பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow புதிய கோணத்தில் பழைய நகர்வுகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

புதிய கோணத்தில் பழைய நகர்வுகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 16 June 2007

அண்மையில் இந்திய மீனவர்கள் கடலில் தாக்கப்படுவது கடத்தப்படுவது தொடர்பாக தமிழக முதல்வர் திரு.மு. கருணாநிதி அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்திய இந்திய பாதகாப்பு ஆலோசகர் ஆர் கே நாராயணன் அவர்கள் அப்பேச்சுக்களின் பின்பு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் அவதானிகளால் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவர் சிறிலங்கா ஆயதக் கொள்வனவுக்கு பாகிஸ்தானிடமோ சீனாவிடமோ செல்லக்கூடாது. இந்தியாவிடம் வரவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

மேலும் அவர் சில ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது இந்தியா சிறிலங்கா அரசுக்கு ராடர் போன்ற தற்காப்பு ஆயதங்களை மட்டுமே வழங்கும் எனவும், இலங்கை இந்தியக் கூட்டுப்படைக் கடல் ரோந்து தொடர்பாக இந்தியா கடற்படையுடன் பேசிய பின்பே முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். அதே வேளையில் இச்சந்திப்பு நடைபெறுவதற்கு ஒரு சில தினங்கள் முன்பாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச ஒரு முன்னறிவித்தலற்ற உத்தியோக பற்றற்ற விஜயத்தை மேற்கொண்டு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் உட்பட பல அரசியல், படை உயர்மட்டத்தினரைச் சந்தித்துள்ளார் இச்சந்திப்புக்களின் போது இவர் இந்தியாவிடம் ஆயத உதவிகளைக் கோரியதாகவும் அப்படி இந்தியா உதவி வழங்காவிடில் வேறுநாடுகளிடம் கேள்விகள் கோரப்போவதாக தெரிவித்ததாகவும் பி.ரி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

மேலும், இச்சந்திப்புகளை அடுத்து இந்தியா கொழும்புக்கு ஆயதங்களை இரு விமானங்களில் இரகசியமாக அனுப்பியுள்ளதாக இந்திய பத்திரிகை ஒன்று ஊர்ஜிதப்படுத்தப்படாத செய்தியொன்றை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் வெளியிட்ட கருத்துக்களோ சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் வெளியிட்ட கருத்துக்களோ, அவர்கள் வெளியிட்ட கருத்துக்கள் மட்டுமே. இவை இருதரப்பிலும் எந்த ஒரு அரசாங்கத்தாலும் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. அவ்வாறே விமானங்களில் சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் அனுப்பியமை பற்றிய செய்தியும் இதுவரை எந்த ஒரு தரப்பினராலும் உறுதி செய்யப்படவில்லை.

இப்படியாக எந்த ஒரு அரசாங்கத்தாலும் திட்டவட்டமான எந்த ஒரு முடிவும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட இரு நாடுகளின் பாதுகாப்பு முக்கியஸ்தர்களும் வெளியிட்ட கருத்துக்களை அலட்சியம் செய்து விட முடியாது. அரசியல் பொருளாதார படையரீதியில் பெரும் பலம் கொண்ட பிராந்திய வல்லரசான இந்தியாவை எல்லா விதத்திலும் ஈடாடிப் போயுள்ள சிறிலங்கா மிரட்ட முயல்கிறதா என்ற கேள்வியும் இங்கே எழத்தான் செய்கிறது.

சிறிலங்காவின் இந்த மிரட்டல் இராஜதந்திரம் ஒரு புதிய விசயமல்ல. மேற்கு நாடுகளின் பக்கம் சாய்வது போன்ற ஒரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தி இந்தியா சீனா போன்ற நாடுகளிடம் உதவிகளைப் பெறுவதும் அவற்றைக் காட்டியே இந்தியாவைத் தனக்குச் சாதகமாகச் செயற்பட வைப்பதும் சிறிலங்கா நீண்டகாலமாக மேற்கொண்டு வரும் ஒரு முன்றாந்தர தந்திரோபாயமாகும்.

இப்படியாக ஒரு பலம் வாய்ந்த ஒரு பிராந்திய வல்லரசை ஒரு பலவீனமான சிறிய ஒரு தேசம் ஒரு விதமான மிரட்டல் லழிமுறை மூலம் கையாள்வதற்கான வாய்ப்பு உருவாவதற்கு இந்தியா தமிழ் மக்கள் தொடர்பாகவும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் கைக்கொள்ளும் ஒரு தெளிவற்ற நிலைப்பாடு ஒரு முக்கிய காரணம் என்பதை கடந்தகால அனுபவங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.

