|
இந்த வருடம் கடுமையான வெப்பத்தை தாங்க வேண்டும் |
|
|
|
Saturday, 06 January 2007 |
|
2007 இல் உலகம் பூராவும் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமெனவும் எல்-நினோ காலநிலை தொடருமெனவும் பிரிட்டனின் காலநிலை அவதான அலுவலகம் தெரிவித்துள்ளது. அந் நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது;
1998 ஆம் ஆண்டின் பதிவுகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். உலகில் பதிவான அதிகரித்த வெப்பநிலை அளவீடுகளில் 2006 ஆம் ஆண்டு ஆறாவதாக வெப்பம் அதிகரித்த ஆண்டாக பதியப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் மகிழ்ச்சியடையும் உலகிற்கு இப் புதிய தகவல்கள் எச்சரிக்கையைக் கொடுக்கின்றன.
ஐக்கிய நாடுகளின் காலநிலை முகவர் அமைப்பின் தகவல்களின்படி கடந்த அரை நூற்றாண்டில் 1994 ஆம் ஆண்டிற்குப் பிறகான 10 வருடங்களிலேயே அதிகூடிய வெப்ப நிலை அளவீடுகள் பதிவு செய்யப்படுகின்றன. போக்குவரத்துக்காகவும் சக்திக்காகவும் பயன்படுத்தப்படும் எரிபொருட்களிலிருந்து உண்டாகும் காபனே வெப்ப நிலை அதிகரிப்புக்கு காரணமாக இருக்கின்றது என்பதை பெரும்பாலான விஞ்ஞானிகள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இவ் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக பனிக்கட்டிகள் உருகுவதால் கடல்மட்டம் மேலெழுந்து வெள்ளமாக மாறுவதுடன் பஞ்சமும் வன்முறைகளும் அதிகரிப்பதால் பல மில்லியன் மக்கள் பெரும் அபாயத்தை எதிர்கொள்ளப் போகிறார்கள். இப் பிரச்சினை இவ்வாண்டில் உலகளாவிய ரீதியில் விவாதிக்கப்படும் என சூழலியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனி ஐரோப்பிய யூனியனின் தலைமையை ஏற்பதனாலும் 8 கைத்தொழில் நாடுகளின் தலைமையாக நீண்ட காலம் இருப்பதனாலும் இந்த வெப்பநிலை அதிகரிப்புக்கெதிரான நடவடிக்கைகளை எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|