பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow இறுதி யுத்தத்துக்கான அழைப்பு - இன்றைய சிறப்புக் கட்டுரை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இறுதி யுத்தத்துக்கான அழைப்பு - இன்றைய சிறப்புக் கட்டுரை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 31 December 2006
திருமலையைத் தனியாக பிரித்தெடுத்து வடக்கு - கிழக்கு மாகாணங்களை பிளவுபடுத்த அரசு வகுத்துள்ள வியூகம் நாடு முழு அளவிலான யுத்தத்துக்குள் இழுத்துவிடப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கைப் பிரித்து கிழக்கிற்கு தனி மாகாணத்தை உருவாக்கி அதற்காகத் தேர்தலொன்றை நடத்துவதற்காக கிழக்கில் பாரிய தாக்குதலொன்றுக்காக படைத்தரப்பு முழு அளவில் தயாராகியுள்ளது.

விடுதலைப் புலிகள் வசமுள்ள வாகரையை அடுத்த சில தினங்களுக்குள் அல்லது அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் கைப்பற்றிவிடுவோமென இராணுவம் மீண்டும் மீண்டும் கூறிவருவதன் மூலம்இ எவ்வேளையிலும் வாகரையை இலக்கு வைத்து பாரிய படை நடவடிக்கை ஆரம்பமாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பாரிய படை நடவடிக்கை மூலம் திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான பிரதான வீதியை (ஏ-15) கைப்பற்றி திருகோணமலை - மட்டக்களப்பு மாவட்டத்தை தரைவழியாக இணைப்பதே அரசின் திட்டமாகும்.

திருமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையே மிக நீண்ட காலமாகவே தரை வழிப்பாதை மூடப்பட்டேயிருந்தது. மூதூர் கிழக்கு முதல் பனிச்சங்கேணி வரையான பெரும் பிரதேசம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்ததால் திருமலைக்கும் மட்டக்களப்புக்குமிடையிலான போக்குவரத்துகள் பொலநறுவையூடாகவே நடைபெற வேண்டியிருந்தது.

மூதூர் கிழக்கில்இ சம்பூரை மையமாக வைத்து நடத்தப்பட்ட பாரிய படையெடுப்பையடுத்து மூதூர் கிழக்கில்இ சம்பூர் முதல் தோப்பூர் வரையிலான பிரதேசம் படையினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. தற்போது திருமலைக்குக் கிழக்கே ஈச்சிலம்பற்று முதல் வெருகல் வரையிலான சிறிய பிரதேசமே புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ளது.

இதுபோன்றுஇ மட்டக்களப்புக்கு வடக்கே திருமலை எல்லையில் கதிரவெளி முதல் பனிச்சங்கேணி வரையான ஒடுங்கிய பிரதேசம் புலிகள் வசமேயுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்தப் பிரதேசத்தின் மையமாக இன்று வாகரை விளங்குகிறது. வாகரையைக் கைப்பற்றுவதன் மூலம் திருமலைஇ மட்டக்களப்பு எல்லையில்இ இதுகாலவரை புலிகளின் பிடியிலிருந்த முழுப் பிரதேசங்களையும் தங்கள் வசப்படுத்திவிட முடியுமென அரசு கருதுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் கிழக்கில் நிலை கொண்டிருந்த புலிகள் தற்போது வாகரையிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமேயே நிலைகொண்டுள்ளனர். பாரிய பிரதேசங்களில் பெரும் படையெடுப்பை சந்திப்பதை விடஇ குறுகலான பிரதேசங்களில் பெரும் படையெடுப்புகளை புலிகள் மிக இலகுவாக முறியடித்துள்ளனர்.

