பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow "அனைத்துலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசத்தின் தூதுவருக்கு இணையானவர் அன்ரன் பாலசிங்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

"அனைத்துலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசத்தின் தூதுவருக்கு இணையானவர் அன்ரன் பாலசிங்கம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 19 December 2006

 nerudal_the_independant"த இன்டிபென்டன்" நாளேடு
லண்டனிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில நாளேடான "த இன்டிபென்டன்" தமிழீழ விடுதலைப் புலிககளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் தொடர்பான ஆய்வு ஒன்றை தனது நேற்றைய (18.12.06) நாளேட்டில் வெளியிட்டுள்ளது.

ஜஸ்ரின் கூக்லர் (Justin Huggler) என்பவர் எழுதிய இந்த ஆய்வில், "போராளிக் குழுவின் சர்வதேச தொடர்பாடலுக்கு உரியவராக செயற்பட்ட அன்ரன் பாலசிங்கம் ஐரோப்பிய நாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார்" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன், அன்ரன் பாலசிங்கத்துக்கு நோர்வே நாட்டுப் பிரதமர் அனைத்துலக நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தேசத்தின் தூதுவருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்ததாகவும் எழுதியிருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு இணையாக குரல் தரவோ, முடிவுகள் எடுக்கக்கூடிய தகமையுள்ளவர் அன்ரன் பாலசிங்கம் என்றும் மாவோ மற்றும் சேகுவேரா போன்றோரின் கொள்கைகளில் கைதேர்ந்தவர் அன்ரன் பாலசிங்கம் எனவும் தன்னுடைய ஆய்வில் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

பல ஆய்வாளர்கள், பிரபாகரனுக்கும் பாலசிங்கத்திற்கும் இடையே இருந்த பொருத்தம், போராட்டத்தையும் விடுதலைப் புலிகள் அமைப்பையும் மிகவும் சக்தி வாய்ந்ததாக வடிவமைத்திருந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அன்ரன் பாலசிங்கத்தின் அணுகுமுறை 1985 இலிருந்து மிகவும் வெற்றிகரமான பேச்சுக்களை விடுதலைப் புலிகள் நடத்துவதற்கு உதவியிருந்ததுடன் இறுதியாக தோல்வியில் முடிந்த பேச்சின் போது அவர் வெளியேறியிருந்ததாகவும் ஜஸ்ரின் கூக்லர்  குறிப்பிட்டுள்ளார்.

நோயின் பிடியில் துன்பப்பட்ட வேளையிலும் கடந்த மாதம் அன்ரன் பாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில், தேசத்தில் எமது மக்கள் படும் துயரத்துடன் ஒப்பிடும் போது தனது நோய் ஒரு பொருட்டல்ல என தெரிவித்ததாகவும் ஜஸ்ரின் கூக்லர் மேலும் தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..