பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow புஷ் இழைத்த வரலாற்றுத் தவறு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

புஷ் இழைத்த வரலாற்றுத் தவறு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 21 March 2007
பலம் விஞ்சும்போது நீதியும், நியாயமும் மறைக் கப்பட்டு விடுவதுண்டு. அகந்தையும், திமிரும், மமதை யும் நியாயத்தின் கண்ணை மறைத்து விடும். தனி நபர் களுக்கு மட்டுமல்ல, தேசங்களுக்கும் இது பொருந் தும். வலுக்கொண்டு நிற்கும் வல்லாதிக்க சக்திகள் நீதி, நியாயம் மறந்து செயற்படு வது இதனால்தான்.

ஆனால் பட்டறிவுப் பாடத்திலிருந்து திருந் தாமல் மீண்டும், மீண்டும் அதேதிமிர்ச் செருக்கில் அவை விழுந்து எழும்புவது மட்டுமல்லாமல் அந் தச் செயற்பாட்டின் மூலம் உலகின் ஏனைய மக்களையும் சொல்லொணா துன்ப, துயரங்களில் ஆழ்த்தி வருவதும் அவற்றின் இயல் பான செயல்பாடாகவே இருந்து வருகின்றது.

கடந்த நூற்றாண்டில் உலகின் போரியல் வரலாற்றை உற்று நோக்குபவர்கள் வல்லாதிக்க சக்திகளின் நான்கு பெரும் தோல்விகளை பின்னடைவுகளை முக்கிய மாக எடுத்துரைப்பர்.

படைப்பல வலுவிலும், துருப்புகளின் எண்ணிக் கையிலும் பல ஆயிரம் மடங்கு பெரிய வல்லாதிக்க சக்தி கள், எண்ணிக்கையில் மிகச் சொற்பமான ஆயுதப் பலத்திலும் பயிற்சி மற்றும் தேர்ச்சியிலும் மிக வலுவிழந்த ஆனால் அதேசமயம் தமது கொள்கை, இலட்சியம், இலக்கு ஆகியவற்றில் திடமான பற்றுறுதியும், உரமான திடசங்கற்பமும் கொண்ட எதிரிகளிடம் மண்டியிட்ட சரித் திரம்தான் அது.

ஆப்கானிஸ்தானில் ரஷ்யாவுக்கும், வியட்நாமில் அமெரிக்காவுக்கும், கம்பூச்சியாவில் சீனாவுக்கும், இலங்கை யில் இந்தியாவுக்கும் இராணுவ ரீதியில் கிடைத்த தோல் விப் பாடங்கள்தாம் அவை.

அந்தக்கையைச் சுட்டுக்கொண்ட பட்டறிவின் பின்னரும் உலக வல்லாதிக்க சக்தியான அமெரிக்கா திருந்தவேயில்லை என்பதுதான் வேதனைக்குரி யது. அண்மைக்காலத்தில் முதலில் ஆப்கானிஸ் தானிலும் பின்னர் ஈராக்கிலும் அத்துமீறிய அமெ ரிக்கா, இப்போது அதன் பயனை "வாங்கிக் கட்டிக் கொண்டு' ஆப்பி ழுத்த குரங்காகத் துடிக்கின்றது.

வியட்நாமில் கிடைத்த மரண அடியோடு அமெ ரிக்கா திருந்தியிருக்க வேண்டும். திருந்தவில்லை. இனியும் திருந்தாது போலவே தென்படுகிறது.

ஆப்கானிலும், ஈராக்கிலும் அதே பாணி அத்து மீறலை ஆக்கிரமிப்பை தொடர்ந்த அமெரிக்கா இப்போது அந்தரிக்கின்றது.

ஈராக் மீதான தனது ஆக்கிரமிப்புக்கு அமெரிக்க அதிபர் புஷ் மூன்று முக்கிய காரணங்களை முன் வைத்தார்.

முதலாவது அல் குவைதா தீவிரவாதி களோடு தொடர்பு வைத்துள்ள ஈராக்கின் சதாம் ஆட்சியை, பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய ரீதியிலான தனது போராட்டத்தின் ஒரு கட்டமாக அழிப்பது.

அடுத்தது மனித குலத்துக்கு எதிரான பயங்கர அழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்துவைத் துள்ள சதாமின் ஆட்சியைக் கவிழ்த்து உலகைப் பேரழிவி லிருந்து காப்பாற்றுவது.

மூன்றாவது தனது பிராந்தியத்தில் ஆக்கிரமிப்பு சக்தியாக விளங்கும் ஈராக்கின் சர்வாதிகார நிர்வா கத்தை அகற்றி, அங்கு ஜனநாயக ஆட்சியையும், பாதுகாப்பும், ஸ்திரத்தன்மையும், சுமுக நிலையும் கொண்ட நிர்வாக முறைமையையும் ஏற்படுத்துவது.

இந்த மூன்றுமே தவறானவை, தவறிப் போனவை, அர்த்தமற்றவை என்பது இப்போது ஐயம் திரிபற நிரூ பணமாகியிருக்கின்றது.

