|
இலங்கைக்கு திருப்பி அனுப்பவேண்டாம்' லண்டனில் 28 தமிழ் இளைஞர்கள் உண்ணாவிரதம் |
|
|
|
Sunday, 22 July 2007 |
|
லண்டன் கீத்ரு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கார்மன்வேத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழ் இளைஞர்கள் நேற்று சனிக்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தற்போதய அரசியல் நெருக்கடி நிலைமை காரணமாக லண்டன் சென்று
புகலிடம் கோரிய நிலையில் கார்மன்வேத் தடுப்பு முகாமில் தடுத்து
வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் இளைஞர்கள் 28 பேரே இந்த உண்ணாவிரதப்
போராட்டத்தில் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் தொடரும் தற்போதைய மிக மோசமான நிலைமைகளுக்கு மத்தியில் தம்மை
நாடு கடத்த வேண்டாமெனக் கோரியே இவர்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை
ஆரம்பித்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சில்லாலையைச்
சேர்ந்த சுப்பிரமணியம் அலோசியஸ் என்ற இளைஞன் கடந்த சில தினங்களாக
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த எஸ்.சாந்தரூபன் என்ற
இளைஞர் கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை யூ.எல் 504 என்ற விமானத்தில்
இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|