|
|
|
தாம் முன்னர் ஏற்றுக்கொண்டதை இப்போது மறந்துவிட்டார் மஹிந்தர் |
|
|
|
Sunday, 22 July 2007 |
|
தென்னிலங்கையில் இப்போது கிளப்பப்படும் பெரும் அரசியல் சித்தாந்த சர்ச்சை என்ன தெரியுமா?
"பயங்கரவாதிகளான' விடுதலைப் புலிகளுக்கு இலங் கைத் தீவில் சட்டரீதியான அதிகாரப் பிரதேசம் இருக்கின் றது என ஒப்புக்கொண்டு, அந்தப் பகுதிகளைப் புலிகளுக் குத் தாரைவார்த்த தென்னிலங்கை அரசியல் தலைமை எது என்பதுதான் அந்தச் சர்ச்சை.
இரு பிரதான சிங்களக் கட்சிகளும் இவ்விடயத்தில் மாறி, மாறி ஒன்றின் மீது மற்றது குற்றம் சுமத்துகின்றன.
""பயங்கரவாதத்துக்கு சட்டரீதியான அதிகாரப் பிரதேசம் ஒன்று இருக்கின்றது
என்பதை ரணில் விக்கிரமசிங்க, விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட
ஒப்பந்தத்தின் மூலம் ஏற்றுக்கொண்டார். இதுபோன்ற அநியாயமான செயல்
இலங்கையைத் தவிர உலகில் வேறெந்தத் தேசத் திலும் இடம்பெற்றிருக்காது''
என்று கடந்த வியாழனன்று "கிழக்கு உதயம்' நிகழ்வில் வைத்து ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ விடுத்த அறிவிப்பே இந்த சர்ச்சைக்குக் காரணம்.
இவ்வாறு பயங்கரவாதத்திற்கு சட்டரீதியான பிரதேசம் ஒன்றைத் தாரைவார்த்து
உடன்படிக்கை ஒன்றைச் செய்த தன் மூலம் குற்றமிழைத்துள்ளது இலங்கை என்றும்
அத் தகைய குற்றத்தை இழைத்த நாடு உலகில் இலங்கையைத் தவிர வேறெதுவாகவும்
இருக்கமுடியாது என்றும் பிறிதொரு நிகழ்வுக்குத் தாம் அனுப்பிவைத்த
செய்தியில் மீளவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
யுத்த சன்னதம் கொண்டு போர் வெறியுடன் நிற்கும் தென் னிலங்கைத் தலைவருக்கு
அதன் காரணமாக இன்று யுத்த நிறுத்த உடன்படிக்கை வேம்பாகக் கசக்கின்றது.
தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கும் தமது ஒரே இலக்குக்குக் குறுக் காக அந்த
ஒப்பந்தம் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிர தேசங்களை ஏற்று அரசுத்
தரப்பு அவ்வாறு மதிக்கவேண் டும் என்ற ஒப்பந்த வாசகம் நிற்பதால் அது சகிக்க
முடியா ததாக இருக்கின்றது அவருக்கு. அதனால்தான் இந்த ஒப்பந் தம் குறித்து
இவ்வாறு இப்போது கனன்று சீறுகின்றார் அவர்.
ஆனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் சட்டரீதியான ஒரு பிரதேசம்
இருப்பதை எழுத்துபூர்வமாக ஒப்புக்கொள் ளும் இந்த யுத்தநிறுத்த
உடன்படிக்கையை அப்படியே வரிக்கு வரி ஏற்று நடைமுறைப்படுத்த தமது அரசு
தயார் என்று "ஜெனிவா ஐ' அமைதிப் பேச்சில் தமது அரசே எழுத்து மூலம்
ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொண்டிருப்பதை அவர் மறந்துவிட்டாரா? அல்லது
மறைத்துவிட்டாரா?
