பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow சமாதான முயற்சி தொடர வழி வகுக்கப்பட வேண்டும்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சமாதான முயற்சி தொடர வழி வகுக்கப்பட வேண்டும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 30 September 2005

இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழ் தீர்வாஇ ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் தீர்வா? என்பதிலேயே ஒரு முடிவின்றி தென்னிலங்கை கட்சிகள் முட்டி மோதி வருகின்றன. இவ்வாறானதோர் சூழலில் எந்தவகையிலுமே தீர்வு காணப்பட மாட்டாது என்ற விரக்தி நிலைக்குத் தமிழ் பேசும் மக்கள் வந்துள்ளனர்.

இனப்பிரச்சினைக்கு எந்த வகையில் தீர்வை முன்வைப்பது என்பதிலேயே ஒரு முடிவுக்கு வர முடியாமலும்இ எடுக்கும் முடிவுகள் அனைத்தையும் எதிர்க்கும் நிலையிலும் இருக்கும் பேரினவாதக் கட்சிகள் எங்கே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினையை சரியான முறையில் அணுகி தீர்வை முன்வைக்கப் போகின்றன என்பதே தமிழ் பேசும் மக்களின் விரக்திக்கு மூல காரணமாகும்.

இதேவேளைஇ தேசிய ஹெல உறுமய ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்றும்இ வடகிழக்கு தமிழரின் தாயகமல்ல என்ற அடிப்படையிலும் தனது பிரசாரத்தை முன்னெடுக்கப் போவதாக அறிவித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரதமர் ஹெல உறுமயவின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாகவும் ஹெல உறுமய பத்திரிகையாளர் மாநாடொன்றில் தெரிவித்துள்ளது.

இதேவேளைஇ ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பரவலாக்கல் மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என்பதில் சுதந்திரக் கட்சியின் தலைவியும்இ ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார். அண்மைக்காலமாக அவர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக சாதகமான கருத்துக்களை தெரிவித்து வருவது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது.

இருப்பினும் அவரது பதவிக்காலம் முடிவுறும் தறுவாயில் இருப்பதும்இ அதேவேளை சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கும்இ பேரினவாதக்கட்சிகளுக்குமிடையே யான இணக்கப்பாடுகளும் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் வேடிக்கையாகவே இருந்து வருகின்றது.

இதனிடையேஇ சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் இருந்தும் ஜனாதிபதி வேட்பாளரான பிரதமர் மாறுபட்டுச் செல்வதாக ஜனாதிபதிக்கும்இ பிரதமருக்குமிடையே அவ்வப்போது வாதப் பிரதிவாதங்கள் இடம்பெறுவதாகவும் கூறப்படுகின்றது.

தெற்கில் இராமர் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்று தமிழ் பேசும் மக்கள் ஒதுங்கி இருக்க முடியாத சூழ்நிலையே இன்று நிலவுகின்றது. எனவேஇ எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தமிழ் பேசும் மக்களும் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளும் தீர்க்க தரிசனத்துடன் நடந்து கொள்வது இன்றியமையாதது.

இதேவேளைஇ இனப்பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் மட்டுமே தீர்வுகாண முடியும். இதனைத் தாங்களும் ஏற்றுக் கொண்டுள்ளமையினால் சமாதான முயற்சியை முன்னெடுக்க இணைந்து செயற்பட முன்வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சமாதான செயற்பாடுகளை அரசியல் பிளவுகளுக்குள் உட்படுத்தாதுஇ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும்இ ஐ.தே.க. வுக்கும் இடையில் சமாதான முயற்சியில் ஏற்பட்டுள்ள இணக்கப்பாட்டை மேலும் கட்டியெழுப்புவது அவசியமாகும் என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையே பொது இணக்கப்பாடு எட்டப்பட வேண்டிய நிலைக்கு இலங்கையின் சமாதான முன்னெடுப்பு தள்ளப்பட்டு விட்டது.

இது குறித்து ஐ.தே.க. வின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எதிர்க்கட்சி என்றாலே அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பது தான் என்ற நிலைப்பாட்டுக்கு அப்பால் நின்றுஇ ஐ.தே.க. சமாதானத்துக்கு அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

எனவேஇ பேரினவாதிகளின் குரல் ஓங்கி ஒலிக்கும் இன்றைய சூழலில்இ சமாதானத்துக்கான அரசினதும்இ ஜனாதிபதியினதும் காத்திரமான நடவடிக்கை என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஜனாதிபதியைச் சார்ந்ததாகும்.

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் பின்னணியில் இனவாதிகளின் ஆத்திரமூட்டும் பேச்சுக்களும்இ அறிக்கைகளும் சிறுபான்மை மக்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கியுள்ளதுடன்இ மிகுந்த அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

எனவேஇ வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழி உடைந்த கதையாக இல்லாமல்இ சமாதான முயற்சிகள் தொடரவும்இ நாட்டின் அடுத்து வரும் சந்ததியாவது நிம்மதியாக வாழவும் ஏற்ற சூழலை உருவாக்குவது சம்பந்தப்பட்ட அனைவரதும் கடமை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.


virakesari

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..