பிரதான பக்கம் arrow Karuna Antharangam arrow கிழக்கில் ஆரம்பமாகியுள்ள படையினரின் நடவடிக்கைகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2

கிழக்கில் ஆரம்பமாகியுள்ள படையினரின் நடவடிக்கைகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 15 January 2007

paathukaappu2கிழக்கை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்கும் நடவடிக்கையை அரசு ஆரம்பித்துள்ளது. அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பகுதி நோக்கி விஷேட அதிரடிப் படையினர் முன்னேறிச் சென்றுள்ளனர். இது போன்று கிழக்கின் ஏனைய பகுதிகளையும் புலிகள் வசமிருந்து மீட்கும் படை நடவடிக்கைகள் படிப்படியாக நடைபெறுகின்றன. வடக்கு - கிழக்கை உயர் நீதிமன்ற தீர்ப்பு மூலம் பிரித்துவிட்ட அரசு கிழக்கை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. திருகோணமலையின் எல்லைப் புறத்தேயுள்ள வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளையும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலுமிருந்து புலிகளை வெளியேற்றும் படை நடவடிக்கை குறித்து அரசும் படைத் தரப்பும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தன.

வாகரையை கைப்பற்ற அரச படைகள் பல தடவைகள் முயற்சித்தும் அது கைகூடாக நிலையில் தற்போது அம்பாறையில் புலிகளின் வசமுள்ள பகுதிகளை நோக்கி படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. கஞ்சிகுடிச்சாறில் புலிகள் வசமுள்ள பகுதிகளை கைப்பற்றுவதே இதன் நோக்கமாகும்.

அம்பாறையில் கஞ்சிகுடிச்சாறு பகுதி நோக்கி விஷேட அதிரடிப் படையினர் முன்னேறிச் சென்றுள்ளனர். இது போன்று கிழக்கின் ஏனைய பகுதிகளையும் புலிகள் வசமிருந்து மீட்கும் படை நடவடிக்கைகள் படிப்படியாக நடைபெறுகின்றன.

வடக்கு - கிழக்கை உயர் நீதிமன்ற தீர்ப்பு மூலம் பிரித்துவிட்ட அரசு கிழக்கை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. திருகோணமலையின் எல்லைப் புறத்தேயுள்ள வாகரை மற்றும் அதனோடிணைந்த பகுதிகளையும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலுமிருந்து புலிகளை வெளியேற்றும் படை நடவடிக்கை குறித்து அரசும் படைத் தரப்பும் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தன.

வாகரையை கைப்பற்ற அரச படைகள் பல தடவைகள் முயற்சித்தும் அது கைகூடாக நிலையில் தற்போது அம்பாறையில் புலிகளின் வசமுள்ள பகுதிகளை நோக்கி படை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. கஞ்சிகுடிச்சாறில் புலிகள் வசமுள்ள பகுதிகளை கைப்பற்றுவதே இதன் நோக்கமாகும்.

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதியில் புலிகளின் வசமுள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதென்பது சாத்தியமற்றதொன்றாகும். பெரும் காடுகளை அண்டிய குடிமனைகளைக் கொண்ட பெருமளவு பகுதி புலிகள் வசமேயுள்ளது. இந்தப் பிரதேசங்களைக் கைப்பற்றி அவற்றை தக்க வைக்க வேண்டுமானால் மேலும் ஆயிரக்கணக்கான படையினர் தேவை.

சிலவேளைகளில், இவ்விரு மாவட்டங்களிலும் புலிகளின் பகுதிகளினுள் நுழைந்து குறிப்பிட்டளவு பிரதேசங்களை தம்வசப்படுத்தும் சாத்தியம் படையினருக்கு ஓரளவிருந்தாலும் அது கூட நீண்ட காலத்திற்கு சாத்தியப்படுமா என்பது கேள்விக் குறியே. ஆனாலும் அரசியல் தேவைகளுக்காக கிழக்கில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை அரசுக்குள்ளது.

அம்பாறையில் புலிகளின் வசமுள்ள கஞ்சிகுடிச்சாறு காட்டுப் பகுதிக்குள் நுழைந்த விஷேட அதிரடிப் படையினர் எதுவித மோதலுமின்றி சில பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். கடந்த சில தினங்களாக அங்கு நிலைகொண்டுள்ள அதிரடிப் படையினரால் தொடர்ந்தும் அங்கு நிலைகொள்ள முடியுமா என்பது பெரும் கேள்வி.

