பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow ஜனநாயகத்தின் பெயரால் யுத்தநிறுத்தத்துக்குச் சாவுமணி..
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஜனநாயகத்தின் பெயரால் யுத்தநிறுத்தத்துக்குச் சாவுமணி.. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 02 April 2007
இலங்கையின் இனப்பிரச்சினை மிகக் கூர்மை யடைந்தமைக்கு முக்கியமான காரணம், நாட்டின் நிர்வாக விடயங்கள் நீதி, நியாயம், தார்மீகம் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகப்படாமல், பெரும்பான்மை சிறுபான்மை என்ற எண் ணிக்கை அடிப்படையில் கையாளப்பட்டமைதான் என்பது கண்கூடு.

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்கள் இலங்கை மீதான தங்களின் பிடியைக் கைவிட்டு, ஆட்சி அதிகாரத்தை உள்நாட்டவர்களிடம் சுதேசிகளிடம் ஒப்படைத்தபோது பெரும்பான்மையினர் என்ற அடிப்படையில் அது சிங்களவர் களின் கைகளில் போய் வீழ்ந்தது.

சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் வீழ்ந்ததும், சிங்களப் பேரினவாதம் மேலாண்மை அதிகாரம் பெற்றது. இதனால் சிறு பான்மையினருக்கு எதிரான அரச அடக்கு முறை குரூர வன்முறை வடிவம் எடுத்து, தமிழின அழிப்பு அத்தியாயங்களாக அரங்கேறியது.

பெரும்பான்மை இனத்தவர்கள் என்ற கோதா வில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையின ருக்குக் கிடைத்த அட்சரகணிதப்படியான அதிகளவு ஆசன எண்ணிக்கை, நாடாளுமன்றத்தை சிறுபான்மையினருக்கு எதிரான கொடுங் கோன்மைச் சட்டம் இயற்றும் அரங்காக மாற்ற உதவியது. அங்கு இன்றுவரை இனவாதமே அர சோச்சுகின்றது. சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்கள் அங்கு தொடர்ந்து இயற்றப்பட்டன.

எண்ணங்களை விட எண்ணிக்கை பெரிதா கக் கருதப்பட்டதால் நீதியையும் நியாயத்தை யும் விட, ஆதரவு வாக்குகளின் கணக்கில் உயர்ந்து நின்ற அநீதியே பெரிதெனப் போற்றப்பட்டதால் சிறுபான்மையினருக்கு எதிரான கொடூரங்களும் அடக்குமுறைகளும் ஜனநாயகத்தின் பெயரால் அங்கு நியாயமாக்கப்பட்டு, சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

சிறுபான்மையினரான தமிழர்களுக்கு நீதி வழங்கும் விடயத்தில், இந்த வாக்கு எண்ணிக்கை விவகாரத்தைக் காட்டியே சிங்களத் தலைமை "உச்சி' , தப்பித்து வருகிறது என்பதும் உலக றிந்த இரகசியம்.

இப்போதும் நீதி, நியாயமாக விவகாரங் களைக் கையாளாமல், அதிலிருந்து பிறழ்வதற் கான மற்றொரு சந்தர்ப்பத்துக்கும் மஹிந்தரின் அரசும் இந்த வாக்கு எண்ணிக்கை விவகாரத் தையே இலாவகமாகப் பயன்படுத்தப் போகின் றது என்ற செய்தி கசிந்திருக்கின்றது.

அரசின் ஏடான ஏரிக்கரைப் பத்திரிகையின் நேற்றைய ஞாயிறு வெளியீடு, இந்தத் தக வலைக் கசிய விட்டிருக்கின்றது.

"அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் 2001 ஆம் ஆண்டு முற்பகுதியில் செய்துகொள்ளப் பட்டு, ஐந்து வருடங்களைக் கடந்துள்ள யுத்த நிறுத்த உடன்பாட்டின் எதிர்காலம் குறித்துத் தீர் மானிக்க சர்வஜன வாக்கெடுப்பு ' என்ற கேள் விக்குறியோடு ஜனாதிபதி செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.

