பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow திருமணம் மூலம் பிரிட்டனுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் ஆங்கிலம் பேசமுடியும் என்பதை உறுதிப்படுத்த வே
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2

திருமணம் மூலம் பிரிட்டனுக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் ஆங்கிலம் பேசமுடியும் என்பதை உறுதிப்படுத்த வே அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 26 May 2007

திருமணத்தின் மூலம் பிரிட்டனில் வசிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் தங்களால் ஆங்கிலம் பேசமுடியுமென உறுதிப்படுத்தும் பரீட்சையொன்றிற்கு தோற்ற வேண்டுமென அழைப்பு விடுத்துள்ள பிரிட்டனின் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி இது சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கு அவர்களுக்கு உதவுமெனத் தெரிவித்துள்ளது.

விசாவுக்கு விண்ணப்பிக்கும் தம்பதியினரின் கடைசி வயதெல்லை 18 இலிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் விண்ணப்பதாரிகள் தனித்தனியான நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ள வேண்டுமெனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இவ் அளவீடுகள் அரசினால் ஏற்றுக்கொள்ளப்படுமானால், இது கட்டாய மற்றும் போலியான திருமணங்களுக்கெதிரான ஓர் சிறந்த பாதுகாப்பை வழங்குமெனவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது. மேலும், அக்கட்சி தெரிவித்துள்ளதாவது;

2005 ஆம் ஆண்டில் 42,000 பேர் பிரிட்டனுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தொகை 2000 ஆம் ஆண்டை விட 26% வீதத்தால் அதிகரித்துள்ளது. இதில் 62% மானோர் ஆசியாவைச் சேர்ந்தவர்களாகவுள்ள அதேவேளை, 39% மானோர் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வந்தவர்களாவர். எங்கள் சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அவர்களால் முடியாதபோதும் அதிகளவான பெண்கள் திருமணத்திற்காக பிரிட்டனுக்கு அழைத்து வரப்படுகிறார்கள். ஆங்கிலம் பேசமுடியாத குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாடசாலைகளில் சிரமத்தை எதிர்நோக்குவதுடன், வளர்ந்தோர்கள் வேலைகளில் ஈடுபட முடியாமல் தவிக்கின்றனர்.

பிரிட்டனுக்குள் வரும் குடியேற்றவாசிகள் நிரந்தர வதிவிட விசாவினைப் பெறுவதற்கோ அல்லது பிரிட்டனின் குடியுரிமையைப் பெறுவதற்கோ ஆங்கிலத்தை திறமையாக வாசிக்கக்கூடிய பரீட்சை ஒன்றிற்கு தோற்ற வேண்டுமென்பது நடைமுறையிலுள்ள தகைமையாகும் என தெரிவித்துள்ளது.


Thinakkural
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..