காட்டுப்புறப் பகுதியினுள் முன்னேறிச் சென்ற அதிரடிப்படையினருடன் விடுதலைப் புலிகள் மோதல்கள் எதிலும் ஈடுபடவில்லை. அங்கிருந்து பின் நகர்ந்து சென்ற புலிகள் தற்போது அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டனர். இதனால் புலிகள் நிலைகொண்டிருந்த பகுதிகளில் தற்போது அதிரடிப்படையினர் நிலைகொண்டுள்ளனர்.

அதேநேரம், பின்நகர்ந்த புலிகள் மேலும் தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டியிராது. மேலும் மேலும் காட்டுப் பகுதிக்குள் அதிரடிப் படையினர் முன்னேறிச் செல்ல முடியாது. அவ்வாறு செல்வது அவர்களுக்கு பேராபத்தாகிவிடும். அதனால் தற்போது முன்னேறியுள்ள ஒரு சில கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் அதிரடிப்படையினர் செல்லும் சாத்தியமில்லை.

ஆனால், தற்போது அதிரடிப்படையினர் முன்னேறிச் சென்ற பகுதிகளில் அவர்கள் எவ்வேளையிலும் பலத்த தாக்குதல்களுக்குள்ளாகும் வாய்ப்புள்ளது. காட்டுப் பகுதியில் பாதுகாப்பற்ற சூழலிலேயே தற்போது அங்கு அதிரடிப் படையினர் நிலைகொண்டுள்ளனர். இதனால் இவர்கள் மீது புலிகள் எவ்வேளையிலும் திடீர் தாக்குதல்களை மேற்கொள்ளும் வாய்ப்புகளுள்ளது.

வடக்கு - கிழக்கை பிரித்து கிழக்கிற்கு தனியானதொரு மாகாண சபையை அமைத்துள்ள அரசு விரைவில் அங்கு தேர்தலை நடத்த வேண்டும். அதற்கான முயற்சியில் அரசும் படைத்தரப்பும் ஈடுபட்டாலும் கிழக்கில் பெருமளவு பகுதி தொடர்ந்தும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருப்பதுடன் அங்கு பெருமளவு மக்கள் வாழ்வதாலும் தேர்தலுக்கு முன்னர் புலிகளின் வசமுள்ள பகுதிகளையும் மக்களையும் தங்கள் வசப்படுத்திவிட வேண்டிய தேவை அரசுக்குள்ளது.

ஆனாலும் இது சாத்தியப்படுமா என்பது தான் மிகப்பெரும் பிரச்சினையாகும். கிழக்கில் கருணா குழுவின் உருவாக்கலுக்குப் பின்னர் அங்கு புலிகள் மிகவும் பலவீனமடைந்துவிட்டதாகவே அரசும் படைத்தரப்பும் கருதுகின்றன. கிழக்கில் போர் நிறுத்தம் அமுலிலுள்ள போதிலும் அங்கு இடம்பெற்ற பாரிய படைநடவடிக்கைகள் மூலம் சில பகுதிகளை படையினர் கைப்பற்றியதால் மேலும் மேலும் பிரதேசங்களை மீட்டுவிட முடியுமென அரசு கருதுகிறது.

வடக்கு - கிழக்கிலிருந்து புலிகளை அப்புறப்படுத்த முடியுமோ, இல்லையோ கிழக்கை வடக்கிலிருந்த பிரித்து, இணைந்த மாகாணமென்ற தமிழரின் தாயகக் கோட்பாட்டை தகர்த்து கிழக்கை தமிழர்களின் பிடியிலிருந்து எடுத்து அதனை சிங்கள ஆக்கிரமிப்பு பிரதேசமாக்கி ஈழத்தமிழரின் சுதந்திரப் போராட்டத்தை வடக்குடன் மட்டுப்படுத்திவிட வேண்டுமென்பதே மகிந்த சிந்தனையாகும்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கிலிருந்து வெளியேறிய புலிகள் தற்போது, ஈச்சிலம்பற்று முதல் பனிச்சங்கேணி வரையான பகுதிகளில் நிலைகொண்டுள்ளனர். இவர்கள் வாகரைப் பகுதியையே மையமாக வைத்து இயங்குவதால் அங்கிருந்து புலிகளை வெளியேற்றுவதன் மூலம் திருமலையில் மிகப்பெரும்பாலான பகுதிகளிலிருந்து புலிகளை அப்புறப்படுத்துவிட அரசு முயல்கிறது.

