேச்சுவார்த்தைகள் பெரிதும் உதவியிருக்கின்றன. ஈரினம்
இரு நாடு என்பதே யதார்த்த பூர்வ சாத்தியம் என்பதை உலகுக்கு உரத்துச்
சொல்லியிருக்கின்றது.
தமிழீழத் தேசியத் தலைவரின் உரை இந்தச் செய்தியை மிகவுரக்கச்
சொல்லியிருக்கின்றது. இதுவரை செய்த விட்டுக் கொடுப்புகளும்
சமாதானத்துக்கான முயற்சிகளும் விழலாய்ப் போனதையும் அதற்கான தமிழர்
தரப்பின் இழப்புகளையும் விளக்கமாகவே தெளிபுபடுத்தியிருக்கின்றது.
இனியும் இவ்வாறான வெற்றி அளிக்காத வீண் வேலைகளில் காலத்தை போக்குவதற்கு
தமிழ்த் தேசியம் தயாரில்லை என்பதையும் இது வெறும் ஓட்டு சேர்க்கும்
அரசியல் அல்ல என்பதையும் சுதந்திரப் போராட்டம் என்பதையும் அதற்கான
விலையைக் கொடுக்க தமிழ்த் தேசியம் தயாராகி விட்டது என்பதையும் தெளிபு
படுத்தியுள்ளது.
இதற்கு மேலும் அகிம்சை பேசுவோருக்கும் அடிமை சேவகம் செய்ய விழைவோருக்கும்
ஈழப் பேரரசில் இடம் இல்லை என்பதை தெளிபு படுத்தியுள்ளது. இன்று முதல் எமது
ஒரே சிந்தனை சுதந்திர ஈழப் பேரரசு பற்றியே இருக்க வேண்டும் என்பது
முடிந்த முடிபாக்கப் பட்டுள்ளது.
இங்கு காட்டிக் கொடுப்போருக்கும் கூட்டிக் கொடுப்போருக்கும் இடம் இல்லை
இவர்களைத் தெருவில்ப் போட்டுத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும். இது ஒவ்வொரு
உணர்வுள்ள தமிழனின் கடமை மட்டுமல்ல உரிமையும் கூட.
பட்டம் பதவிக்காக ஒட்டிக் கொண்டிருப்போருக்கும் பம்மாத்துக் காட்டி ஊரை
ஏய்ப்பவருக்கும் இனி இங்கு வேலையில்லை. ஒரே சிந்தனை ... அதையே செயல்
கொண்டோருக்கே இங்கு வேலை காத்திருக்கின்றது.
புலி வீரர்கள் அனைவரும் கரும் புலியாவார், தமிழ் மக்கள் அனைவரும் புலி
வீரர் ஆவார் என்பதையே மாவீரர் உரை எடுத்துச் சொல்லியிருக்கின்றது. தமிழ்
மக்கள் வேறு விடுதலைப் புலிகள் வேறல்ல. தமிழ்த் தேசியத்தின் வெற்றியும்
தமிழீழப் பேரரசின் மலர்வும் இதை நாம் புரிந்து கொள்வதிலேயே தங்கியுள்ளது.
இதனை எந்தச் சக்தி எதிர்த்து நின்றாலும் அவர்கள் எம் எதிரிகளே.
உள்நாட்டுச் சக்தியாயினும் வெளி நாட்டுச் சக்தியாயினும் அவர்கள்
எதிர்க்கப் பட வேண்டியவர்களே. வன்மனம் கொண்ட படைப்பலம் கொண்ட அரசுகளை
எதிர்த்து ஒரு கியுபாவோ இல்லை ஒரு வியற்நாமோ மட்டும் தான் தோன்று மென்பது
விதியல்ல. ஒரு ஈழப் பேரரசும் விரவில்த் தோன்றும் என்பதுவும் உறுதி.
மன உறுதி கொண்ட மாந்தர் இருக்குமிடமெல்லாம் சுதந்திரமும் கூடவே இருக்கும்.
சின்னஞ்சிறு வியற்நாமோ சின்னஞ் சிறு கியூபாவோ மனிதர்களின் மனவுறுதியால்
வெல்லப் பட்டதேயன்றி ஆயுதத்தாலோ அதிகாரத்தாலோ வெல்லப் பட்டதல்ல. அதேபோல
இரக்கத்தால் தானம் கொடுக்கப் பட்டதுமல்ல.
எமக்கான தேவை எதுவென்பதை நாம் அறிந்திருக்கின்றோம். அதனை வெற்றி கொள்வதே
எமது சிந்தனையில் இருக்க வேண்டும். அதுவே எப்போதும் எமது சிந்தனையாகவும்
இருக்க வேண்டும்.
இளந்திரையன்
|