தற்போது புலிகளின் ஆட்லறித் தளங்கள் கதிரவெளிஇ வாகரைப் பகுதிகளிலேயே உள்ளன. இந்த ஆட்லறித் தளங்களிலிருந்தே திருமலையில் கல்லாறுஇ மகிந்தபுரஇ சேருநுவர போன்ற படை முகாம்கள் மீதும் மட்டக்களப்பில் மாங்கேணிஇ கஜுவத்தை மற்றும் வாழைச்சேனை காகித ஆலை படை முகாம்கள் மீதும் புலிகள் கடும் தாக்குல்களைத் தொடுத்து வருகின்றனர்.

வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளைக் கைப்பற்றுவதன் மூலம் ஒரே நேரத்தில் பலவற்றை சாதிக்க முடியுமென அரசு கருதுகிறது. இதனாலேயே வடக்கு - கிழக்கு மாகாணங்களைத் தனித்தனியாக பிரித்து இரு மாகாணங்களாக்கியவுடன் வாகரையை கைப்பற்றி திருமலை மாவட்டத்திலிருந்தே புலிகளை விரட்டி விட வேண்டுமென்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தியுள்ளது.

நாளை திங்கட்கிழமை பிறக்கும் புதிய ஆண்டுடன் வடக்கு- கிழக்கு மாகாணங்கள் தனித்தனியாக செயற்படவுள்ளன. மாகாண சபை சட்டப்படிஇ புதிய மாகாண சபையொன்று உருவாக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களினுள் அந்த மாகாண சபைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால்இ கிழக்கில் குறிப்பாக மட்டக்களப்பின் பெரும்பாலான பகுதி இராணுவக் கட்டுப்பாட்டில் இல்லை. அதேநேரம் இ கிழக்கையும்இ இரண்டாகப் பிரித்து திருகோணமலையை கிழக்கிலிருந்து துண்டாடி தனியாக்கி அதனை மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தினுள் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருகோணமலையை சிங்களக் குடியேற்ற பிரதேசமாக்கி தமிழர்களையும் முஸ்லிம்களையும் சிறுபான்மையினமாக்கி விடுவதே அரசின் திட்டமாகும்.

கிழக்கில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுடன் திருகோணமலையும் இணைந்திருந்தால்இ திருமலை மாவட்டத்தின் செயற்பாடுகள் கிழக்கு மாகாண சபையின் நிர்வாகத்திலேயே இருக்கும்.

கிழக்கில் தமிழ் - முஸ்லிம்களே பெரும்பான்மையென்பதால் கிழக்கு மாகாண சபையூடாக திருமலையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வது சாத்தியமற்றதென்பதாலேயே திருமலையை கிழக்கிலிருந்து பிரித்து தனியாக்கி அதனை மத்திய அரசின் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துஇ பாரிய அபிவிருத்திகள் என்ற பேரில் திருகோணமலையை முழுமையாகவே சிங்கள மயப்படுத்துவதே அரசின் திட்டமாகும்.

இதனால்இ திருகோணமலை மாவட்டத்திலிருந்து புலிகளை அப்புறப்படுத்த வேண்டிய அவசர தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மூதூர் கிழக்கில் 23 கிராமங்களிலிருந்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள்இ பாரிய படை நடவடிக்கை மூலம் விரட்டப்பட்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.

மட்டக்களப்பில் இவர்களை அரச காணிகளில் தங்க வைக்க (நிரந்தரமாக) அரசு முடிவு செய்துள்ளதால் இந்த மக்கள் மீண்டும் திருமலையில் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்படமாட்டார்களென்றே கருதப்படுகிறது. இதன் மூலம் திருமலை நகரத்துக்கு கிழக்கே பல கிலோ மீற்றர் தூர கரையோரப் பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.

இதற்காகவே சம்பூரில் அனல் மின் நிலையத்தை அமைத்து அதனைச் சுற்றிச் சிங்களக் குடியேற்றத் திட்டங்களை முழு அளவில் மேற்கொள்வதற்கான மறைமுக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலையில் அரசின் திட்டங்களுக்கு வாகரை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நிலைகொண்டுள்ள புலிகள் மிகப்பெரும் தடையாகவுள்ளனர். இவர்களை முழுமையாக அப்புறப்படுத்துவதன் மூலம் எந்தவித அச்சுறுத்தலுமின்றி திருமலையையும் மட்டக்களப்பையும் தரைவழியாக இணைத்துவிட முடியும்.