ஆனாலும் வாகரைப் பகுதியில் நிலைகொண்டுள்ள புலிகள் படையினரின் முயற்சிகளை முறியடித்து வருகின்றனர். மேலதிக படையினரை வரவழைத்தும் ஆயுத பலத்தை அதிகரித்தும் இந்தப் பகுதியை மீட்டுவிடலாமென படைத்தரப்பு கருதுகின்ற போதும் அவ்வாறு மேலதிக படைகளை தருவிப்பதன் மூலம் வேறு பகுதிகள் பலவீனமடையும் போது அந்தப் பிரதேசங்களில் புலிகள் பாரிய தாக்குதல்களைத் தொடுத்துவிடலாமென்ற அச்சமும் படையினருக்குள்ளது.

கிழக்கில் ஏனைய பகுதிகளை விட வாகரையை கைப்பற்றுவதன் மூலம் திருமலையையும் மட்டக்களப்பையும் தரைவழியால் இணைத்து விடமுடியுமென அரசு கருதுகிறது. இந்த இணைப்பானது புலிகளை கிழக்கில், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களினுள் முடக்கி பின்னர் அங்கிருந்தும் அவர்களை அப்புறப்படுத்திவிடாலாமென்ற எண்ணத்தையும் அரசுக்கு தோற்றுவித்துள்ளது.

இதேநேரம் கிழக்கில் படையினர் தாக்குதல்களை ஆரம்பித்துவிட்டதால் அங்கு புலிகளின் பதில் நடவடிக்கைகளும் இனி மிகக் கடுமையாகவேயிருக்கப் போகிறது. தங்கள் வசமுள்ள பகுதிகளை படையினர் கைப்பற்றத் தொடங்கிவிட்டால் அது புலிகளுக்கு கூட மிகப் பெரும் நெருக்கடியாகத்தானிருக்கும். இதனால் புலிகளின் பதில் தாக்குதல் இனி கடுமையாகவேயிருக்கும்.

இது கிழக்குடன் மட்டுப்படுத்தப்பட்டதாயிருக்குமெனக் கூறமுடியாது. தெற்கிலும் பாரிய தாக்குதல்கள் இடம்பெறலாமென்ற அச்சத்தையும் அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே கொழும்பிலும் தெற்கின் ஏனைய பகுதியிலும் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக படையினர் பாரிய சுற்றி வளைப்புக்களையும் தேடுதல்களையும் மேற்கொண்டு 600 க்கும் மேற்பட்ட தமிழர்களை கைது செய்துள்ளனர்.

இவ்வாறான சுற்றி வளைப்புக்கள் மற்றும் தேடுதல்களையடுத்து தெற்கில் நிலைகொண்டிருக்கும் புலிகள் வடக்கே அல்லது கிழக்கே சென்றுவிடுவார்களென படைத்தரப்பு கருதுகிறது. அத்துடன் இதன் மூலம் தெற்கில் தாக்குதல் அச்சுறுத்தலையும் குறைத்துவிட முடியுமென்று அவர்கள் கருதுகின்றனர்.

தென் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்திவிட்டே வடக்கு, கிழக்கில் பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்பதில் அரசு மிகக் கவனமாயுள்ளது. இல்லையேல் வடக்கு, கிழக்கில் நடைபெறும் பாரிய தாக்குதலின் எதிரொலி தெற்கில் உணரப்படலாமென அரசு அஞ்சுகிறது.

கிழக்கில் புலிகள் முழு அளவில் பலமிழந்துவிட்டதாக பிரசாரப் போரிலும் அரசு இறங்கியுள்ளது. கிழக்கில் படையினர் பத்து மீற்றர் தூரம் முன்னேறிச் சென்றாலும் அது பாரிய வெற்றியென்பது போன்று, பெரும் பிரசாரம் செய்யப்படுகிறது. ஒருபுறம் பெரும் போரை தொடுத்துக் கொண்டு மறுபுறம் பிரசாரப் போரையும் அரசும் படைத்தரப்பும் முடுக்கவிட்டுள்ளன.

