பிரதான பக்கம் arrow கட்டுரைகள் arrow ஏ-32 பாதையை நோக்கி வகுக்கப்படும் உத்திகள்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஏ-32 பாதையை நோக்கி வகுக்கப்படும் உத்திகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 01 October 2007

இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தவோ அல்லது அதனை நிறுத்தும் பொருட்டு காத்திரமான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ திராணியற்ற நிலையில் சர்வதேச சமூகம் காணப்படுகின்றது. இது சர்வதேசத்தின் இரட்டை வேடத்தை தெளிவாக அம்பலப்படுத்திய போதும் இலங்கை அரசிற்கு மேலும் கால அவகாசம் கொடுப்பது என ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருப்பது மிகவும் வேடிக்கையானது.

இந்தக்கால அவகாசம் என்பது அரசின் படை நடவடிக்கைகளுக்காக கொடுக்கப்படும் கால அவகாசமா என்ற கேள்வி மக்களின் மனதில் பலமாக எழுந்துள்ளது. அதனை உறுதிப்படுத்துவது போல வடபோர்முனை மெல்ல மெல்ல உக்கிரமடைந்து வருகின்றது.

மிகவும் இலகுவான களங்களை தேடித் தாக்கும் படையினரின் உத்திகள் தற்போது மன்னா ருக்கு வடக்காக மையம் கொண்டுள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் மன்னாரின் தென்மேற்குப் பகுதியில் ஆரம்பித்த படை நடவடிக்கை தற்போது வடக்கு நோக்கி நகர்ந்துள்ளதுடன் வடபோர்முனையில் பரவலான களமுனைகளை திறக்கும் உத்திகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ழூ கடந்த மாதம் 31 ஆம் திகதி விளாத்திக்குளம் ஊடான முன்நகர்வு முயற்சி.

ழூ செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சிலாவத்துறை மீதான படை நடவடிக்கை.

ழூ செப்டெம்பர் 7 ஆம் திகதி நாகர்கோவில் களமுனையில் நடைபெற்ற கடும் எறிகணை தாக்குதல்கள்.

ழூ செப்டெம்பர் 19 ஆம் திகதி நாகர்கோவிலில் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட படை நடவடிக்கையும், 12 மணி நேர மோதலும்.

ழூ செப்டெம்பர் 24 ஆம் திகதி கிளாலி முனையில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற முயற்சி. அதேசமயம் மன்னாரின் வடக்கு முனையான அடைக்கலமோட்டை, கட்டுக்கரைக்குளம் நோக்கிய முன்நகர்வு.

ழூ செப்டெம்பர் 26 ஆம் திகதி முள்ளிக்குளம் ஊடான நகர்வு முயற்சி.

போன்றனவற்றை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இந்த எல்லா நடவடிக்கைகளும் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளாக இருந்த போதும், விடுதலைப் புலிகளை எல்லா முனைகளுக்கும் வலிந்து இழுக்கும் முயற்சி இதுவாகும். அதாவது அவர்களின் கவனத்தை சிதறடிக்கும் உத்தியாகும்.

ஆனால் வடக்கில் எல்லா முனைகளிலும் நடைபெற்ற உக்கிர மோதல்கள் விடுதலைப் புலிகள் எந்த முனையிலும் மிகுந்த உஷாராக இருப்பதை படையினருக்கு உணர்த்தியிருக்கும்.

எனினும் படையினரின் கவனம் மன்னார் களமுனையில் குவிந்து வருவது கவனிக்கத்தக்கது. கடந்த 9 மாதங்களாக மடுவை நோக்கி படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்த போதும், தற்போது மடுவிற்கு வடக்கு மற்றும் தெற்கு புறமாக இருமுனை நகர்வுக்கு படையினர் திட்டமிடுவது போன்றே அவர்களது தாக்குதல்கள் அமைந்துள்ளன.

