பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow "குடும்பிமலை சமருக்கான புதிய ஆயுதக்கொள்வனவில் உச்சக்கட்ட ஊழல்"
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

"குடும்பிமலை சமருக்கான புதிய ஆயுதக்கொள்வனவில் உச்சக்கட்ட ஊழல்" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 15 July 2007

குடும்பிமலை சமருக்காக சிறிலங்கா அரசாங்கத்தால் புதிய ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அதில் உச்சக்கட்ட ஊழல் நடந்துள்ளதாகவும் கொழும்பு படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் மறைமுகமாக அம்பலப்படுத்தியிருக்கிறார்.

கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே ரைம்ஸ் ஆங்கில வார இதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள செய்தி:

58 நாட்கள் நடைபெற்ற குடும்பிமலை சமரில் படையினர் பெருமளவான சுடுவலுவை சிறிலங்கா இராணுவத்தினர் பிரயோகித்திருந்தனர். ஆட்டிலெறிகள், மோட்டார்கள், பல்குழல் உந்துகணை செலுத்திகள், சிறிய ரக மற்றும் கனரக துப்பாக்கிகள், கிபீர், மிக்-27 ரக குண்டு வீச்சு வானூர்திகள் என அவர்கள் பயன்படுத்திய சுடுவலு மிக அதிகம். அதன் செலவுகளும் மிக அதிகம்.

குடும்பிமலை மீதான நடவடிக்கை ஏன் இழுபட்டு செல்கின்றது என பல நாட்டு அரச தலைவர்கள் கேள்வி எழுப்பியதனைத் தொடர்ந்து கடந்த வாரம் இந்த படைவலு மேலும் அதிகரிக்கப்பட்டது.

படை பலத்தில் ஆட்டிலெறிகள், மோட்டார்கள், பல்குழல் உந்துகணை செலுத்திகள் மற்றும் நவீன ஆயுதங்களை வாங்குவது பொதுவானது. ஆனால் அதில் பெறப்படும் தரகுப்பணம் பலரை கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாகவும் மாற்றியுள்ளது. அதாவது தற்போதைய வேறுபாடு என்ன எனில் நாட்டில் ஊழல் உச்சத்தை தொட்டுள்ளது.

அதிரடிப்படை ஒன்று புதிதாக பதவி உயர்வு பெற்ற பிரிக்கேடியர் சார்லி கலகேயினால் அண்மைய நாட்களில் வழிநடத்தப்படுகின்றது. இதுவே குடும்பிமலை மீதான நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியிருந்தது. அது 6 பற்றாலியன்களை கொண்டது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இந்த படைப்பிரிவை 58 ஆவது படையணியாக்கு இராணுவத் தலைமையகம் விரும்புகின்றது.

மேலும் இந்த நடவடிக்கையில் கொமோண்டோ றெஜிமென்டின் 2 ஆவது பற்றாலியன், கெமுனு வோச்சின் 7, 8 ஆவது பற்றாலியன்கள், இரு இலகு காலாட்படை பற்றாலியன்கள், சிங்க றெஜிமென்டின் 1 ஆவது பற்றாலியன் ஆகியனவும் பங்கு பற்றியிருந்தன. இரு வாரங்களுக்கு முன்னர் வடபோர் முனையில் இருந்து மேலதிக துருப்புக்களும் நகர்த்தப்பட்டிருந்தனர். அரச தலைவர்களின் கேள்விகளை தொடர்ந்து தாக்குதலை நடத்த உருவாக்கப்ட்ட மேலதிக இராணுவத்தினரும் கடந்த வாரம் அனுப்பப்பட்டருந்தனர்.

குடும்பிமலை மீதான தாக்குதலை வெற்றி விழாவாக அரசு நாடு முழுவதும் பெருமெடுப்பில் கொண்டாட திட்டமிட்டுள்ளது. தற்போது இராணுவத்தின் கவனம் வடபகுதி நோக்கி திரும்பியுள்ளது. விடுதலைப் புலிகளை பலவீனமாக்கும் வரையில் வடபகுதி மீதான படை நடவடிக்கை தொடரும் என மகிந்த சூளுரைத்துள்ளார்.

மன்னார் களமுனையில் நேற்று சனிக்கிழமை இராணுவத்தினரால் தொடங்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கை பெரும் மோதலாக வெடித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மோதல்களை நிறுத்தி அமைதிக்கான அழைப்பை விடுக்கும் வரையிலும் தாம் தமது படை நடவடிக்கையை கைவிடப்போவதில்லை என நோர்வே அனுசரனையாளர்களுக்கு அண்மையில் ஜெனீவாவில் மகிந்த தெரிவித்திருந்தார்.

இதற்கான பதிலை விடுதலைப் புலிகள் இந்த வாரமும் மீண்டும் தெரிவித்துள்ளனர். மகிந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை தொடங்குவார் என்பதில் தமக்கு நம்பிக்கை இல்லை என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தமது அமைப்பு அரசின் இராணுவ பொருளாதார இலக்குகளை தாக்கப் போவதாகவும் அவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவன செய்தியாளர் சைமன் ஹார்ட்னரிடம் தெரிவித்துள்ளார்.

2002 ஆம் ஆண்டு உருவான போர் நிறுத்தம் அமுலில் உள்ள போதும், இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்ற போதும், அரசும் விடுதலைப் புலிகளும் தமது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளனர்.

எனவே நாட்டின் பொருளாதாரம் அடிக்கு மேல் அடி வாங்கிக் கொண்டிருக்கும் போதும் பிரகடனப்படுத்தப்படாத நான்காம் ஈழப்போரில் பெரும் சமர்கள் விரைவில் வெடிக்கப்பேகின்றன என்பதை உறுதிப்படுத்த இதை விட வேறு ஆதாரங்கள் தேவையில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியில் குடும்பிமலை சமர் குறித்து பல நாட்டு அரச தலைவர்கள் கேள்வி எழுப்பியதைக் குறிப்பிட்டிருக்கும் இக்பால் அத்தாஸ், படை வலு அதிகரிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும் பொதுவான ஆயுதக் கொள்வனவில் தரகுப் பணங்கள் மூலம் பலர் கோடீஸ்வரர்களாகியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் "அதாவது தற்போதைய வேறுபாடு என்ன எனில் நாட்டில் ஊழல் உச்சத்தை தொட்டுள்ளது" என்றும் இக்பால் அத்தாஸ் எழுதியிருக்கிறார்.

இதில் குடும்பிமலை சமருக்கான ஆயுதக் கொள்வனவில் பெருந்தொகையான ஊழல் நடைபெற்றுள்ளதை மறைமுகமாக இக்பால் அத்தாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தென்னிலங்கை அரசியல் களத்தில் இனிவரும் நாட்களில் "குடும்பிமலை சமர் ஆயுத பேர ஊழல்" செய்திகளும் இடம்பிடிக்கக்கூடும் என்று கொழும்பு அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..