வாகரை நோக்கி நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களாலும் தொடர்ச்சியான உணவுப் பொருள் தடையாலும் தங்கள் உயிரைக் காப்பதற்காக சுமார் முப்பதாயிரம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.

தங்கள் உயிரை பாதுகாக்கவும் முப்படைகளினது தாக்குதலிலிருந்து தப்பவும் உணவுப் பொருட்களை பெறவுமே இந்த மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றனர். ஆனால், இந்த மக்கள் புலிகளின் தலைமையை முழுமையாக நிராகரித்துவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தொடர்ந்தும் அரசு பிரசாரத்திலீடுபட்டு வருகிறது.

அதேநேரம் திருமலையில் கல்லாறு, சேருநுவர, சேருவில, மகிந்தபுர பகுதிகளில் ஒரு சில ஷெல்கள் விழுந்தவுடனேயே அந்தப் பகுதி சிங்கள மக்கள் அச்சத்தால் அடுத்த நிமிடமே வீடுகளை விட்டு வெளியேறிய போது, பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்துவதாகவும் தோல்வியின் விளிம்பில் நிற்கும் புலிகள் மக்களை இலக்கு வைப்பதாகவும் பெரும் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

வாகரை மக்கள் இடம்பெயரும் போது அவர்கள் புலிகளின் தலைமையை வெறுத்துத்தான் செல்கிறார்களென்றால் சிங்கள மக்கள் இடம்பெயரும் போது எந்தத் தலைமையை வெறுத்துச் செல்கிறார்களென இவர்கள் எதுவுமே கூறுவதில்லை.

உயிர் அச்சுறுத்தலென்று வரும் போது அது எந்த மக்களாயிருந்தாலும் பாதுகாப்புத் தேடி ஓடுவார்களென்பது யதார்த்தம். வடக்கிலும், கிழக்கிலும் விழும் ஷெல்களும் விமானக் குண்டுகளும் கொழும்பிலும் கண்டியிலும் விழுந்தாலும் இதேநிலைமைதானென்பதை அரசும் படைத்தரப்பும் உணராதது நகைப்புக்கிடமானது.

போர் நிறுத்த உடன்பாட்டை நிராகரித்து அரசு முழு அளவில் போரைத் தொடங்கிவிட்டதால் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேறிவிட்டது. போர் நிறுத்த உடன்பாடானது. வெறுமனே எழுதப்பட்டதொரு காகிதமாகவேயுள்ளது. இராணுவ வெற்றிகள் மூலம் தமிழர்களை நெருக்கடிக்குள் தள்ளி அடிபணிய வைத்தவிடவேண்டுமென்பதே ஆட்சியாளர்களின் திட்டம்.

ஆனாலும், இதன் விளைவுகள் குறித்து ஆட்சியாளர்கள் உணரத் தவறிவருகின்றனர். இந்த போர் வடக்கு - கிழக்குடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல என்பது அனைவரும் அறிந்ததால் போரின் விளைவுகள் தெற்கிலும் மோசமாக எதிரொலிக்கப் போகின்றன. அவ்வாறானதொரு நிலைமை ஏற்படும் போது வடக்கு - கிழக்கின் இன்றைய நிலை குறித்து சர்வதேச சமூகமும் உணரும்.

யாழ்.குடாநாட்டை கைப்பற்றியதும் புலிகளின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டதாக அப்போதைய ஆட்சியாளர்கள் மார்தட்டினர். ஆனால் வன்னிக்குச் சென்ற புலிகள் அதன்பின் என்ன செய்தார்களென்பதை முழு உலகும் அறிந்தது. அதேபோன்றதொரு நிலைமை தற்போதும் உருவாகி வருகிறது.

கிழக்கை புலிகளிடமிருந்து மீட்கும் போரென படையினர் தற்போது தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இதற்கு பாரிய பதிலடியொன்று முற்றுப்புள்ளி வைக்குமென்பதால் புலிகள் கிழக்கில் தருணம் பார்த்திருக்கிறார்களென்பது தெளிவு. அது எப்போது என்பதுதான் இன்றைய கேள்வி?


விதுரன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..