1977ல் ஜே ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு சிறிலங்கா வேகமாகவே மேற்குலகின் பக்கம் சாய ஆரம்பித்தது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவது என்ற பெயரில் இங்கு இஸ்ரேலிய நலன் காப்புப் பிரிவு மொசாட், போன்ற அமைப்புக்களுக்கு சிறிலங்கா இடமளித்தது. இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகவே அமைந்தது. இந்நிலையில் இந்தியா பல தமிழ்க்குழக்களுக்கு உதவி செய்வதன் மூலம் சிறிலங்கா அரசை ஒரு கட்டுக்கள் கொண்டு வரும் வகையில் தன் காய்களை நகர்த்தியது.

1986ல் ஒப்பரேசன் லிபரேசன் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம் அடைந்த தோல்வியும் செயலிழந்தமையும் சிறிலங்கா அரசை இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிலைக்கு தள்ளியது இலங்கை இந்திய ஒப்பந்தம் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பாக பல சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும், இந்தியா தமிழ் மக்களின் போராட்டம் தொடர்பாக எடுத்த நிலைப்பாடு நோக்கத்தையே சிதைக்குமளவுக்கு பயனற்றதாக்கி விட்டது. அன்றைய ஜனாதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தனா இலங்கை இந்திய ஒப்பந்தத்தை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கம் ஒரு ஆயுதமாக வெகு லாவகமாகவே கையாண்டார். இந்தியாவும் நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதைச் சரியாகக் கணக்கிடாத நிலையில் தமிழ் மக்கள் மீதே ஒரு போரைக் கட்டவிழ்த்து விடும் நிலை தோன்றியது.

இதன் காரணமாக இந்தியா அவமானப்பட்டு வெளியேறவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது மட்டுமின்றி தமிழ் மக்களிடையே தனக்கு இருந்த உறுதியான ஆதரவுத் தளத்தையும் இழந்த அதே வேளையில் சிங்களமும் இந்தியாவை வெளியேற்றுவதில் முனைப்புடன் நின்றது. ஒட்டு மொத்தத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தம் நலிவுற்று தன் செயற்பாட்டு நிலையை இழந்தது.

நிறைவேற்று சிறிலங்கா அரசு துணிச்சலுடன் வொய்ஸ் ஒவ் அமரிக்கா நிறுவனத்திற்கு இங்கு ஒரு ஓளிபரப்பு நிலையத்தை அமைக்க அனுமதி வழங்கியது. அது இன்று வரை இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே விளங்கி வருகிறது. அவை மட்டுமன்றி அமெரிக்க கிறீன் பரேட் பயிற்சி சிறிலங்காப் படைமுகாம்களின் பாதுகாப்புத் தொடர்பாக அமெரிக்க இராணுவ நிபுணர்களின் ஆலோசனைகள், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் இராணுவ கருவிகள், இஸ்ரேலுடன் நெருக்கமான தொடர்புகள் என இந்திய நலன்களுக்கு விரோதமான காரியங்களில் சிறிலங்காபகிரங்கமாகவே ஈடுபட்டது. இவையெல்லாவற்றிற்கும் மேலாக சிறிலங்கா சீன நொறிங்கோ ஆயுத உற்பத்தி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது.

இப்படியாக இந்தியாவுக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கும் நெருக்கடிகளைக் கொடுக்கும் விதத்தில் சிறிலங்கா தனது சொந்த நலன்களை நிறைவு செய்யும் நோக்குடன் பல காரியங்களில் ஈடுபட்டது.

ஆனால், இந்தியாவோ இப்படியான சந்தர்ப்பங்களில் எல்லாம் ஒரு விட்டுப் பிடிக்கும் போக்கையே மேற்கொண்டு வந்தது. அது மட்டுமன்றி சிறிலங்காவுக்கு ஆழ்கடல் கண்காணிப்பு போர்க்கப்பலை வழங்கியதுடன் சிறிலங்காவுக்கான புலனாய்வுத் தகவல்களையும் வழங்கி வருகின்றது.