தாம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தல் 2006 பெப்ரவரி யில் தமது அரசு
புலிகளோடு நடத்திய முதலாவது அமை திப் பேச்சின் "ஜெனிவா ஐ' பேச்சின்
முடிவில் இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை செம்மையாக நடைமுறைப் படுத்தத்
தமது அரசு முழு ஒத்துழைப்பு நல்கும் எனத் தெரி வித்து கூட்டறிக்கையில்
ஜனாதிபதி மஹிந்தரின் அரசுப் பிரதிநிதி கள் ஒப்பமிட்டதன் மூலம் அந்த
ஒப்பந்த வாசகங்களை அவரும் அவரது அரசுத் தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ள னர்
என்பதையும் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டில்
சட்டரீதியான ஒரு பிரதேசம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஒப்பந்த
வாசகத்தை அவரும் அவரது அரசுத் தரப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்ப
தையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமான தாகும்.
அது மட்டுமல்ல. முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளோடு
செய்துகொண்ட இந்த யுத்தநிறுத்த ஒப்பந்தத்தின் செல்லுபடித் தன்மை இலங்கை
உயர்நீதி மன்றில் பரிசோதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருப்பதை யும் சுட்
டிக்காட்டுவது பொருத்தமானது.
சற்றேனும் அரக்கவோ, நெகிழ்த்தவோ, விட்டுக்கொடுக் கவோ இடமளிக்காமல்
இரும்புச் சட்டகமாக இறுகிப்போய் கிடக்கும் இலங்கை அரசமைப்பையும் அதன் எஃகு
போன்ற வலுவான விதிகளையும் முழு அளவில் தாங்கி அதனை வலிமையாகப் பற்றி
நிற்கிறது இலங்கையின் நீதித்துறை யும் நீதிமன்றங்களும். அத்தகைய உயர்
நீதிமன்றமே இந்த யுத்தநிறுத்த உடன்படிக்கையை சட்டத்தின் அடிப்படை யில்
நிராகரிக்க மறுத்துவிட்டது. இதனால் புலிகளிடம் சட்டரீதியாக ஒரு நிர்வாகக்
கட்டுப்பாட்டுப் பிரதேசம் உண்டு என்ற உண்மையை யதார்த்தத்தை
ஏற்றுக்கொள்ளும் அரசியல் முடிவு இலங்கை நீதித்துறையாலும் நிராகரிக்கப்
படவில்லை என்பது தெளிவு.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் மீது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்படி
குற்றச்சாட்டை முன்வைத்ததும் அதற் குப் பதிலடியாக விளக்கம் கொடுக்க
முன்வந்திருக்கின்றது ஐ.தே.கட்சி.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை யுத்தநிறுத்த ஒப்பந்தம்
மூலம் ரணில் ஏற்று அங்கீகரிப்ப தற்கு முன்னரே மஹிந்த ராஜபக்ஷவின்
கட்சியின் முன் னாள் தலைவி சந்திரிகா குமாரதுங்க ஏற்றுக்கொண்டுவிட் டார்.
19941995 காலப் பகுதியில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க புலிகளுடன்
சமரசம் செய்தபோது அவரும் இவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டில் பிரதேசம்
இருப் பதையும் அரசு மற்றும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங் களுக்கு
இடையில் எல்லைகள் இருப்பதையும் ஒப்புக்கொண் டிருந்தார் எனச்
சுட்டிக்காட்டி ஜனாதிபதி மஹிந்தவுக்கு பதிலடி தந்திருக்கிறது ஐ.தே. கட்சி.
ஆக புலிகளிடம் கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்று இருப் பதை முதன்முதலாக
சட்டரீதியாக ஏற்று அங்கீகரித்தவர் யார் என்பது குறித்து தென்னிலங்கையின்
இரு பிரதான சிங் களக் கட்சிகளும் மாறி மாறி ஒருவர் மீது மற்றவர் குற்றம்
சுமத்தித் தர்க்கிக்கின்றன.
இந்த இரு கட்சியினருமே ஏற்றாலென்ன, ஏற்காவிட்டா லென்ன? அங்கீகரித்தால்
என்ன, அங்கீகரிக்காவிட்டால் என்ன? ஈழத்தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளான
விடுதலைப் புலிகள் தங்கள் தாயகப் பூமியின் கணிசமான பிரதேசத்தை பௌத்த
சிங்கள ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, சட்டரீதியாக அதை நிர்வகிக்கின்றனர்
என்பதே உண்மை யதார்த்தம்.
இந்த உண்மையை சிங்களம் ஏற்றால் மட்டுமே சமரசம் சாத்தியம்.
நெருடல் இணையம்
|
|