பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow அரச பயங்கரவாதச் செயல்களை அம்பலப்படுத்த ஐ. தே. க. தயாரா?
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

அரச பயங்கரவாதச் செயல்களை அம்பலப்படுத்த ஐ. தே. க. தயாரா? அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 17 March 2007

இலங்கையில் குறிப்பாக அரசுப்படை களின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் ஆட்கடத்தல்களும், அச்சுறுத்திக் கப்பம் அறவிட லும், கடத்தப்படுவோர் காணாமற் போதலும், மனிதப் படுகொலைகளும் எல்லை மீறி வகை தொகையின்றி இடம்பெறுகின்றன சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுக் கள், அமெரிக்காவின் மனித உரிமைகள் கண் காணிப்பு அமையம், சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியவை எல்லாம் இவ்விவகாரம் குறித்து சிரத் தையும், கவலையும், கண்டனமும் வெளியிடுமள வுக்கு நிலைமை சென்றுவிட்டது.

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை மோசமடைந்து வருவதை அடுத்து, மனித உரி மைகளைக் கண்காணிப்பதற்காகத் தனது பிராந் திய அலுவலகம் ஒன்றை இங்கு அவசர அவசரமா கத் திறக்கவேண்டிய தேவை எழுந்திருப்பதாகவும், இது குறித்து தனது ஆணைக்குழு உரிய கோரிக் கையை முன்வைத்திருப்பதாகவும், ஐ. நாவின் மனித உரிமைகள் தூதரகத்தின் உயர் ஸ்தானிகர் லூயில் ஆர்பர் அம்மையார் குறிப்பிட்டிருக்கின்றார்.

இதேசமயம், இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பான பட்டியலை சம்பவ விவரங்களை அரசில் அங்கம் வகிக்கும் பிரதி அமைச்சர் ஒருவரே மலையக மக்கள் முன்னணியைச் சேர்ந்த இரா தாகிருஷ்ணனே அவ்வப்போது வெளியிட்டு அம்பலப்படுத்தி வருகின்றார்.

தவிரவும், கொழும்பில் இயங்கும் மக்கள் பணிக் குழுவும் இதுபற்றிய புள்ளி விவரங்களை சேகரித் துப் பதிந்து வெளிப்படுத்தி வருகின்றது.

ஆனால் இத்தனைக்கும் மத்தியில் மனித உரிமை மீறல்கள் பற்றிய கொடூரம் விஸ்வ ரூபம் எடுத்து பெரிய விவகாரமான பின்னரும் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்க முயல் வது போல, இலங்கையில் மனித உரிமை மீறல் கள் ஒன்றும் அப்படி மோசமாக இல்லை என்று கதை விட்டிருக்கின்றார் அரசுப் பேச்சாளர் அமைச்சர் பிரியதர்ஷன யாப்பா.

""இங்கொன்றும் அங்கொன்றுமாக சில சம் பவங்கள் நடக்கின்றமை உண்மைதான். தனிப்பட்ட குரோதங்கள், வர்க்கப் பகைகள், பழிவாங்கல்கள் போன்ற தனிப்பட்ட விடயங்களே அவற்றுக்குக் காரணம்'' என்றும் புரூடா விட்டிருக்கிறார் அவர்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோச மான கட்டத்தை அடைந்திருக்கின்றமை குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐ. தே. கவும் மிகவும் விசனமுற்றிருப்பதாகத் தெரிகின்றது.

இவ்விடயம் தொடர்பாக உண்மையை அம் பலப்படுத்தும் விவரமான அறிக்கை ஒன்றைத் தயாரித்து சர்வதேச ரீதியில் உலகின் கவனத்துக்குக் கொண்டுவரத்தக்க வகையில் அதனை வெளியிட ஐ. தே.க. ஆயத்தம் செய்து வருவதாகவும் தெரி கிறது. இம் முயற்சிக்கு எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக் கிரமசிங்கவின் முழு வழிகாட்டலும் ஆதர வும் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
நல்ல நடவடிக்கை. வரவேற்கத்தக்க முயற்சி. பொறுப்புள்ள எதிர்க்கட்சியின் பயனுள்ள செயற் பாடாக இதைக் கருதலாம்.