சதாமின் ஆட்சிக்கும் அல் குவைதா செயற் பாட் டிற்கும் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. மனித குலத் துக்கு எதிரான பயங்கர ஆயுதங்கள் தயாரிக்கும் எந்த முயற்சியிலும் சதாம் ஈடுபடவில்லை என்பவையெல் லாம் இப்போது உறுதியாகியிருக்கின்றன.

ஈராக்கில் ஸ்திரமான, ஜனநாயக ஆட்சிமுறை என் பது சதாமின் அரசை புஷ் நிர்வாகம் ஆக்கிரமிப்பு நடவ டிக்கை மூலம் கவிழ்த்ததன் மூலமே கனவாகிப் போயி ருக்கின்றது.
பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்து, பேரழிவுக் குள் சிக்கி அல்லலும், அவலமும்படும் ஈராக்கின் இன் றைய நிலைமையைத் தனியாக இங்கு விவரிக்கத் தேவை யேயில்லை. ஈராக்கிலிருந்து தினசரி கிடைக்கும் மோச மான உயிர், உடைமை அழிவுகளை பற்றிய செய் திகளை அறிந்து உலகமே விக்கித்துப் போய் நிற்கின்றது.

ஜனாதிபதி புஷ் தமது வாயால் வெட்டி வீழ்த் திய "ஸ்திரமான ஜனநாயக ஆட்சி' சதாமின் அதிகாரம் கவிழ்க்கப்பட்ட பின்னர் ஈராக்கில் மலரவேயில்லை. ஜனநாயகத்தின் பெயரால் மத அடிப்படைவாத சக்தி கள் பிளவுபட்டு நின்று ஈராக்கையே சின்னாபின்ன மாக்கும் அவல நிலை யைத்தான் புஷ் நிர்வாகத்தின் "முட்டாள் தந்திரோ பாயம்' இன்று உருவாக்கி மலரச் செய்திருக்கின் றது.

ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு நான்கு ஆண்டுகளைப் பூர்த்தி செய்யும் இந்தச் சமயத்தில், இறைமையுள்ள ஈராக்கின் கடைசி ஆட்சித் தலைவ ரான சதாம் ஹுசைன் உயிருடன் இல்லை. அமெரிக்க வல்லாதிக்கத்தின் கூட்டுச்சதியால் அவர் கொல்லப் பட்டுவிட்டார்.

ஆனால் ஈராக்கின் இன்றைய அவல நிலையை நோக்குபவர்களுக்கு ஒரு விடயம் தெளிவாகப் புரிகிறது.

இன்று, இப்படி மத அடிப்படைவாதத்தில் பிளவு பட்டு, மோசமான வன்முறையும் யுத்தக்களரியும், கொலை வெறியும் அரங்கேறும் போர்ப் பூகம்பப் பூமியாகக் காட்சியளிக்கும் ஈராக்கை, அமைதியான நாடாக சுமார் இரண்டரை தசாப்தகாலம் ஆட்சி செய்து நிர்வகித்த சதாம் கெட்டிக்காரர். "இரும்புப் பிடி' மனி தர் என்று அவர் வர்ணிக்கப்பட்டாலும், இவ்வளவு மத அடிப்படைவாதப் பிளவில் சிக்கக் கூடிய சக்திகளை அவை வெளிக்கிளம்ப விடா மல், கட்டுப்படுத்தி, ஓர் உறுதியான ஸ்திரமான சட்டமும் ஒழுங்கும் நிலவுகின்ற ஆட்சியை நிலைநிறுத்தி, ஓர் சுபீட்சமான வாழ்வை ஈராக் மக் களுக்குத் தந்தவர் அவர்.

அதற்காக "இரும்புப்பிடி' மனிதராக அவர் இருந் திருந்தாலும் அதில் நியாயம் இருக்கவே செய்கிறது என்பதை உலகம் இன்று ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றது.
ஈராக் விவகாரத்தில் பெரும் குற்றமிழைத்த தவ றுக்காக உலகின் மனச்சாட்சி என்ற நீதிமன்றில் குற்ற வாளிக்கூண்டில் நிற்கின்றது புஷ் நிர்வாகம். ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத்தத்தை முன்னெடுத்தமை மூலம் புஷ் தவறிழைத்தார் என்றால், அந்தக் குற்றத்தை இழைத்த பின்னரும், மீண்டும் ஒரு தடவை அமெரிக்க அதிபர் என்ற வல்லாதிக் கத் தலைமைப் பதவிக்கு அவரைத் தேர்ந்தெடுத்த தன் மூலம் அமெரிக்க மக்களும் குற்ற மிழைத் திருக்கின்றார்கள்.

புஷ் விட்ட தவறைத் திருத்துவதற்குத் தமக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல் கடந்த ஜனா திபதித் தேர்தலிலும் அவரை மீண்டும் ஜனாதிபதி யாக்கி உலக அரங்கில் புஷ் இழைத்த குற்றங்களுக் குத் தங்களையும் பங்குதாரர்களாக்கி யிருக்கின்றனர் அமெரிக்க மக்கள்.

இந்தத் தவறுக்கான விளைவுகளை அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் மட்டுமல்லாமல் முழு உல கமுமே எதிர்கொண்டுதான் ஆகவேண்டியிருக்கும். அது தவிர்க்க முடியாதது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..