பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow ''ராடர்களும் ஏவுகணைகளும் புலிகளுக்கும் கொள்வனவு''
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

''ராடர்களும் ஏவுகணைகளும் புலிகளுக்கும் கொள்வனவு'' அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 16 April 2007
தமிழீழ விடுதலைப் புலிகளின் விமானங்கள் சிறிலங்காவின் வான் பரப்பிற்குள் சென்று கட்டு நாயக்கா விமான நிலையத்தில் துணிகர அதிரடித் தாக்குதலை நடத்திவிட்டுத் திரும்பியமை குறித்த சலசலப்புகள் இன்னும் ஓயவில்லை. 

இத்தாக்குதலால் ஏற்பட்ட அவமானத்தை சகித்துக் கொள்ள முடியாத மகிந்த அரசாங்கம் தமிழீழ விடுதலை புலிகளின் வான் படைக்கு எதிரான வான் படை ஏதிர்ப்பு கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கைகளை மேற் கொண்டிருக்கிறது.

சிறிலங்காவின் சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்கள் புலிகளின் விமானம் தாக்குதல் நடாத்தி பாதுகப்பாக தளம் திரும்பிய சிறிது நேரத்திலேயே முதலாவது பாதுகப்புச் சபையினை கூட்டி புலிகளின் விமானப் படைக்கு எதிரான படைப்பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை முப்படைத் தளபதிகளுக்கும்,  குறிப்பாக விமானப் படைத் தளபதிக்கும் சுட்டிக்காட்டினார் உடனடியாக உருவாக்குவதற்கான திட்டம் அப்போது பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் முன் மொழியப்பட்டது. 

வான் புலிகள் எதிர்ப்பு கட்டமைப்பு தொடர்;பாக திட்ட அறிக்கை ஒன்றை 2வது பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கும் படியும், அதனை உடனடியாக நடை முறைப்படுத்துவது தொடர்பாக பர்pசீலிக்கும் படியும்; கூறப்பட்டது. 

அத்திட்டத்தின் படி வான் பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்படவுள்ளது. இதற்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பங்கள் விமானப் படையினரிடம் இருந்து கோரப்படுகின்றது. 

புலிகளின் விமானங்களை கண்டுபிடிப்பதற்கு ராடர்களை கொள்வனவு செய்யவும், விமான எதிர்ப்பு ஆயுதங்களை கொள்வனவு செய்யவும் மகிந்த ராஜ பக்ஷ உடன் அனுமதியினை வழங்கியுள்ளதுடன் அதற்கான ஒழுங்குகளையும் மேற் கொள்ள சம்பந்தப்பட்ட அதிகரிகளைப் பணித்துள்ளார் 

புலிகளின் வான்படை பலத்தினை அழிக்க அல்லது, பலவீனப்படுத்த  மகிந்தர் மேற் கொள்ளும் ஆயுதக் கொள்வனவுகள் புலிகளுக்கே வாய்ப்பாக அமையப்போகிறது. 

தோளில் வைத்து ஏவும் ஏவுகணைகளை உடன் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. 

ராடர்களை வடகிழக்கு உட்பட இலங்கைத் தீவின் பிரதான மையங்களில் பொருத்துவதற்கு பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முதன் முதல் பல நவீன ஆயுதங்களை அன்பளிப்பு செய்தது சிறலங்காப்படைகள்தாம். 

152 மி.மீற்றர், 132 மி.மீற்றர், 122 மி.மீற்றர் ஆட்லறிகள் உட்பட  பல தரப்பட்ட ராங்கிகள் அவற்றிற்கேற்ற எறிகணைகள், துருப்புக்காவி கவச வாகனங்கள் சிறிய ரக மோட்டார்கள், கடற்புலிகளின் பயன்பாட்டில் உள்ள நவீனரக கனரக எறிகணை செலுத்திகள் என்பன இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்து அவற்றினை சண்டைகளின் போது படையினர் புலிகளுக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளனர் 

அதே போல் இன்றும் சிறிலங்கா அரசாங்கம் புலிகளின் விமானங்களை அழிப்பதற்காக கொள்வனவு செய்ய விருக்கும் ராடர்களும் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் புலிகளுக்கும் சேர்த்துத் தான் அரசு கொள்வனவு செய்கின்றது எனக்கூறினால் அது பொருத்தமானது தான். 

வடக்கு கிழக்கு களமுனைகளில் ராடர்களை பொருத்தவும் ஏவுகணைகளைப்பயன்படுத்தவும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றது

இனி அவை புலிகளுக்கும் சொந்தமாகலாம். அவ்வாறு செந்தமாகும் போது அவை  அரசாங்கத்தின் கிபிர், மிக் விமானங்களுக்கு ஆபத்தாகலாம்.

சிறிலங்கப் படையினரிடம் இருந்து அடித்துப் பறிக்கும் ராடர்களும் எவுகணைகளும் சிறிலங்கா விமானப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகள் பயன்படுத்துவார்கள். அதற்கான காலம் தொலைவில் இல்லை. 

இது வரை காலத்தில் சிறிலங்கா அரசுக்கு சொந்தமான விமானங்கள் சில வற்றை  தெற்கில் ;வைத்து விடுதலைப் புலிகள்   அழித்துள்ளனர். இனிவரும் காலத்தில் வடக்குக் கிழக்கிலேயே அவற்றினை அழிப்பதற்கு அரசாங்கமே புலிகளுக்கு உதவி செய்து கொடுக்கபோகிறது. 

வெளி நாடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் ஏவுகணைகளை கொள்வனவு செய்வதற்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அவை பொருளாதாரப் பிரச்னை அல்லது கொள்வனவுப் பிரச்சினை எனப்பல. இனி வரும் காலத்தில் இப்பிரச்சினை ஏற்படாது அரசாங்கமே கொள்வனவு செய்து கொடுக்கப்போகிறது. 

சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சி எடுத்துள்ளது. இந்த நாடுகளிடம் விடுதலைப் புலிகள் சென்று கொள்வனவு செய்வது இலகுவான விடயம் அல்ல. அந்தப் பெரும் பிரச்சினையை சிறிலங்கா அரசங்கமே தீர்த்து வைக்கட்டும்.        


ச.சங்கரன் - ஈழமுரசு
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..