பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow வாகரை களமுனையில் நிற்கும் வரிப்புலி வீரனின் குரல்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

வாகரை களமுனையில் நிற்கும் வரிப்புலி வீரனின் குரல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 08 January 2007

"புலி பசித்தாலும் புல்லுண்ணாது"
இது வெறும் மொழியல்ல. மூதாதயர் அனுபவத்தில் உரைத்த முதுமொழி, சாவைக்கூட சந்திப்போம், சரணடைய மாட்டோம். இது வேங்கை மொழி. வரலாற்றில் நடந்த மொழி. வாகரையிலும் அது தான் நடக்கிறது.

நிகழ்காலத்தில் நிலவுகின்ற நிகழ்ச்சி நிரல் என்ன? ஊடகங்களில் உலா வரும் செய்திகள் பதில் சொல்லும். இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உரைக்கின்றார் 'இன்னும் இரண்டு மாதங்களில் கிழக்கில் புலிகளை முடக்கி விடுவோம்" என்று. இந்த வசனங்கள் களத்தில் நிற்கும் நாங்கள் அடிக்கடி அறிபவை தான். சரத்போன்சேகா சொல்வதை படை சாதித்து காட்ட தயாரா அன்பது தான் கேள்வி? இல்லை என்பதே பதில். ஏன் தெரியுமா? சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடுமா? நிச்சயமாக இல்லை. வாகரையை அண்மித்து களமுனைகளில் நிற்கும் படைகள் இப்போது சூடு கண்ட பூனைகள்தான். அவர்களுக்கு தானே இங்கே களத்தில் புலிகள் காட்டிய வேகமும் வீரமும் தெரியும். கொழும்பிலே இருக்கும் இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் எத்தனை தடவைகள் சொல்லி இருப்பார்கள் வாகரையில் புலிகள் பலவீனமடைந்து இருக்கின்றார்கள் என்று?. அவர்கள் கூறிய பின்பு எத்தனை தடவைகள் இராணுவ முனேற்ற முற்சி நடந்திருக்கிறது? எங்கிருந்து படை நகர்வை மேற்கொண்டார்களோ அங்கிருந்துகொண்டு தான் இன்றும் அறிக்கைகள் வெளியிடுகின்றார்கள்.

சிங்கள மக்களின் சிந்தனைப்போக்குகளை சமாளிப்பதற்காக களமுனைத் தகவல்களை ஊடகங்களில் அப்படியே தலைகீழாக மாற்றி வெளியிடுகிறது சிங்கள அரசு. அதே நேரம் முனேற்ற அராணுவ நடவடிக்கைகள் தோல்வியயைத் தழுவியவுடன் அப்படியான நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்ட தாக்குதலிற்கு அதிரான சமராக சிங்கள அரசு காட்ட முனைகிறது. ஆனாலும் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பது கடினமல்லவா? சம்பவங்கள் சாட்சியாகின்றது. வாகரையை முழுமையாய் விழுங்கி ஏப்பமிடலாம் என்ற கனவோடு கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முப்படைகளின் பாரிய ஒருங்கிணைப்போடு பனிச்சங்கேணி வழியாக முன்னேறிய படைகளிற்கு நடந்தது என்ன? புலிகளின் பகுதி நோக்கி முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றால் இராணுவத்தினரதும் ஒட்டுக்குழுக்களினதும் சடலங்கள் எங்கள் பகுதிக்குள் எப்படி இருக்க முடியும்? காயமடைந்த நிலையில் எம்மால் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி உண்மையை உரைக்கவில்லையா?

அது போலவே கட்டுமுறிவுக்குளம் பகுதியூடான முன்னேற்ற முயற்சி முறியடிப்புச்சமரும் முக்கியமானது.
இந்த பகுதிக்குள் முன்னேறுவது கடினம் என்ற களமுனை இராணுவத் தளபதிகளின் தகவல்களை நிராகரித்து இராணுவத்தினரை வழுக்கட்டாயமாக முன்னேறச் செய்ததன் பயன் என்ன? அந்தச் சமரில் அறுபதிற்க்கும் மேற்பட்ட படைகள் கொல்லப்பட்டு நூற்றி ஐம்பதிற்க்கும் மேற்பட்டோர் காயங்களுக்குள்ளானார்கள். எமது தரப்பில் லெப். கேணல் விடுதலை அவர்கள் உட்பட நான்கு போராளிகள் வீரச்சாவு அடைந்தனர். இந்த உண்மைகள் சிங்கள் மக்களை சென்றடைவதை சிறீ லங்கா அரசு இலாவகமாக தடுத்து விடுகின்றது.

