|
பின்லேடனின் மைத்துநர் சுட்டுக்கொலை |
|
|
|
Thursday, 01 February 2007 |
|
அல் -ஹைடா தலைவர் ஒசாமா பின்லேடனின் மைத்துனர் மடகாஸ்கரில் உள்ள அவரது வீட்டில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.சவூதியைச் சேர்ந்தவர் ஜமால் கலீபா. இவர் பின்லேடனின் மைத்துனர் ஆவார். மடகாஸ்கரில் வைர வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவருக்குச் சொந்தமாக வைர சுரங்கமும் உள்ளது.
செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் ஜமால் இருந்தபோது அடையாளம் தெரியாத 30 பேர் வீட்டிற்குள் புகுந்து ஜமாலை சரமாரியாக சுட்டனர். இதில் இரத்த வெள்ளத்தில் மிதந்த ஜமால், அங்கேயே பிணமானார். இதுகுறித்து ஜமாலின் சகோதரர் மாலிக் கலீபா டுபாயைச் சேர்ந்த அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், எனது சகோதரரைச் சுட்டுக் கொன்றவர்கள் திருட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் எனத் தெரிகிறது.
சகோதரரைக் கொன்று விட்டு வீட்டில் இருந்த அரிய வைரங்கள் உள்ளிட்டவற்றை திருடிக் கொண்டு அவர்கள் சென்றுவிட்டனர். இதுகுறித்து முழுமையான தகவல்கள் எங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இந்தக் கொலையில் அரசியல் நோக்கம் இருப்பதாக தெரியவில்லை என்றார் அவர். ஜமால், பிலிப்பைன்ஸில் உள்ள அபு சயாப் என்ற தீவிரவாத இயக்கத்திற்கு பண உதவி அளித்து வந்ததாக ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டுள்ளது. ஆனால் இதை மாலிக் மறுத்துள்ளார். பின்லேடனின் மைத்துனர் என்ற உறவைத் தவிர பின்லேடனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
நெருடல் இணையம்
|