போர் முனைப்போடு செயற்படும் மஹிந்த ரின் அரசு, யுத்த நிறுத்தத்தை முறித்து, முழு அளவிலான போரில் குதிப்பதற்குத் தயாராக நிற் கின்றது. அமைதி வழியில் சமாதானத் தீர்வை எட்டுவதற்கான முயற்சிகளில் இதய சுத்தியோடு ஈடுபடுங்கள் என்று சர்வதேச சமூகம் கொடுக் கும் அழுத்தம், மஹிந்தரின் அரசின் காதுகளில் நாரசமாய் ஒலிக்கின்றது.

யுத்த நிறுத்தத்தை முறித்து, தனது போர் வெறித்தனத்தைக் கட்டவிழ்த்து விடுவது சர்வ தேச ரீதியில் தமக்கும், தமது அரசுக்கும் பெரும் பின்னடைவுகளையும், எதிர்ப்பையும், சிக்கல் களையும் தோற்றுவிக்கும் என்பதை நன்கு உணர்ந்துள்ள மஹிந்தர், போரைக் கட்டவிழ்த்து விடுவதற்கான அங்கீகாரத்தை "ஜனநாயக வழி முறை' என்ற கேலிக்கூத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும் புதிய அபத்த நாடகம் ஒன்றை அரங் கேற்ற விரும்புகின்றார் போலும்.

"நானாக விரும்பி யுத்த நிறுத்தத்தை முறிக்க வில்லை. இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் கூறினார்கள். ஆகவே யுத்தநிறுத்தத்தை முறிக் கிறேன். நாட்டு மக்களின் விருப்பத்துக்கு மாறாக நாட்டின் ஜனாதிபதி செயற்படமுடியாது. ' என்று சர்வதேச சமூகத்துக்கு சமாதானம் கூறிக் கொண்டு, தமது யுத்த வெறிப் போக்கைக் கட்ட விழ்த்து விடத் தயாராகின்றார் ஜனாதிபதி.

"யுத்த நிறுத்த உடன்பாடு குறித்து சர்வஜன வாக்கெடுப்பு?' என்ற தலைப்பில் அரச ஊட கம் வெளியிட்ட முதலாம் பக்கப் பிரதான செய்தி யின் பின்னால் பொதிந்துள்ள ஆழமான அர்த்தம் இதுதான்.

நாட்டில் யுத்தத்தையும் சமாதானத்தையும் பிரகடனப்படுத்தும் முழு அதிகாரம் ஜனாதி பதிக்கே உண்டு. அரசமைப்பின் 33(உ) பிரிவு இதனைத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் எடுத்துரைக்கின்றது.

எனவே நாட்டின் தேசியச் சிக்கலான இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு யுத்தநிறுத் தம் அவசியமா? அல்லது யுத்த நிறுத்தத்தை முறித்துப் போருக்குப் போவதா ? என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர் ஜனாதிபதிதான்.

இவ்விடயத்தில் சிறுபான்மையினருக்கு நீதி செய்வதற்கு எது அவசியம் என்பதை நியாயத் தின் அடிப்படையில் அவர் தீர்மானிக்க வேண் டுமே தவிர, வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலான முடிவின் பிரகாரம் தீர்மானிக் கக் கூடாது.
ஆனால் வழமைபோல சிறுபான்மையின ருக்குத் தீங்கிழைப்பதற்குப் பெரும்பான்மையின ரின் எண்ணிக்கையை "ஜனநாயக முறைப்படி' (?) பயன்படுத்துவது போல இதிலும் சர்வஜன வாக்கெடுப்பு என்ற கணக்கு அவிழ்த்து விடப் பட்டிருக்கின்றது.
மொத்தத்தில், இது, ஜனநாயகத்தின் பெய ரால் யுத்த நிறுத்தத்துக்கு சாவுமணி அடிக்கும் எத் தனம் ஆரம்பித்து விட்டது என்பதையே வெளிப் படுத்தி நிற்கின்றது. 


உதயன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..