மேற்குலகினதும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளினதும் சிறிலங்கவுடனான தொடர்புகள் வலுப் பெறுவது இந்தியாவின் நலன்களுக்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது என்ற போதிலும்,

தொடர்ந்து இந்தியா விட்டுப்பிடிக்கும் ஒரு தந்திரோபாயத்தையே கையாண்டது. அவ்வாறே இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிகளிலும் சற்று விலகியே நின்றது. ஆனால் விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தையும் பலவீனப்படுத்தும் வகையில் பல காரியங்களில் இந்தியா காலத்திற்கு காலம் ஈடுபட்டு வருகின்றது என்பது மட்டும் உண்மை. அதாவது தமிழீழ தேசியவிடுதலைப் போராட்டமானது சிறிலங்கா அரசை இந்தியாவிடம் சரணடைய வைக்கும்மளவுக்கே மட்டுப்படுத்தப்பட வேண்டும் என இந்திய மேலாதிக்க சக்திகள் எதிர்பார்க்கின்றன.

இந்தியாவின் இந்த அணுகுமுறை ஏற்கனவே இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது ஒரு வெற்றி பெறாத ராஜதந்திரம் என நடைமுறையில் நிருபிக்கப்பட்ட போதிலும் இது தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

இன்று சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்குலகம் சினம் கொண்டிருக்கும் வேளையில், தாங்கள் நிதியுதவிகளை நிறுத்தப் போவதாகப் பகிரங்கமாகவே அறிவித்து விட்ட வேளையில் மீண்டும் சிறிலங்கா இந்தியாவிடம் உதவி கோரி ஓடியிருக்கின்றது. காலத்திற்காகக் காத்திருந்த இந்தியாவும் சில நிபந்தனைகளுடன் உதவி செய்ய ஒப்புக் கொண்டிருக்கின்றது.

அதை வலுப்படுத்தும் வகையில் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் சிறிலங்கா பிரிட்டனதோ அமெரிக்;காவினதோ குடியேற்றநாடு அல்ல என்றும் அவை இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாது எனவும், இந்தியா தங்கள் அயல் நாடு மட்டுமன்றி நட்பு நாடு எனவும் அல் ஜசிறா தொலைக் காட்சிக்கு வழங்கிய பேட்டியின் போது தெரிவித்திருந்தார்.

மேற்குலகிலிருந்து சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகுளிலிருந்தும் சிறிலங்காவைத் தனிமைப்படுத்தும் இந்தியாவின் தந்திரோபாயம் விடுதலைப் புலிகளை தாக்க இந்தியாவைப் பயன்படுத்தும் சிறிலங்காவின் தந்திரோபயமும் இப்போ ஒரு நேர் கோட்டில் சங்கமிக்கின்றது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் காலத்தை அடுத்து ஸ்ரீலங்கா தன் நோக்கத்தில் வெற்றி பெற்றதும், இந்தியா தன் நோக்கத்தில் தோல்வியடைந்தும் வரலாறு சொல்லும் பாடங்கள். இப்போது மீண்டும் 1977ம் ஆண்டின் வரலாற்றை திருப்பும் வகையில் முயுற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.

ஆனால் இன்று இரு அரசுகளும் எதிர்பார்ப்பது Nபுhன்று கள நிலைமைகள் இல்லை என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

இன்று தமிழ் நாட்டில் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெருகி வரும் உயிரோட்டமான ஆதரவும், தமிழக முதலமைச்சர் கருணாநிதி தமிழக முதல்வராக இருப்பதும் ஆளும் மத்திய அரசில் தமிழகத்தின் பலம் ஒரு தீர்மானிக்கும் சக்;தியாக இருப்பதும், இந்திய மத்திய அரசின் போக்கை கட்டுப்படுத்தும் வகையில் சக்தி பெற்றுள்ளது.

அதே போன்று ஜாதிகஹெலஉறுமய, ஜேவிபி, சிறிலங்கா சுதந்திர கட்சியின் டி.எம்.ஜெயரட்ணா போன்ற சக்தி மிக்கவர்கள் இந்தியாவின் நிபந்தனைக்கு எதிராக கொதித்து எழுந்துள்ளனர்.

இப்படியான இரு அரசுகளும் உள் நாட்டில் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்திய அரசும் சரி, சிறிலங்கா அரசும் சரி அதே பழைய நகர்வுகளை புதிய முறையில் கையாள முனைகின்றன. ஆனால், இவை முன்போல் இம்முறையும் நிலைப்பதற்கு கள நிலைமைகள் சாதகமாக இல்லை


நா.யோகேந்திரநாதன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..