ஆனால் இவ்விடயம் குறித்து சில விவகா ரங்களை நேரத்துடனேயே எதிர்க்கட்சித்தலை வருக்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானது எனக் கருதுகிறோம்.

இலங்கையில் இப்போது இடம்பெறுவது வெறும் மனித உரிமை மீறல் நடவடிக்கை மட்டுமல்ல. அதற்கு அப்பால் கொடூரமான திட்டமிட்ட பின் னணியைக் கொண்ட ஒரு பயங்கரச் செயற் பாடாகவும் இவை அமைகின்றன.

அங்கொன்றும், இங்கொன்றுமாக சில "கிரி மினல்' களால் மேற்கொள்ளப்படும் வெறும் கடத் தல், கப்பம் கோரல், காணாமற் போகச் செய்தல், படு கொலை செய்தல் நடவடிக்கைகள் அல்ல இவை.

இவற்றின் பின்னணியில் இரண்டு முக்கிய அம்சங்கள் பொதிந்துள்ளன.

ஒன்று ஒரு பெரிய கட்டமைப்பு நீதியான சட்ட விரோத செயற்குழுக்களின் பெறுபேறு களாகவே இந்த மனித உரிமை மீறல் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இயக்கச் செயற்பாடு ஒன்றை மையமாகக் கொண்ட தொடர் குற்றங்களே இவை. ஆதலால் இவைவெறும் "கிரிமினல்' குற்றங்கள் மட்டு மல்ல, அவற்றுக்கு அப்பால் இவை "பயங்கரவாதச் செயல்கள்' என்ற வகைக்குள் வர வேண்டியவை.
அடுத்தது இந்தக் கொடூரங்கள் மற்றும் அவற்றை இழைப்போர் சட்டத்தின் முன் கொண்டு வரப்படாமல், தவிர்க்கப்பட்டு, விசேட விலக் களிக்கப்பட்டு, பாதுகாக்கப்படுவதை நோக்கும்போது இந்த அட்டூழியங்களின் பின்னணியில் அரசின் வலுவுள்ள அரூபக் கரங்களின் ஆதர வும், பாதுகாப்பும், ஒத்துழைப்பும் ஏன் வழிகாட்ட லும் கூட இந்தக் கூட்டுச் செயற்பாடுகளை ஒன்றிணைக்கும் போக்கில் இழை ஓடுவதை நோக்கர்கள் இலகுவாகப் புரிந்து கொள்வர்.

இதன் காரணமாக, இந்தப் பயங்கரவாதம் "அரச பயங்கரவாதம்' என்று வகைப்படுத்தப்பட வேண்டி யதாக அமைகின்றது.

இந்த உண்மை பகிரங்க இரகசியம் எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவுக்கும் நன்கு தெரியும்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இடம் பெறும் இந்தக் கொடூரங்கள் குறித்து கவலையும் கண்டனமும் தெரிவித்து அரசுத் தலைமை மீது குறை கூறிவரும் ஐ. தே. கட்சியினரும் அதன் தலை வர் ரணில் விக்கிரமசிங்கவும், அரசின் அரூபக் கரங்களின் பின்னணியோடு, முன்னெடுக்கப் படும் இக் கொடூரங்களை "அரச பயங்கரவாதமே' என்று வகைப்படுத்தி, உண்மையை சர்வதேச சமூகத்துக்கு அறிவிக்கத் தயாரா?

அல்லது பௌத்த, சிங்களப் பேரினவாத மேலாண்மைக்குப் பயந்துகொண்டு அரசியல் ரீதியாக வலுவுள்ள அந்தத் தென்னிலங்கை சக்தி களின் ஆதரவை இழக்க விரும்பாமல் சமாளிப்பதற் காக இந்த அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந் தும் வெறும் மனித உரிமை மீறல்கள் என்ற பொதுக் கணக்குக்குள் காட்டி அவர்கள் சமாளிக்கப் போகின் றனரா?

அறியக் காத்திருக்கின்றார்கள், இந்த அரச பயங்கரவாதத்தால் நேரடியாகவும், பெருமளவி லும் பாதிக்கப்பட்ட தமிழர்கள். ஐ. தே. கவின் பதில் என்னவோ? 


Uthayan
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..