பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow தமிழக அரசியலில் றோ!
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

தமிழக அரசியலில் றோ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 08 January 2007

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பார்வை தமிழீழ மக்களின் அவல வாழ்வு குறித்து திரும்பியுள்ளமை மிகுந்த மகிழ்ச்சியையும் ஒரு வித புத்துணர்ச்சியையும் ஈழத்தவருக்கு கொடுத்துள்ளது.அதேவேளை, தமிழக அரசியலின் தற்போதைய நிகழ்வுகள் தமிழீழத்தின் உருவாக்கத்தைச் சிதைப்பதற்கான முன்னெடுப்புக்களாகவே தமிழீழத்தவரர்களால் சோக்கப்படுகின்றது.

ஆம், தழிழகத்தின் திராவிட அரசியல் கட்சிகளிடையே மிகவும் நுண்ணியமான முறையில் இந்திய மற்றும் வெளிநாட்டு; உளவு நிறுவனங்கள் இந்தக் கட்சிகளுக்குத் தெரியாமலேயே இவர்களுக்குள் வேரூன்றியிருக்கின்றனர்.

இந்த உளவு நிறுவனங்கள், தமிழகக் கட்சிகளுக்குள் சில உள் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளமை நடந்துவரும் அரசியல் நடப்புக்களில் அவதானிக்கக்கூடியதாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக தமிழீழம் தொடர்பாக தமிழகக் கட்சிகளும் அதன் தலைவர்களும்; காட்டிய அக்கறையை நாம் எடுத்து நோக்கினால், நெடுமாறன் மற்றும் வைகோவின் சேவைகளையும், முயற்சிகளையும் ஈழத்தவர் எளிதில் மறந்துவிட முடியாது. இதைவிட, பாட்டாளிக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாமளவன் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி ஆகியோரையும் தமிழீழத்தவர் நினைவில் வைத்திருத்தல் அவசியம.;

மேற்கூறிய அரசியல் தலைவர்களை இந்தப் பத்தியில் குறிப்பிடுவதற்கான காரணம், தமிழீழப்போராட்டம் மிகவும் இறுக்கமான நிலையினை அடைந்த வேளை, அதாவது 90களின் பின்பகுதியில், இந்தத் தலைவர்கள் வழங்கிய உதவிகள் மற்றும் அரசியல் பிணைப்புக்கள் எண்ணிலடங்காது என்பத குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் தற்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஆனால், கலைஞர் அவர்கள் தனது இறுதிக்கால ஆட்சியில் தமிழீழத்திற்கான தனது வரம்பிற்குட்பட்ட விதத்தில் ஆதரவினை கொடுத்துவருவது வரவேற்கத்தக்கதுடன் இந்த ஆதரவானது தொடர்ந்து கொடுக்கப்படும் என்ற நம்பிக்கை தமிழீழ மக்களுக்கு உண்டு.

பெருகிவரும் தழிழீழ ஆதரவினைத் தடுத்தல்

கலைஞர் அவர்கள் தனது ஆட்சியினை ஆரம்பித்தது முதல், தழிழீழ ஆதரவுச் செயற்பாடுகள் பல்வேறுபட்ட தரப்பினரால் தமிழகத்தில் ஆரம்பமாகியது.

இந்த செயற்பாடுகள் இந்திய உளவு நிறுவனமான றோவிற்கு பாரிய சவாலையும் தலையிடியையும் கொடுக்கத்தொடங்கியதும் கொடுத்து வருவது இன்று நிதர்சனமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறு கட்டுப்படுத்துவது?


தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாக கைநழுவுவதைப் பொறுத்துக்கொள்ளாத றோவிற்குச் சில முக்கிய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


தமது நகர்வுகளை மேற்கொள்ளுவதற்கு றோ கணிப்பிட்டதும் குறிவைத்துள்ள இரண்டு தமிழகத் தலைவர்கள் கலைஞர் கருணாநிதியும், வைகோவும் என்பது குறிப்பிடத்தக்கது.


ஏன் கலைஞர் கருணாநிதியும், வைகோவும்?

இதற்கு விடை தேடுவது கடினமான ஒன்றல்ல.


ஏனெனில், கலைஞர் அவர்களது ஆட்சி இன்று பல்வேறுபட்ட கட்சிகளின் கூட்டாட்சி. இந்த கூட்டாட்சியில் இணைந்துள்ள கட்சிகள் சாதி, மத அடிப்படையிலான கட்சிகள். இவை எந்த நேரத்திலும் ஆட்சியதிகாரத்தினை விட்டு விலகுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். மறுபக்கத்தில், தனக்குப் பின்னர் தமிழகத்தில் திராவிட அரசியிலில் முன்னிலை வகிப்பவரை தோற்றுவித்தல் போன்ற எண்ணங்கள் குறிவைக்கப்படுவதற்கான காரணங்கள்.


