|
ஒரு காலத்தில் தமிழீழம் தனிநாடு கிடைத்துவிடும் என்று தமிழ் இளைஞர்களுக்கு வாக்குறுதி வழங்கி, நாட்டுப் பிரிவினை நெருப்பை எரியவிட்டார் ஒருவர். தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் புறந்தள்ளப்பட்ட மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான அவரோ - விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு ஊடகங்கள் சில வற்றில் மறுபடியும் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டு வருகிறார்.
இவர் வேறு யாரும் இல்லை. தற்பொழுது செயலிழந்த நிலைக்குப் போய்விட்ட ஓர் அரசியல் கட்சியான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் என்று தொடர்ந்து உரிமை கொண்டாகின்றவரும் கிளிநொச்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்களே! இலங்கை நீதி மன்றம் ஒன்றின் தீர்ப்பின் வாய்ப்பை ஒட்டித் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் என்று இவர் தம்மைத் தாமே அழைத்துக் கொள்ள முடிகிறது. நீதி மன்றம் மட்டும் குறுக்கிடமால் போயிருந்தால், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் பதவியிலிருந்து இவர் பல ஆண்டுகளுக்கு முன்பே தூக்கியெறியப்பட்டு இருப்பார். எத்தனையோ ஆண்டுகளாக இந்நாள் வரை ஒருபோதும் கூட்டங்களே நடத்தாத ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்று தம்மைத் தாமே அழைத்துக்கொள்வதற்கு அவர் வெட்கப்படவேண்டும். குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் கைகள், வீசி எறிகின்றவற்றையே கடித்துத் தின்கின்றவரே அவர்! அந்த மகிந்தாவால் அமர்ததப்பட்ட இலங்கை இராணுவம் அல்லது தனி அதிரடிப் படைவீரர்கள் பாசறையைச் சோந்த ஏறத்தாழ 60 பேர்களால் அவர் பாதுகாக்கப்படுகிறார். இப்பொழுது, இந்தச் சிங்களப் பாதுகாப்புப் படை அணியினரால்தான் அவர் கழட்டப்பட்டு இருக்கிறார். கருணா இப்போது பனாகொடை இராணுவமுகாமுக்குள் எப்படி இருக்கிறாரோ அதே போன்றுதான் இவரும் இருக்கிறார். நீங்கள் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வீர்கள் என்றால், தமிழ் வார்த்தைகளையோ ஆங்கில வார்த்தைகளையோ நீங்கள் கேட்கமாட்டீர்கள்! ?கவுத கதாகரண்ணே? என்றும் சிங்கள சொற்களையே கேட்பீர்கள். அவர் அண்மைக்காலக் கடைசித் துண்டு அறிக்கை என்ன தெரியுமா? தன் மீது உள்ளன்பு மிக்க இலங்கையின் நாட்டுப் பற்றுள்ள குடிமக்களுக்கும் அமைதி விரும்பிகளுக்கும் அவர் எழுதியுள்ள நீண்ட கடிதம்தான்! அப்படிப்பட்ட கடிதங்களில் எதையாவது, தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில் தமது பரபரப்பான அரசியல் நடவடிக்கை நாள்களில், தம்முடைய சிங்கள உடன் பிறப்புகளுக்கு அவர் எழுதியது உண்டா? இல்லை! அதற்கு மாறாக, நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் சிங்களவருக்கு எதிரான வெறுப்பு உணர்ச்சியையே தமிழ் மக்கள் இடையே அவர் பரப்பிக்கொண்டு இருந்தார் 2004வரை. அடக்குமுறைக் கொடுமைகள் கொண்ட சிங்கள ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுந்து போராடுவதற்குத் தமிழ்மக்களைத் தூண்டி விட்டவர்களில் இவரும் ஒருவர்.