அது போலவே கடந்த டிசம்பர் மாதத்தில் மீண்டும் மகிந்தபுர மற்றும் பனிச்சங்கேணி பகுதிகளூடாக சிங்கள படைகள் மேற்கொண்ட பாரிய இராணுவ முயற்சிக்கு நாம் கொடுத்த பதிலடி தாக்கங்களை சிங்கள அரசு இருட்டடிப்புச் செய்ய முயற்சித்தது. மாறாக எம்மால் கைப்பற்றபட்ட இராணுவச் சடலங்கள் உண்மையை உலகிற்கு உரைத்தது. இந்த நான்கு சமர்களிலும் துல்லியமான கணிப்பீட்டின் அடிப்படையில் நானூறூ வரையான படையினர் கொல்லப்பட்டனர். அதே தொகையினர் காயமடைந்து களத்தில் இருந்து அப்புறபடுத்தப்பட்டிருக்கிற��
�ர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பெரும்தொகையான போராளிகள் தம்மிடம் வந்து சரணடைந்து விட்டார்கள், மிகச் சொற்பமான சிலரே இப்போது வாகரைப் பகுதிகளில் நிற்கின்றார்கள் என்று சிங்கள அரசு பிரச்சாரம் செய்த பின்னரான காலப்பகுதிகளிலேயே இந்த நான்கு முன்னேற்ற இராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளபட்டு படுதோல்வியைத் தழுவின. அப்படியானால் இங்கே நின்று சமர்களில் ஈடுபட்டது யார்? இத்தனை முயற்சிகளுக்குப் பின்னரும் வாகரையை நெருங்க ஏன் சிறீலங்காப் படைகளால் முடியவில்லை? உண்மையை சிங்கள மக்கள் உணர வேண்டும்.

வாகரை மற்றும் அதனை அண்டிய களமுனைகளில் இருந்து தப்பியோடும் இராணுவத்தினரின் தொகை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. தப்பித்து வீடுகளுக்குச் செல்லும் இராணுவத்தினர் தம்மால் வாகரையை அண்டிய களமுனைகளில் பணியாற்ற முடியவே முடியாது என்று கூறுகின்றனர். ஏனெனில் முன்னேற்ற நடவடிக்கைகளின் போது புலிகளால் கைப்பற்றபடும் இராணுவச் சடலங்களை கூட ஏற்க்காமல் முதலில் தமது இல்லை என்று சொல்வதும் பின்னர் காணாமல் போய்விட்டனர் என்பதும் பின்னர் சடலங்களை அடக்கம் செய்த பின்பு தோண்டியாவது எடுத்து தாருங்கள் என்று கேட்பதுவும் களத்தில் நிற்க்கும் இராணுவத்தினர் மத்தியில் விசனத்தையே ஏற்ப்படச் செய்திருக்கிறது. தமக்கும் அதே கதிதான் என்ற நிலைப்பாட்டையும் உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக களமுனை இராணுவத்தினர் தொகை குறைந்து செல்கின்றது.


இரண்டு மாதங்களில் கிழக்கில் புலிகளை முடக்கி விடுவோம் என்று தலதா மாளிகையில் இருந்து கால அவகாசம் கொடுத்து இருக்கிறார் சரத்பொன்செகா. கால அவகாசம் வழங்கி இதே கிழக்கில் கடந்த வருடம் சிங்களைப் படைகள் கெளரவம் இழந்து நின்றதை உலகின் எல்லா ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன. சிறீலங்காவின் தற்காலிக இராணுவத்தளபதியாக செயற்பட்ட மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி திருகோணமலையில் இருந்து படைகளை ஒருங்கிணைத்து மாவிலாற்றை கைப்பற்ற எடுத்த முயற்சிக்கு என்ன நடந்தது? கெகெலிய ரம்புக்வெலவும் பிரசாத் சமரசிங்கவும் மாறிமாறி மாவிலாற்றை இன்று அடைந்து விடுவோம் நாளை அடைந்து விடுவோம், இன்னும் இரண்டு நாட்களில் அடைந்து விடுவோம் என்று எத்தனை தடவைகள் சொன்னார்கள்? நாட்டின் பாரியளவிலான முப்படை பலத்தயும் திருகோணமலை பகுதிகளிலே பிரயோகித்தும் அவர்கள் சொல்லில் சொன்னதை செயலில் காட்டாதவாறு நாம் சமர் செய்தோம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஒரு கெளரவ யுத்தமாக இருந்தது. இந்த நிலையில் தான் தலைவரது பணிப்பிற்கமைவாக கண்காணிப்புக்குழு மேற்பார்வையில் அணையை திறந்து விட சென்றபோது அதனை குழப்பிய சிங்கள அரசு மறுநாள் காலை எட்டு மணிக்குள் அணையை அடைந்து விடுவோம் என அறிவித்தது. அது நடந்ததா? பின்பு நாமாகவே அணையை திறந்து தண்ணீர் செல்ல வழி வகுத்து கொடுத்தோம். கால அவகாசம் வழங்கி விட்டு களத்தில் அவமானப்பட்ட அனுபவம் மறந்து இப்போது மீண்டும் ஒரு கால அவகாசமா?

