|
ஒரு கிலோ வெடி மருந்துடன் பிடிபட்ட உல்லாசப் பயணப் பஸ்வண்டி! |
|
|
|
Monday, 12 September 2005 |
ஒரு கிலோ வெடிமருந்தைக் காவியபடி உல்லாசப்பயண பஸ்வண்டி யொன்று டென்மார்க்கினு}டாக சுவீடன் தலைநகர் போகும் வழியில் பிடிக்கப்பட்டது. ஜேர்மனியில் இருந்து றொஸ்ரொக் கடல்வழியை கப்பல் மூலமாகக் கடக்கும் போது போலீசாரின் சம்பிரதாய பூர்வமான சோதனையின் போது இந்த வெடிமருந்தை ஜேர்மன் போலீசார் கண்டறிந்தனர். மேற்படி பஸ் வண்டி கப்பல் மூலம் டென்மார்க் கரைக்குவர வெடிமருந்து கண்டு பிடிக்கும் நாய்களின் உதவியுடன் பஸ் வண்டி சல்லடை போட்டுத் தேடப்பட்டது. ஆனால் வெடி மருந்து கிடைக்கவில்லை. இந்த வெடிமருந்து கொண்டு வந்தது தொடர்பாக 44 வயதுடைய பொஸ்னியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது குற்றத்தை மறுத்துள்ளார். இவரை மட்டும் தடுத்து வைத்த போலீசார் மற்றப் பயணிகளுடன் பஸ்வண்டியை போக அனுமதித்தனர். இவர் ஏன் வெடிமருந்தை எடுத்துச் சென்றார், இதன் தேவை என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. பஸ்வண்டி பொஸ்னியாவில் இருந்து ஸ்ரொக்கோம் வரை செல்கிறது.
Nirojan S
|