|
மகிந்தர் புலனாய்வுத்துறையை நம்புவதை விட ஜோதிடர்களை நம்புவது அதிகம். |
|
|
|
Saturday, 03 February 2007 |
|
மகிந்தர் புலனாய்வுத்துறையை நம்புவதை விட ஜோதிடர்களை நம்புவது அதிகம். மாசி, பங்குனி மாதங்களில் ஸ்ரீலங்கா அரசுக்கும் மகிந்தருக்கும் ஆபத்தான காலம் என்று ஜோதிடர்கள் கூறி விட்டார்கள். ஜோதிடப்படி ஆபத்தான, அடுத்த இரண்டு, மூன்று மாதங்களில் புலிகளின் பெரும் தாக்குதல்கள் ஏதாவது நடந்து, மகிந்தரின் ஆட்சி கட்டில் ஆட்டம் கண்டு விடக்கூடாது, என்ற பயத்தினால் பின்னப்பட்ட வலை தான் இந்த சமாதான நாடகம்.
இந்த நாடகத்தின் நோக்கம் அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் புலிகளின் அதிரடி நடவடிக்கைகள் எதுவும் நடந்து விடாமல் தடுப்பது தான். இந்த கிரகநிலை மாற்றத்தின் முன்னே செய்து விட வேண்டும் என்பதற்காக தான், கட்சி தாவல் கோமாளித்தனம், மொத்தம் 100 பேருக்கும் அதிகமான அமைச்சரவை என்று எல்லா அவசர தெருக்கூத்தும் ஆடி இருக்கிறார் மகிந்தர்.
தானாகவே இறங்கி வந்து சமாதானம் பேசுவது போன்ற தோற்றம் சிங்கள மக்களிடம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, காத்திருந்து காலியில் நடந்த உதவி வழங்கும் மாநாட்டில் சர்வதேசத்தின் அழுத்தத்தின் நிமித்தம், சமாதான பேச்சுக்கான முயற்சியில் தான் ஈடுபடுவதை போன்ற ஒரு காட்சியை மகிந்தர் அரங்கேற்றியிருக்கிறார்.
ஜோதிடத்தின் பேரில் அரங்கேற்றி இருக்கும் இந்த நாடகத்தில், நோர்வேயையும் இழுத்து விட்டு இந்தியாவிற்கும், ஐரோப்பிய யூனியனுக்கும், சமாதான முன்னெடுப்பு என்று அல்வா கொடுக்கவும் ஒரு சின்ன முயற்சி. அவ்வளவு தான்.
மகிந்தரின் ஜாதகத்தில் கிரகநிலை பாதகமாக உள்ளது என்று எழுதியதற்காக, அண்மையில் ஒரு சிங்கள ஜோதிட இதழின் நிருபரை கைது செய்து அடித்து உதைத்த ஒரு அரசிடம் இது போன்ற முற்போக்கு சிந்தனைகளை தானே எதிர்பார்க்க முடியும்.
ஜோதிடர்கள் சொன்னார்கள் என்பதற்காக தங்க கட்டிலில் படுத்து உறங்கிய பிரேமதாசவிற்கு என்ன நடந்தது என்று தெரிந்திருந்தும் மகிந்தர் ஜோதிடர்களை நம்பி ஆட்சி செய்வது தான் ஆச்சரியம்.
ஏனென்றால் மகிந்தரின் சேர்க்கை அப்படி. குட்டிச்சாத்தான் ஏவலிலும், மந்திர வித்தைகளிலும், பேய் விரட்டலிலும் நம்பிக்கை கொண்ட பிக்குகளின் கட்சியான "ஹெல உருமய" போன்றவர்களிடம் ஆலோசனை கேட்டு ஆட்சி செய்யும் ஒரு ஜனாதிபதியிடம் இதை தவிர வேறு எதை எதிர்பார்ப்பது?!
vetti vel கருத்துக்களம் yarl.com
|