தம்மைப் பற்றிய அறிமுகத்தில் - தற்போது எழுதியுள்ள நீண்ட கடிதத்தில் - எதையும் தாங்கும் சகிப்புத் தன்மை மற்றும் வன்கொடுமையற்ற அமைதிவழி ஆகியவற்றை மேம்படுத்தியமைக்காக, ஐக்கிய நாடுகள் மன்ற கல்வி, அறிவியல் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ ?வின்) ?மதன் சீத் சிங் பரிசு? 2006ஆம் ஆண்டுக்கு உரியதைப் பெற்றுவிட்ட வெற்றியாளராகப் பெருமிதச் செருக்கோடு அவர் கூறியுள்ளார். ஆனால், மகிந்தா ராஜபக்சே அரசினால் நியமிக்கப்பட்ட ஒரு இலங்கைக் குழுவினால்தான், இந்தப் பரிசுக்கு உரிய முதல் தொடக்கப்பரிந்துரை செய்யப்பட்டது என்னும் உண்மையை அவரால் எப்படி மறைக்க முடியும்? என்ன இருந்தாலும் கேவலம், அவருடைய நன்றி பக்தியுள்ள ஊழியங்களுக்காக அவரின் தலைவர் (எசமானர்) மகிந்தா ராஜபக்சேவால் கொடுக்கப்பட்ட மறைமுக அன்பளிப்புத் தானே அந்த யுனெஸ்கோ பரிசு? அந்தப் பரிசினுடைய அத்தகைய ஒரு செருக்கான பெருமைக் குறிப்பை ? இவர் போன்ற ஒரு மனிதரால் மட்டுமே கூறமுடியும்! தன்னைத்தானே புகழ் மிக்கவராக உயர்த்திக் கொள்ள சாதாரணமாக ஓராயிரம் உயிர்களையும் பலிகொடுப்பதற்குத் தயங்காத ஒரு மனிதர்தான் என்று ?விடுதலைப் புலிகள்? இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனைத் தமது திறந்த மடலில் சங்கரி குற்றம் சாட்டி உள்ளார். ஆனால், மறுபுறத்திலே, எல்லாச் சமூக மக்களும், மதக்குழுக்களும் ஒருங்கிணைந்து இனிய உறவோடு வாழக் கூடிய அமைதியைக் கொண்டு வந்து, தேசிய நெருக்கடிச் சிக்கலுக்குத் தீர்வு காண்பதற்காகத் தம்மால் முடிந்தவற்றையெல்லாம் செய்கின்ற ஒருவர் என்று குடியரசுத் தலைவர் மகிந்தா ராஜபக்சேயை மகாநாயகே புத்த பிக்குகளின் வார்த்தைகளைக் கடன் வாங்கிக்கொண்டு புகழ்கிறார் ஆனந்த சங்கரி.
தற்போதைய பிரச்சினை (சிக்கல்) பிரபாகரனால் உருவாக்கப்பட்டது மட்டுமே அல்ல என்பதை அவர் உணர்ந்து பார்க்க வில்லையா? ஓர் இணை ? குற்றவாளியாக மகிந்த ராஜபக்சேயை நோக்கியும் அனைத்துலகச் சமூதாயம் குற்றம் சாட்டி கை விரலை நீட்டுவதை இவர் உணரவில்லையா? உலகத்திலேயே மனித உரிமைகள் மீறலைப் பொறுத்து ஒரு கொடுமையான சாதனையைப் படைத்துள்ள, மிக உச்சக்கட்ட நெருக்கடிகளில் சிக்கியுள்ள மூன்று நாடுகளில். சூடான் மற்றும் சோமாலியாவோடு சேரக்கூடியதாக இலங்கை நாட்டை ஆண்டு வருவதுதான் ராஜபக்சேயின் குடும்பம் என்று ஐக்கிய நாடுகள் மன்றப் பாதுகாப்புக் குழுவே வகுத்துக்காட்டியிருப்பதையுbr />் இவர் அறிய மாட்டாரா? ஐக்கிய நாடுகள் மன்றப் பாதுகாப்புக் குழுவின் நடவடிக்கைகளைப் பற்றிய ஆவணங்களைப் படித்துப் பார்க்க வேண்டியது அனந்த சங்கரிக்கு மிகவும் நல்லது.
அமெரிக்க நாட்டின் காங்கிரஸ் எனப்படும் நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களே கூட, தமிழ்மக்களுக்கு ராஜபக்சே ஆட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து இருக்கின்றார்கள். உடனடி நடவடிக்கை எடுக்கும்படியும் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் புஸ் அவர்களையும் கேட்டுக்கொண்டிருக்கிறார்களbr />. சிறுபான்மை சமுதாயங்களும், அனைத்துலகச் சமூகமும் பெரிதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வல்லுநர்கள் குழுவின் திட்டங்கள், எதிர்பாராத வட்டாரங்களால். தங்களுக்கு மட்டுமே தெரிந்த காரணங்களைக் கொண்டு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. அதற்காக சங்கரியோ வருந்திப் புலம்புகிறார். ஆயினும் அந்தத் திட்டங்களைச் சுட்டெரித்தவர் தம்முடைய தலைவரான கடவுளுக்கு அடுத்தப்படியான மகிந்த ராஜபக்சேதான் என்பதைக் குறிப்பிடுவதற்கு இவர் தவறிவிட்டார். அதற்கான காரணங்கள் இவருக்கு மட்டுமே வெளிச்சம்.!
