பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow தமிழீழம் கிடைக்கும் என்று சொன்னால் இப்போதே நாங்கள் வருவதற்குத் தயாராக இருக்கிறோம். - கருணாநிதி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழீழம் கிடைக்கும் என்று சொன்னால் இப்போதே நாங்கள் வருவதற்குத் தயாராக இருக்கிறோம். - கருணாநிதி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 08 December 2006

nerudal_11karunanithi01இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கு உரிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் சட்டப்பேரவையில் நேற்று வியாழக்கிழமை நிறைவேறியது. 

முதல்வர் கருணாநிதி முன்மொழிந்த இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பாமக தலைவர் ஜி.கே. மணி இது தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் என்று கூறி முதல்வர் கருணாநிதி தாமே ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இத் தீர்மானத்தின் மீது அவர் பேசியதாவது:

கடந்த சில நாள்களுக்கு முன்பு டில்லி சென்றிருந்தபோது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஈழத்தமிழர்களின் நிலை காரணமாக உலகத் தமிழர்களின் ஆதங்கம் குறித்து நான் எடுத்துக் கூறியிருக்கிறேன்.

வாய்ப்பு ஏற்படும் போதெல்லாம் டில்லியில் இருப்பவர்களைச் சந்தித்தாலும் அல்லது அவர்கள் இங்கே வரும்போது சந்தித்தாலும் இதை விளக்கிக் கொண்டிருக்கிறேன். இத்தனைக்கும் பிறகு சட்டசபையிலேயே ஒரு தீர்மானம் நிறைவேற்றினால் என்ன என்ற அந்தத் துடிப்பு எல்லோருக்கும் இருக்கிறது.

மணி இதை அணுகுகின்ற அதே கோணத்தில் சுதர்சனம் அணுகுவாரா என்றால் இல்லை. உணர்வைப் பொறுத்த வரையில் ஒன்றுதான். ஆனால் வேறு சில பிரச்சினைகளில், விஷயங்களில் எல்லோரும் ஒரே மாதிரி அணுக முடியாது. அதைப் போல நம்முடைய கோவிந்தசாமி அணுக முடியாது. இவர்கள் அணுகுவதை விட வேகமாக அணுகக் கூடியவர்கள் நம்முடைய விடுதலை சிறுத்தைகள். எனவே பேரவை உறுப்பினர்களிடையிலேயே, இதை அணுகுகின்ற முறையில் வேறுபடுகின்றோம். மாறுபடவில்லை வேறுபடுகிறோம்.

ஆனால் இலங்கைத் தமிழர்களை எப்படி வாழவைப்பது எப்படி காப்பாற்றுவது என்பதில் தான் வேறுபட்ட எண்ணங்கள் இருக்கின்றன. ஆற, அமர யோசித்துப் பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். நாளைக்கு ஆட்சியை விட்டு விட்டு வந்தால் மறு நாள் தமிழ் ஈழம் கிடைக்கும் என்று சொன்னால் இப்போதே நாங்கள் வருவதற்குத் தயாராக இருக்கிறோம். வந்தாலும் கிடைக்காதென்றால் இதை விட்டு என்ன பலன்?

ஆகவே எதைச் செய்தால் தமிழ் ஈழம் கிடைக்கும் அல்லது அங்கே இருக்கின்ற தமிழ் மக்கள் அமைதியாக வாழ முடியும் என்று நாம் கருதிப் பார்க்க வேண்டியுள்ளது.

ஆகவே இங்கே நாம் தனியாக ஒரு தீர்மானத்தைப் போட்டு மத்தியில் இருப்பவர்களுக்கு ஒரு நெருக்கடியை உண்டாக்க வேண்டிய அவசியமில்லை. நாமும் நெருக்கடிக்கு ஆளாக வேண்டிய தேவையில்லை. ஆகவே ஒரு தீர்மான வாசகமாகவே சொல்கிறேன். அதை தீர்மானமாக ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

தீர்மான வாசகம்: "இலங்கையில் தமிழ் மக்களின் உயிர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை மேலும் மோசமான அளவில் தொடர்வதற்கு இச் சட்டப்பேரவை ஆழ்ந்த வேதனையைத் தெரிவிப்பதோடு, இதற்கோர் முடிவினைக் காண இலங்கைத் தமிழர்கள் அனைத்து உரிமைகளும் பெற்று அமைதியாக வாழ்ந்திட இந்தியப் பேரரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறு இப் பேரவை, இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது. இத் தீர்மானம் பின்னர் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..