அதேநேரம்இ வாகரையைக் கைப்பற்றுவதன் மூலம் கிழக்கிலிருந்த கடற்புலிகளின் இறுதித் தளத்தையும் இல்லாது செய்து விட முடியும். இன்று வடக்கில் கடற்புலிகளின் பலத்துக்கு இணையாக கடற்படையினரால் செயற்படமுடியாதுள்ளது. அண்மைக்காலங்களில் வடக்கில் நடைபெற்ற பல கடற்சமர்களில் கடற்படையினர் பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளதுடன் வடக்கே கடற்படையினரின் கடல் போக்குவரத்து மிகப் பெருமளவில் கடற்புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் கூடஇ முல்லைத்தீவு கரையில் ஒதுங்கிய ஜோர்தானிய சரக்கு கப்பலை மீட்கவோ அல்லது நெருங்கவோ முடியாதளவிற்கு கடற்படையினர் தடுமாறிக் கொண்டிருப்பதன் மூலம் வடக்கில் கடற்புலிகளின் பலம் எந்தளவிற்குள்ளதென்பதை முழு உலகமும் நன்கறிந்துள்ளது.

இந்த நிலையில்இ வாகரையை கைப்பற்றுவதன் மூலம் கிழக்கே கடற்புலிகளுக்கான கடற்தளத்தை இல்லாது செய்வதன் மூலம் கிழக்கே கடற்புலிகளால் ஏற்படும் மிகப்பெரும் அச்சுறுத்தலை தடுத்து விட முடியுமெனவும் அரசு கருதுகிறது. அதேநேரம்இ கடற்புலிகள் கிழக்கே தரையிறங்கும் வாய்ப்பு இல்லாது போவதுடன் வடக்கிலிருந்து கிழக்கிற்கான ஆயுத விநியோகங்களையும் தடுத்து நிறுத்திவிட முடியுமெனவும் அரசு கருதுகிறது.

திருமலை முதல் அம்பாறை வரையான தரை வழிப் பாதையையும் நிலப் பிரதேசத்தையும் முழுமையாகக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருவதன் மூலம் வடக்கிற்கும் கிழக்கிற்குமிடையே தரை வழியாக (காடுகளினூடாக) புலிகளின் விநியோகப் பாதைகளையும் மூடிவிட முடியுமெனவும் அரசு கருதுவதால்இ வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளிலிருந்து புலிகளை உடனடியாக அப்புறப்படுத்தும் பாரிய படை நடவடிக்கை எவ்வேளையிலும் ஆரம்பமாகும் சூழ்நிலையுள்ளது.

கிழக்கில் புலிகளுக்கெதிராக முழு அளவிலான படை நடவடிக்கை மூலம் அவர்களை அப்புறப்படுத்தி கிழக்கில் ஆயுதக் குழுக்களை தங்கள் பிடியில் வைத்துக் கொண்டு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதும் அரசின் திட்டமாகும். கிழக்கில் தற்போது அரச படைகள் மேற்கொள்ளும் தாக்குதல்களையெல்லாம்இ இந்த ஆயுதக் குழுக்களே மேற்கொள்வது போன்றும் கிழக்கில் புலிகளுக்கெதிராக பாரிய தாக்குதல்களை நடத்தக் கூடிய அளவுக்கு இந்த ஆயுதக் குழுக்கள் வளர்ச்சி பெற்றிருப்பது போன்றதொரு தோற்றப்பாட்டை அப் பகுதி மக்களிடைய ஏற்படுத்துவதன் மூலம் கிழக்கில் இந்த ஆயுதக் குழுக்கள் தொடர்பாக ஒரு மாயையை ஏற்படுத்துவதும் அரசின் திட்டமாகும்.