?எவருடைய கைகளிலிருந்து நீ எதையேனும் தின்றாயோ, அவருக்கு எதிராக ஒரு வார்த்தையும் நீ உரைக்க மாட்டாய்!? என்னும் பொருள்தரக் கூடிய தமிழ்ப் பழமொழி ஒன்று உண்டு. ?நாக்கு உண்டார் நா இழந்தார்? என்பதே அந்தப் பழமொழி. அதனை உறுதிப் படுத்துகின்றவராகவே தம் நாக்கைக் கட்டிப்போட்டுவிட்டார் சங்கரி! சங்கரியின் கடந்தகால அரசியல் சாதனை என்பதே முழுக்கவும் தனிமனிதப் பழிவாங்கல் கதைகளைக் கொண்டதுதான். கிளிநொச்சித் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராகச் சங்கரி இருந்த பொழுது, 1976ஆம் ஆண்டு கிளிநொச்சி நகரில் ஒரு புதுமையான (நவீன) பொதுச்சந்தை இடத்தை உருவாக்கினார் அன்றைய அமைச்சர் குமார சூரியர். அவருக்கு அந்தப் பெருமை வருவதைத் தாம் விரும்பாத காரணத்தால் சந்தையின் திறப்பு விழாவையே தடுத்து நிறுத்தி விட்டார் சங்கரி. அந்தளவுக்கு மிகவும் அற்பத்தனமான குறுகிய மனப்பான்மை கொண்டவரே இந்த மனிதர். கிளிநொச்சி சந்தைப்பற்றி இப்போது கூறும் இவர், அன்று இதே ஆளும் கட்சியின் அமைச்சர் அமைத்த சந்தையை புத்தவிகார வடிவில் இருப்பதால் திறக்கவிடாது தடுத்ததாகப் புகழ்ந்து பேசியதை மறந்துவிட்டார். இவர்தான் இப்பொழுது சீரழிந்து போன பொருளாதாம் பற்றிப் பேசுகிறார். தனியாகக் கிளிநொச்சி மாவட்டத்தை உருவாக்குவதற்காக 1982ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனாவுடன் சேர்ந்து சங்கரி திட்டம் தீட்டினார். மாவட்ட சபை தேர்தல்களின் போதும், இவர் மிகவும் விரும்பிய ஒருவரை வேட்பாளராக நியமனம் செய்ய அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மறுத்துவிட்டார். அதற்காக அவர் மீது வஞ்சம் தீர்க்கத்தான் கிளிநொச்சி மாவட்டம் உருவாக்க இவர் ஏற்பாடு செய்தார். அந்த நேரத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை விட்டு வெளியேறவும் இவர் எண்ணிக்கொண்டிருந்தார். தங்களுடைய யு.என்.பி.(ஐக்கிய தேசியக் கட்சி) க்கு இவரை இழுத்துக்கொள்ளும் நோக்கத்துடன் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவும் சங்கரியின் (கட்சித்தாவல்) வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளவும் ஒப்புக்கொண்டார்.