மடுவின் வடக்குப் புறமுள்ள பாலம்பிட்டியை கைப்பற்றி மடுவிற்கு தெற்கில் இருக்கும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகளை சமர் கள் இன்றி அகற்றுவதன் மூலம் மடுவைகைப் பற்றிவிடலாம் என்பது படையினரின் நுணுக்கமான திட்டமாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.

இதற்காக விளாத்திக்குளம், முள்ளிக்குளம் பகுதிகளில் காட்டுப்புறச்சமருக்கு என பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட 57 (7 பற்றாலியன்கள்) ஆவது படையணியுடன் 53 ஆவது சிறப்புப்படையணியின் சில கொம்பனி துருப்புக்களும், வவுனியாவில் நிலைகொண்டுள்ள 56 ஆவது படையணியின் 4 பற்றலியன் துருப்புக்களும் ஈடுபடுத்தப்பட்டு வந்தன.

ஆனால் விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்தாக்குதல்களினால் இந்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்ததுடன், கடந்த ஜூன் 2 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் படையணிகள் படையினர் மீது மேற்கொண்ட கடுமையான தாக்குதலை தொடர்ந்து இந்த நடவடிக்கை முடக்கமடைந்தது.

எனினும் தற்போது மீண்டும் மடு மீதான தாக்குதல்கள் ஆரம்பமாகியுள்ளதுடன், மடுவிற்கு தெற்குப்புறமாக முருங்கன் பகுதி ஊடாகவும் 21 ஆவது படையணியின் சில பற்றாலியன்களும், சிறப்புப்படை பற்றாலியன்களும் நகர்வதற்கு முயன்று வருகின்றன. கடந்த 24 ஆம் திகதி கட்டுமுறிவுக்குளம் நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையானது மடுவை வடக்கு தெற்காக தாக்குவதன் மூலம் கைப்பற்றும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

அதாவது மடுவுக்கு வடக்காக பெரியமடு ஊடாகவும், தெற்கே கட்டுக்கரைகுளம், அடைக்கலமோட்டை ஊடாகவும் இரு முனை நகர்வுகளின் மூலம் மடுவை சுற்றி ஒரு வியூகம் வகுப்பது படையினரின் தற்போதைய உத்தி. அதற்காக சிறுகச், சிறுகப் படையினர் முயன்று வருகின்றனர்.

இதனைப் போலவே ஜயசிக்குறு காலப்பகுதியில் பாலம்பிட்டிக்கு வடக்காக மூன்று முறிப்பில் இருந்து 53 ஆவது படையணியும், தெற்காக மடுச் சந்தியில் இருந்து 55 ஆவது படையணியும் முன்நகர்ந்து பாலம்பிட்டியை கைப்பற்றியிருந்தன.

படையினரின் இந்த உத்திகளில் இரு நோக்கங்கள் உள்ளன. ஒன்று மடுவைக் கைப்பற்றுவதன் மூலம் தற்போது தேக்கமடைந்துள்ள படைத்துறை வெற்றி சார்ந்த அரசியலில் ஒரு நகர்வை மேற்கொள்வது. இரண்டாவது மன்னார் - பூநகரி சங்குப்பிட்டி பாதையான ஏ-32 வீதியை திறக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட உள்ள படை நடவடிக்கைக்கு தேவையான அடித்தளம் அமைப்பது.

இந்த உத்திகளே படை வட்டாரங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. யாழில் முடங்கிப்போயுள்ள படையினருக்கான ஒரு வழங்கல் பாதையை திறப்பதன் மூலம் வடபோர் முனையை தக்க வைக்க முடியும் என்பது படைத்தரப்பின் நீண்டகால சிந்தனை.

எனினும் வவுனியா - யாழ்ப்பாணம் வீதியான ஏ-9 பதையை நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை 1999 ஆம் ஆண்டு பெரும் தோல்வியில் முடிவடைந்ததுடன், மீண்டும் ஏ-9 பாதையை குறிவைத்து படை நடவடிக்கையை மேற்கொள்வது தற்கொலை முயற்சிக்கு ஒப்பானது என்பது படையினருக்கு தெரிந்த விடயம். அது ஒரு அரசியல் தற்கொலைக்கும் வழிவகுக்கலாம்.