மற்றையது, தமிழக அரசியலில் தனது விரிவான நுழைவினை எதிர்பார்த்து இருக்கும் வைகோ! இவரின் சொல்லாண்மையை எந்தநேரத்திலும் செவிமடுக்கும் வட இந்திய அரசியல் தலைமைகள்.எனவே, பெருகி வரும் தமிழீழத்திற்கான ஆதரவினையும், அதற்கு வழிவகைகளைச் செய்துவரும் இந்த இரண்டு தலைவர்களையும் றோ குறிவைத்தது.


தமிழீழத்தின் முன்னேற்றத்தை தடுப்பதில் றோவின் நகர்வுகள்


இந்திய அரசியலின் அடிப்படையினை நிர்ணயிப்பது பணமும் பதவியும் என்பதை எவரும் மறுக்கவோ அல்லது மறைக்கவோ முடியாது.இந்த இரண்டு காரணிகளையும் பயன்படுத்தி மறுமலர்ச்சித் திராவிடர் கழகத்தினை இரண்டு குழுக்களாகப் பிரிப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழத்தினைப பயன்படுத்தியது றோ! இதன் மூலம், தமது உளவியல் போரில் முதல் வெற்றியைப் பெற்றது.


மறுமலர்ச்சித் திராவிடர் கழகத்தினைப பிரிப்பதன் மூலம், வைகோவின் சிந்தனை மற்றும் அவரது செயற்பாடுகளை அவரது கட்சியின் வட்டத்திற்குள் மட்டும் மட்டுப்படுததியது.

இதன் மூலம் ஈழத்தமிழர்கள் குறித்து அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடங்கல்களை ஏற்படுத்தியிருக்கின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய மிக முக்கிய விடயமாகும்.


தமிழகத்தின் அடுத்த தலைமுறையின் தலைவராக விளங்கக்கூடிய வகையில் தனது மகன் ஸ்டாலினை உருவகப்படுத்துவதற்கு கலைஞர் பெரும் பிரயத்தனம் எடுத்து வரும்வேளையில், வைகோவைப் பலவீனப்படுத்த நடத்தப்பட்ட சதி வலைக்கு கலைஞர் தெரிந்தோ தெரியாமலோ றோவினால் பயன்படுத்தப்பட்டிருக்கின்றர்.


றோவினால் மேற்கொள்ளப்படக்கூடிய எதிர்கால நகர்வுகள்


விடுதலைப்புலிகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே றோவினால் மீண்டும் பரப்பப்பட்டு வரகின்றது.
உதாரணமாக, பாக்கிஸ்தானின் உளவினரடன் சேர்ந்து, இந்தியாவின் வடகிழக்கு தீவிரவாதிகளுக்கு புலிகள் ஆயுதப் பயிற்சி கொடுத்து வருவதாக செய்திகள் கசிய விடப்பட்டிருப்பதை இந்பு எல்லோரும் கவனத்தில் கொள்வது முக்கியம்.

இன்று தமிழீழத்திற்கு ஆதரவாக தனது கருத்துக்களை தெரிவித்து வரும் கலைஞர் அவர்களின் ஆட்சியை அகற்றுதல். இதற்கு இந்திய கொம்மியூனிஸ்ட் கட்சி, மற்றும் தமிழ்நாடு கொங்கிரஸ் கட்சியினரை றோவினர் பயன்படுத்தக்கூடும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வைகோவை ஒரங்கட்டல். இதன் மூலம் வைகோவினை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தல் ழ ஏனைய தமிழீழ ஆதரவாளாகள்; மேல் - எதிர்க்கொள்கையுடைவர்களை வைத்து தாக்குதல்களை மேற்கொள்ளல், இதன் மூலம் தமிழ் நாட்டின் அரசியலில் குழப்பங்களை தோற்றுவித்து, மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் பார்வையை தமிழீழம் மீது செலுத்துவதை கட்டுப்படுத்தல்.

முடிவு தமிழீழத்தவன் என்ற முறையில் தமிழக அரசியல் தலைமைகளிடம் ஒன்றை மட்டும் வேண்டிக்கொள்கிறோம். தமிழர்களையும், தமிழ்மொழியையும் அழிக்க நினைக்கும் இந்த உளவு அமைப்புக்களை இனம்கண்டுகொள்ளும் அதேவேளை,தமிழீழத்தின் வருகைக்கான உங்களின் ஆதரவும் அரவணைப்பினையும் கட்சிவேறுபாடுகளின்றி மேன்மேலும் வழங்குவீர்கள் என்ற நம்பிக்கை தமிழீழ மக்களுக்கு உண்டு.


மட்டக்களப்பு ஈழனாதம்


மட்டக்களப்பு ஈழனாதம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..