ஆனால், அப்படி தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டி.யு.எல்.எப்) கட்சியில் இருந்து வெளியேறாதபடி தடுத்தது எது என்றால், ஆயுதம் ஏந்திய தமிழ் இளைஞர்கள் தம்மை ஒரு துரோகி என்று சொல்லிக்கொன்று விடுவார்கள் என்கிற அச்சம்தான்! இவரது பேச்சைக் கேட்டு ஜெயவர்த்தனா கிளிநொச்சியைப் பிரிக்க வேறும் ஒரு காரணம் இருந்தது. ஆனந்த சங்கரி லங்காசமசாமாச கட்சியின் உறுப்பினராய் இருந்தவர். எனவே இவர் கட்சி மாறக்கூடியவர்தான் என்று உளவுத்துறை இவரைப்பற்றி அப்போதே தகவல் கொடுத்ததை வைத்தே ஜெயவர்த்தனா அதனைச்செய்தார். தனது சொந்த லாபத்துக்காக கிளிநொச்சியைப் பிரிக்கலாம், தமிழரின் விடுதலைக்காக நாடு பிரியக் கூடாது. எப்படியிருக்கிறது சங்கரியின் கொள்கை. அன்றைய இலங்கை நாட்டில் தமிழர்களும், சிஙகளர்களும், முஸ்லீம்களும் ஒன்றாகக் கூடி, மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டு இருந்த அந்த நல்ல பழைய கால நாள்களைப்பற்றி சங்கரி இப்பொழுது பேசுகிறார். ஆனால், நாடாளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றுவதற்காக, தமிழர்களின் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக்கொள்ளும் பொருட்டுத் தமிழீழப் பிரிவினைப் பாதையைக் குறித்துத் தமிழ் இளைஞர்களைக் கிளர்ந்து எழச்செய்த தமிழ் அரசியல்வாதிகளில் இவரும் ஒருவரே ஆவார்! பதினைந்தாயிரம் (15,000) அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற என்னை வெறும் 187 வாக்குகள் பெறுமளவுக்குச் செய்துவிட்டீர்களே என்று வருந்தி பிரபாகரனை நிந்தித்துள்ளார் சங்கரி. ஆனால், 15,000 வாக்குகள் அதிகப்படியாக எப்படி வந்து சேர்ந்தது என்பதைக் கூறவில்லை. தமிழீழம் வேண்டுமா? அல்லது சிங்கள ஆட்சியின் அடிமை வாழ்வு வேண்டுமா? தமிழீழத்துக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என்று உரக்கப் பேசியதின் வாயிலாகத்தான் சங்கரிக்கு 15,000 அதிகப்படியான வாக்குகள் கிடைத்தன! சங்கரி இதனை மறுப்பாரா? சங்கரி தோற்கடிக்கப்பட்டதும் தமிழீழம் கசக்கிறது அப்படித்தானே? ?தமிழீழம் என்பது பகற்கணவு? என்று தனது மனசாட்சியை எங்கு வைத்துக்கொண்டு இதனைச் சொன்னார் என்பது விளங்கவில்லை! ஓர் சிங்களப் பேரினவாதி சொல்லியிருந்தால் நாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை.
1972ஆம் ஆண்டு முதல் தமிழீழத்தைச் சொல்லித்தான் எம்.பி. பதவியையும் வாழ்க்கையையும் நடத்தி வந்தார் சங்கரி. 1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஓர் சட்ட மறுப்புப் போராட்டம் நடத்தினர் ?தமிழீழம் வேண்டும்? என்று நீதிமன்றத்தில் எழுத்து பூர்வமாக கொடுக்கவேண்டும் என்பதுதான் அந்தப் போராட்டம் அனைத்து எம்.பி.மார்களும் நீதிமன்றங்களில் கொடுத்தனர். சங்கரியை மட்டும் ஒரு கிழமை தண்டனை கொடுத்து உள்ளே அனுப்பிவிட்டார் நீதிபதி. சிறை மீண்டு வந்ததும் சிறை மீண்ட செம்மலாகி அதனையும் 1977 தேர்தலில் வாக்குகளுக்காகப் பயன்படுத்தியதை சங்கரி தனது வசதிக்காக மறந்துவிட்டார். சிங்களவர்களுடன் பழகிப் பார்த்தீர்களா என்று புதுக்கேள்வியையும் இப்போது கேட்க ஆரம்பித்துள்ளார்! உண்மைதான்! சமைப்பது. சாப்பாடு கொடுப்பது, பாதுகாப்புக்கொடுப்பது, பயணச்சீட்டுக்குப் பணம் கொடுப்பது, படுக்ககை விரிப்பது, தூங்கவைப்பது எல்லாமே சிங்களவர்தான்: அதுவும் ஆமிக்காரர். இப்படி ஓர் வாழ்வு என்றும் கிட்டியதில்லை அவருக்கு. தனக்கு இப்போது கிடைக்கும் சௌகரியங்கள் தமிழ் இனத்துக்கு உரிமை கிடைத்ததுக்கு சமம் என்கிறார் சங்கரி. தமிழினம் சந்தித்த கொடூரங்களை மறந்து. மறைத்து இன்றிருக்கும் இளைஞர்களுக்கு பிரச்சினையே பிரபாகரன்தான் என்று கதை