வாகரை மக்களை மீள் குடியேற்றுவதற்காக இராணுவ நடவடிக்கையை மேற்கோள்ளப் போவதாக மீண்டும் ஒரு அறிவிப்பை அரசு, செய்திருக்கிறது. அப்படியானல் சம்பூர் மக்களை மீள்குடியேற்ற அரசு ஏன் தயங்குகிறது? மக்கள் மீது அக்கறை கொண்டவர்கள் போல முதலைக்கணீர் வடிக்கும் சிங்கள அரச தரப்பு மக்கள் குடியிருப்புக்கள் என்று தெளிவாக அடையாளம் காணப்பட்ட இடங்களை நோக்கி திட்டமிட்டு தாக்குதல்களை நடாத்தி மிகக் கோரமாக மக்களை படுகொலை செய்தமையய் உலகறியும்.இது தவிர கல்லாறு, சேருவில பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி மீள்குடியேற்றா முடியாத அரசு தமிழ் மக்களையா மீள்குடியேற்றப் போகிரது? வேடிக்கையாக உள்ளது.

எவர்க்கும் விலை போகா வீரத்தலைவன் பிரபாகரனின் நிழலில் நின்று கூறுகின்றொம். அன்று சரணடையாமல் சயனைட் அருந்தி சாவைத் தழுவிக்கொண்ட வீரவேங்கை பகீன் வழியில் நிற்பவர்கள் கூறுகின்றோம். தான் இறந்தாலும் தன் துப்பாக்கி பறிபோகக்கோடது என்பதற்காக தன்னை சுட்டுவிட்டு துப்பாக்கியை கொண்டு செல்லென வீர சொல்லுரைத்த சீலன் வழி வந்தவர்கள் கூறுகின்றோம். போர் என வரும் போது நாம் நின்று எதிர்கொள்வோம். வெல்வோம் இல்லையேல் வீழ்வோம். பணிந்து போக மாட்டோம்.
தமிழீழ பகுதி எங்கும் முழுமையாக இன்னும் புலிகளின் போர் நடவடிக்கைகள் செயற்பாட்டு வடிவம் பெராத சூழ்நிலையில் தனது முழு பலத்தையும் வாகரையை ஆக்கிரமிக்கும் போருக்கென பிரயோகித்தும் வெற்றி பெறாத அரச படைகள் மீண்டும் ஒரு முன்னேற்ற முயற்சிக்கு தயாராகின்ற செய்தியை நாம் அறிவோம். நிச்சயம் தலைவரின் நெறிப்படுத்தலில் ஒட்டு மொத்த நில மீட்புச்சமர் வீறு கொண்டு எழும்போது அரச படைகள் திக்குமுக்காடப்போகின்றன என்பதற்கு இங்கு நடக்கும் நிகழ்ச்சிகளே நிழற்படம் போல சாட்சி கூறும்.
யாழ்ப்பாணத்தை கைவிட்டு வாகரையை ஆக்கிரமிப்பதா? இல்லையேல் யாழ்ப்பாணத்தை தக்க வைத்துக் கொண்டு வாகரை மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நிறுத்தி வைப்பதா என்று இன்னொரு சங்கடமும் இப்போது அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் முன்னேற்ற நடவடிக்கைக்கு ஏற்ற படைப்பிரிவுகள் அரசிடம் இல்லாமையே.
எது எப்படி இருப்பினும் இதுவரை சவால்களுக்கெல்லாம் தலை கொடுத்து நின்ற எம் படையணிகள் இனிவரும் சவால்களையும் எதிர் கொள்ள தயாராகவே இருக்கின்றன. 1st SF என்று அழைக்கப்படும் அதிவிசேட பயிற்சி பெற்ற படைப்பிரிவின் முன்னேற்ற முயற்சி கூட பனிச்சங்கேணியில் முறியடிக்கபட்ட பின்னணியில் இதைவிட எந்தப் படைப்பிரிவை ஈடுபடுத்துவது என்று குழம்புகிறது அரசு. எந்தப் படைகள் எங்கள் பகுதிக்குள் நுழைந்தாலும் எதிர்கொண்டு சமரிடுவோம். பாய்ந்துவரும் பகைவர்க்கு பாடம் புகட்டுவோம்.

-மேஜர் சுஜீவன் -


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..