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதியாகும். ஈழவிடுதலைப் போராட்டத்தின் அடி நாதமே இணைந்த வடகிழக்காகும். கிழக்கில் ஆயுதக் குழுக்களை உருவாக்கி வடக்கிற்கெதிரான உணர்வை கிழக்கில் ஏற்படுத்தி வடக்கையும் கிழக்கையும் பிரிப்பதற்கு இவ்வாறான ஆயுதக் குழுக்களின் பூரண ஆதரவிருப்பது போலக் காட்டுவதுடன் ஆங்காங்கே புலிகளின் பகுதிகளுக்குள் படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்களை இந்த ஆயுதக் குழுக்களே மேற்கொள்வது போன்று காண்பிப்பதும் அவர்களது நோக்கமாகும்.

தற்போதைய நிலையில் வடக்கிலிருந்து கிழக்கை பிரித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பவில்லை. கிழக்கில் நிலவும் மிக மோசமான பாதுகாப்பு நிலை காரணமாக வடக்கு - கிழக்கு பிரிப்பின் மூலம் கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கப் போகும் மிகப்பெரும் இன்னல்கள் குறித்து பேச எவருமே முன்வரவில்லை. அனைவரும்இ உயிர் பாதுகாப்புக்காக மௌனம் சாதிக்கின்றனர்.

அங்குள்ள மிக மோசமான பாதுகாப்பு நிலைமையை சாதகமாகப் பயன்படுத்தி அதன் மூலம் வடக்கையும் கிழக்கையும் பிரித்து பாரிய இராணுவ நடவடிக்கைகள் மூலம் புலிகளை கிழக்கிலிருந்து அப்புறப்படுத்தி தங்கள் இனவாதச் செயற்பாடுகளை முன்னெடுப்பதே இந்த அரசின் திட்டமாகும். இதற்காக முதலில் வாகரையைக் கைப்பற்றி திருமலையையும் மட்டக்களப்பையும் இணைத்து கிழக்கில் உருவாக்கப்படும் மாகாண சபைக்கு உடனடியாகத் தேர்தலை நடத்தி அங்கு ஜனநாயகம் நிலவுவது போன்று காண்பிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்த நிலையில் இந்தப் பிரச்சினைகளை புலிகள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்களென்பதே இன்று அனைவர் மத்தியிலும் எழும் மிகப்பெரும் கேள்வியாகும். வாகரை நோக்கிய பாரிய படை நகர்வு குறித்து அரசும் படைத்தரப்பும் தொடர்ந்தும் எச்சரித்து வரும் நிலையில் புலிகள் தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருகிறார்கள்.

ஆனாலும் இவ்வாறானதொரு தாக்குதல் நடைபெறுமானால் அதனைத் தடுப்பதற்காக முன்கூட்டியே தாக்குதல் நடத்தப் போவதாக புலிகள் எச்சரித்துள்ள போதிலும்இ எவ்வேளையிலும் வாகரை நோக்கி பாரிய படை நகர்வு இடம்பெறலாமென்ற நிலையிலும் புலிகள் மௌனம் சாதிக்கின்றனர்.

புலிகளின் பதில் தாக்குதலென்பது வடக்கு - கிழக்குடன் மட்டுப்படுத்தப்பட்டிருக்குமெனக் கூறமுடியாது. ஏற்கனவே பல தாக்குதல்கள் தலைநகரிலும் இடம்பெற்றுள்ளதால் அடுத்து வரப்போகும் மோதல்கள் முழுநாட்டிலும் பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாயிருக்கலாம்.

வடக்கு - கிழக்கை பிரித்துவிட்டு கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்தும் முயற்சியென்பது படையினருக்கு மிகப்பெரும் இழப்புகளை ஏற்படுத்துவதாயிருக்கப் போகிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் குறிப்பிட்ட சில வாரங்களில் வடக்கு - கிழக்கு பிரிக்கப்பட்டதால் இனி நடைபெறப் போவதுஇ இறுதி யுத்தமாகவேயிருக்கப் போகிறது.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..