சொல்லுகிறார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ன வென்று மீண்டும் ஆனந்த சங்கரிக்கு புரிய வைக்க வேண்டும் என்றால் இந்தத் தளம் போதாது! ஒன்றை மட்டும் விளக்குகிறோம். பொன்னம்பலத்தின் கட்சியைச் சேர்ந்தவரையும், செல்வநாயகத்தின் கட்சியைச் சேர்ந்தவரையும் தேர்தலில் தோற்கடித்ததுதான் யாழ் மேயர் துரையப்பா செய்துவிட்ட தவறு. இதனால்தான் பிரபாகரன் அவரைக் கொன்றார் என்று சங்கரி புது விளக்கம் கொடுத்துள்ளார். வரதராஜப்பெருமாள் கோவிலில் வைத்து துரையப்பா கொல்லப்படுவதற்கு முன்னர் இரண்டு தடவைகள் துரையப்பாவைக் கொல்ல முயற்சிகள் நடந்தன. (01) யாழ்ப்பாணம் பெரிய கடை வீதியில் வைத்து சிவகுமாரனால் துரையப்பாவின் காருக்கு குண்டு வீசப்பட்டது. அதில் அவர் தப்பித்துக்கொண்டார். (02) தமிழ் மாணவர் பேரவையால் துரையப்பா தனது வீட்டிலிருந்த போது கைக்குண்டு வீசப்பட்டது. இதிலும் அவர் தப்பித்துக் கொண்டார். இவை நடந்து மூன்று ஆண்டுகளின் பின்னர்தான் துரையப்பா சுடப்பட்டார். ஏன்? ? 1972இல் இலங்கை அரசியல் அமைப்பு மாற்றப்பட்டு தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலையை சங்கரி அவர்கள் இன்று கடவுளாக வணங்கும் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சி அன்று ஏற்படுத்தியது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியை துரையப்பா பகிரங்கமாக ஆதரித்ததுடன் தமிழீழத்தையும் கொச்சைப்படுத்திப் பேசினார். பொன்னம்பலம் கட்சியிலிருந்த சங்கரி இதே 1972ஆம் ஆண்டுதான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்தார். ஏன்? அரசியல் அமைப்பை மாற்றி தமிழ் மக்களை நாதியற்றவர்களாக ஆக்கிவிட்டது சிங்களப் பேரினவாதம். கல்வியை மறுக்கின்றனர். மொழியை மறுக்கின்றனர், தொழிலை மறுக்கின்றனர், நிலத்தை மறுக்கின்றனர் போதாமைக்கு அரசியல் ரீதியாகவும் அனாதைகள் ஆக்கிவிட்டனர் சிங்கள ஆட்சியாளர்கள் என்று கூறிக்கொண்டுதான் சங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்தார்.
அன்று துரையப்பா செய்ததை இன்று ஆனந்த சங்கரி செய்து வருகிறார். கேட்டால் பிரபாகரனிடமிருந்துதான் விடுதலை! சிங்களவர்கள் அருமையானவர்கள், பேக்கரி மாமாக்கள், கடவுளுக்கு அடுத்தபடியானவாகள் என்று கடிதம் எழுதுகிறார். பிரபாகரனது படுகொலைகள் தமிழீத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டது என்பது உண்மைதான். அதே வேளை சிங்கள ஆட்சியாளர்கள் திருந்தி விட்டார்கள். பண ஓதுவதை (புத்தம் சரணம் கச்சாமி)த் தவிர புத்த பிக்குகள் யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள் என்று பௌத்தம் போதிக்கிறார் தமிழ் மக்களுக்கு. தமிழிழத்துக்கான அனைத்துக் காரணங்களும் இன்று வரை அப்படியே இருக்கின்றன. இணைந்து வாழலாம் என்ற ஓர் நிலையை சிங்கள அரசியல் வாதிகளும், சிங்கள மக்களும் இன்று வரை எடுக்கவில்லை. பதிலாக பௌத்தமும், சிங்களமும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன. பிரபாகரனை வீழ்த்துவதன் மூலம் தமிழீழத்தை வீழ்த்திவிடலாம் என்பதுதான் இன்றைய சிங்கள ராஜதந்திரமாக இருக்கிறது. பல தமிழர்களுக்கும் இது கசப்பாக இருக்கலாம் ஆனால், இதுதான் உண்மை. பிரபாகரனும் அப்படியான ஓர் நிலையை ஏற்படுத்திக் கொண்டார். இந்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. ஆனந்த சங்கரி போன்று இன்னும் சிலர் கதை சொல்லாது, சிங்கள அரசுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். சங்கரி எழுத்தில் காண்பிக்கிறார். எணையோர் செயலில் காண்பிக்கின்றனர். சங்கரி அவர்களின் தந்திர வித்தைப்பற்றி சிறு குறிப்புடன் முடிக்கிறோம். சங்கரி என்.எம்.பெரேராவின் லங்கா சமா சமாசக் கட்சியில் இருந்தவர்.
