பிரதான பக்கம் arrow ஆசிரியர் தலையங்கம் arrow இனவாதம் கிளப்;பிய மகிந்த.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இனவாதம் கிளப்;பிய மகிந்த. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 03 October 2005

அக்கரைப்பற்றுக்கு அண்மையில் வருகைதந்த பிரதமரும், ஜனாதிபதி வேட்பாளருமான மகிந்த ராஜபக் இனவாதத்தைக் கிளப்பும் வகையிலான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார். கடந்த கால சம்பவங்களை கிளறி தமிழ், முஸ்லிம் சமூகங்களிடையே கசப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

முஸ்லிம்களின் சுமார் எண்பத்தி ஐந்தாயிரம் ஏக்கர் காணிகள் விவசாயம் செய்ய முடியாதுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் முஸ்லிம் விவசாயப் பிரதிநிதிகளுக்கு விடுதலைகளுக்கும் இடையில் சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளன. நடைபெற்றும் வருகின்றன.

முஸ்லிம் விவசாயிகள் விடுதலைப் புலிகளின் நிருவாகப் பகுதியிலுள்ள விவசாயக் காணிகளை எவ்வித அச்சமுமின்றி நேரடியாகச் சென்று பார்வையிடுகின்றனர்.

அது மட்டுமின்றி காணிகளைக் குத்தகைக்குக் கொடுப்பது, அதற்கான பணத்தினைப் பெறுவது என்பது தொடர்பான ஒவ்வொரு கமநல கேந்திர நிலையங்களுக்கும் உட்பட்ட அந்த பெரும்பாக உத்தியோகஸ்த்தர் முன்னிலையில் மேற்கொள்ளது எனவும், காணித் தகராறுகளை விடுதலைப் புலிகள் தீர்த்து வைப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இது தமிழ் முஸ்லிம் மக்களிடையே நல்லதொரு இன ஐக்கியத்தை நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. எதிர்காலத்திலும், இந்த உறவு வலுப்பெரும் என முஸ்லிம் விவசாயிகள் பெருமிதம் அடைந்துள்ளனர். அவற்றைப் பிரதமர் அறியாது எண்பத்தைந்து ஏக்கர் காணி செய்கை பண்ணமுடியாது இருப்பதாகக் கூறுவது எந்தளவிற்கு உண்மை எனச் சிந்திக்க வேண்டும்.

இதேவேளை முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சம்பவங்களை மறைக்க முடியாது எனக் குறிப்பிட்ட பிரதமர் தொழுகையில் இருந்த வேளை முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

ஆனால் தமிழ் மக்கள் சிங்களப் படையினராலும், ஊர்காவல் படையினராலும், பல நூறு பேர் பதைக்கப் பதைக்கச் சுட்டுக் கொன்றதை மறுத்தது ஏன்? ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இன ஐக்கியத்திற்கான கருத்துக்களைத் தெரிவிக்கவில்லை.

மாறாக அந்தச் சொற்ப நேரத்திற்குள் இன ஐக்கியத்திற்கு மாறான கருத்துக்களைக் கொண்டிவிட்டு வானூர்தியில் பயணமாகி விட்டார். அண்மையில் நடைபெற்ற யாழ் பொங்புதமிழ் நிகழ்வில் உரையாற்றிய மௌலவி சகீஸ் அவர்கள் தமிழ் மக்கள், முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான ஐக்கியத்தை உரசிக் காட்டியிருந்தார்.

தமிழ்த் தேசியத்தின் ஊடாகத் தமிழர்களும். முஸ்லிம்களும் சேர்ந்து வாழ்ந்தார்கள். ஆனால் சில அரசியல் தலைவர்களின் கசப்புணர்வான பிரச்சினைகள் உருவாதற்கு அடிகோலின. அதேவேளை முகமது நபியிடம் இருந்த மனிதாபிமானத்தை நாம் தேசியத் தலைவரிடம் காண்கின்றோம். என ஆழமான கருத்துக்களை நமது பொங்குதமிழ் உரையில் மௌலவி சகீல் உணர்த்தியிருந்தார்.

இவ்வாறான கருத்துக்கள் யாழ்குடா நாட்டில் இருந்து வருகின்றது. என்றால் அது வரவேற்புக்குரியது. இவ்வாறான நிலையில் விடுதலைப்புலிகள், மற்றும் தமிழ் மக்கள், தமிழ் பேசும் சமூகத்தினரிடம் மிக ஐக்கியப்பட்டு நிற்கின்றனர். பிட்டும், தேங்காய்ப் பூவும் பிரிக்க முடியாத அளவிற்கு இரு சமூகமும் ஒன்று பட்டு நிற்குமாயின் எதிர்காலத்தில் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இலகுவாக அமையும். அதற்காக முஸ்லிம் தலைகள் தயார்ப்படுத்தல்களில்
மாறாக உறவைச் சீர்குலைத்து தமிழ், முஸ்லிம் மக்களிடையே கசப்புணர்வை வளர்க்கும் வகையில் சில முஸ்லிம் அரசியல் கட்சிகள் செயற்பாடுவதானது கவலையளிக்கின்றது.

எனவே பிரதமரும், ஜனாதிபதி வேட்பாளருமான மகிந்த இன உறவைச் சீர்குலைக்கும் பிரசாரத்தைக் கைவிட வேண்டும். அதேவேளை முஸ்லிம் அரசியல் கட்சிகளும், இவ்விடயத்தில் அதிக கவனம் செலுத்துவதுடன், எதிர்வரும் தேர்தல் பிரசாரத்தில் இனங்களுக்கிடையில் கசப்புனர்வையூட்டும் காரியங்களில்


eelanatham
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..