|
இலங்கை பிரச்சினையை இந்தியா தீர்க்க வேண்டும்' சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது |
|
|
|
Thursday, 07 December 2006 |
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து சட்ட சபையில் இன்று உறுப்பினர்கள் பேசும்போது மிகவும் ஆழ்ந்த கவலை தெரிவித்து பேசினர். இதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்து பேசியதாவது:-ஒவ்வொரு கட்சி உறுப்பினர்களும் தங்களது உணர்வுப் பூர்வமான கருத்துக்களை இங்கு தெரிவித்தார்கள். இந்த பிரச்சினை குறித்து நானும் ஏற்கனவே பேசி இருக்கிறேன். அதையே சொல்லி பிரச்சி னையை தட்டிக் கழிக்க நான் விரும்பவில்லை. தமிழக மக்களின் உணர்வு எப்படி எல்லாம் கடந்த சில நாட்களாக வெளிப்படுத்தப்படுகிறது என்பதை நான் டெல்லி சென்ற போது சோனியாகாந்தியிடமும் எடுத்துக் கூறி இருக்கிறேன்.
இப்போது வாய்ப்பு ஏற்பட்டாலும் டெல்லி சென்று எடுத்துச் கூற கடமைப்பட்டு இருக்கிறேன். பா.ம.க. தலை வர் மணி ஆனாலும்þ டாக்டர் ராமதாஸ் ஆனாலும்þ இலங்கை பிரச்சினையை என்னால்தான் தீர்க்க முடியும் என்று சொல்லும் போது முதல்-அமைச்சர் பதவி இருப்பதால் என்னால் தீர்க்கமுடியும் என்று கருதுகிறார்களா? அல்லது கருணாநிதியால் முடியும் என்று கருதுகிறார்களா? என்று தெரிய வில்லை.
இலங்கை பிரச்சினை நமது உணர்வோடு உயிர் மூச் சோடு கலந்தது. எனவே தனி யாக தீர்மானம் போட்டு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம். நாமும் நெருக்கடிக்கு ஆளாக தேவையில்லை. தீர்மா னத்தை ஒரு வாசகமாக வாசிக்கிறேன்.
"இலங்கையில் தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது. அங்கு நிலைமை மேலும் மோசமாகிறது. இது குறித்து ஆழ்ந்த வேதனையை சபை தெரிவித்துக் கொள்கிறது. பிரச்சினைக்கு விரைவில் ஒரு முடிவு காண மத்திய அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த தீர்மானம் அனைவருக்கும் பொதுவான தீர்மானமாக கருதி நிறைவேற்றி தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.இதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேறியது. நெருடல் இணையம்
|