கொழும்புக்குச் சென்ற இடத்தில் அந்த கட்சியின் கதவு திறந்திருந்தபடியால் அப்போது அதனுள் நுழைந்துவிட்டார். லங்கா சமாசமாசக் கட்சி ஓர் இடது சாரிக் கட்சியாகும். அங்கே இருந்த இவர், அப்படியே பொன்னம்பலத்தின் கட்சிக்குத் தாவினார். ஓர் இடது சாரி ? பொன்னம்பலத்தின் கட்சியில் சேருவதென்றால் ஓர் அப்பட்டமான சந்தர்ப்பவாதியால்தான் இது சாத்தியம். பொன்னம்பலத்தின் கட்சியிலிருந்து கிளிநொச்சியில் எம்.பி.ஆகிவிட்டார். 1970இல் பொன்னம்பலத்தின் கட்சியிலிருந்து மூன்று எம்.பி.க்கள்தான் தேர்தலில் தேர்வாகினர். அருளம்பலம், தியாகராஜா, ஆனந்த சங்கரி ஆகியோர் அந்த எம்.பி.க்கள். 1972இல் நாடு குடியரசாக்கப்பட்டு தமிழர்கள் அரசியல் ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட வேளை அருளம்பலமும் (நல்லூர்) தியாகராஜா(வட்டுக்கோட்டை)வும் அரசாங்கத்துடன் இணைந்தனர். ஆனந்தசங்கரி தனிநாடு கேட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்தார். ஏன்? சங்கரி அவர்களுக்குத் தெரியும் அடுத்த தேர்தலில் அருளம்பலமும் தோற்றுப்போவார் தியாகராஜாவும் தோற்றுப்போவார். தமிழீழம் கேட்பவர்கள்தான் வெற்றிபெறுவார்கள். எனவே தமிழீம் பக்கம் சேர்ந்தால் எம்.பி. பதவி நிரந்தரம். சங்கரி அவர்களின் கணக்குத் தப்பவில்லை! ஆனால், இப்போதுதான் கணக்குத் தப்பிவிட்டது. வெறும் 187தான்! இதுதான் அவர் ராஜபக்சே கட்சியில் சேராமல் சேர்ந்து கதை எழுதக் காரணமாகிவிட்டது. ஆகவே, கட்சி மாறுவது சங்கரிக்கு புதிதல்ல. ஆனால். ஒரு புதிர்தான் புரியாமல் இருக்கிறது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனபின் இவரைக் கழட்டி விட்டு விட்டு ஏனைய அனைவரும் ஏன் ஓடிச்சென்றனர் என்பதுதான் அந்த மர்மம்! இவரும் ஏனைய எம்.பி.க்களுடன் கிளிநொச்சிக்குச் சென்று வரிசையாக அமர்ந்து பிரபாகரனைப் பார்த்து உள்ளேன் ஐயா என்று எழுந்து நின்று சொன்னவர்தான். எப்படி மாறினார்? கதிர்காமர்தான் மாற்றினார் என்றும் சொல்கின்றனர். அதே வேளை ராஜபக்சேவுக்கு சரியான ஊதுகுழல் சங்கரி அவர்கள்தான் என்பதனை யாரும் மறுத்துவிட முடியாது.! அண்மைக் காலமாக இப்படி ஓர் தமிழர் அரசுக்குக் கிடைக்கவில்லை. இராஜதுரை, குமார சூரியர். துரையப்பா, அருளம்பலம். தியாகராஜா போன்ற அனைவரையும் தூக்கி விழுங்கிவிட்டார் சங்கரி என்றால் அது மிகையல்ல.
நன்றி ஈ.என்.டி.எல்.எவ். இணையம
நெருடல் இணையம்
|