இந்த நிலையில் அதற்கு மாற்றீடாக முல்லைத்தீவு - பரந்தன் (ஏ-35) வீதியும், மன்னார் பூநகரி - சங்குப்பிட்டி பாதையும் ஆராயப்பட்டு வருகின்றன. எனினும் முல்லைத்தீவினு} டான பாதை ஏ-9 பாதையின் அனுபவத்தை கொடுக்கலாம் என்பது படைத்தரப்பின் அச்சம். அதாவது விடுதலைப் புலிகளின் இதயப்பகுதியை ஊடறுத்துச் செல்லும் எந்த பாதைகளும் பாதுகாப்பானவை அல்ல என்பது ஜயசிக்குறு புகட்டிய பாடம்.

எனவே தான் தற்போது ஏ-32 பாதை மீது அரசு கண்வைத்துள்ளது. அதன் மறுபக்கம் கடல் மற்றும் கடற்கரை சார்ந்த பகுதிகள் இருப்பதனால் இந்த பாதை இருபுறமும் தாக்குதலுக்கு உள்ளாகும் ஆபத்துக்கள் அற்றது என்பது அரசின் உத்தி.

மேலும் மறுபுறம் உள்ள கடல் பகுதியை பாதுகாப்பதற்கு இந்தியாவின் உதவியை (கூட்டு கடல் ரோந்து) நாடுவதற்கும் அரசு முயன்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாகவே அண்மையில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்திருந்தது. எனினும் இந்தியா அதனை பின்னர் மறுத்திருந்தது.

இந்தப்பாதையை கைப்பற்றும் நடவடிக்கையின் போது பூநகரி பகுதியை படையினர் கைப்பற்றினால் விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல் அச்சுறுத்தலில் இருந்து வடபோர்முனையின் பெரிய படைத்தளமான பலாலி படைத்தளத்தையும், விமான ஓடுபாதையையும் பாதுகாக்கலாம் என்பதும் இந்தப் பாதை திறப்பிற் கான மற்றுமொரு காரணம்.

தற்போது யாழ். குடாவில் உள்ள படையினருக்கான வழங்கல்களில் பெருமளவானவை கடல்வழி மூலமும், சிறுபகுதி வான் வழி மூலமும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த விநியோகங்களுக்காக பல மில்லியன் ரூபாய்களை தினமும் அரசு செலவிட்டு வருகின்றது. 1995 ஆம் ஆண்டு அதிகரித்த பாதுகாப்பு செலவுகளை, பின்னர் குறைக்க முடியாததற்கு இதுவும் ஒரு காரணம். ஏற்கனவே மன்னார் படை நடவடிக்கைக்கு என இராணுவம் 57 ஆவது படையணியை உருவாக்கியிருந்தது.

எனினும் விடுதலைப் புலிகளுக்கு பரந்த அளவில் நெருக்கடிகளை கொடுக்கும் முகமாக இரு பிரிகேட்டுக்களை கொண்ட 58 ஆவது படையணியும் அண்மையில் உருவாக்கப்பட்டு மணலாற்றில் நிறுத்தப்பட்டுள்ளது. இது முழுமையான படையணியாக இன்னும் மாற்றம்பெறவில்லை. ஏனெனில் இலங்கைப்படைக் கட்டமைப்பில் ஒரு முழுமையான படையணி (னுiஎளைழைn) மூன்று பிரிகேட்டுக்களை கொண்டிருத்தல் வேண்டும்.

மேலும் பொதுவாக ஒரு பிரிகேட் 3 பற்றாலியன்களை கொண்டிருத்தல் வேண்டும். ஆனால் இலங்கை இராணுவத்தின் பெரும்பாலான பிரிகேட்டுக்கள் இரண்டு பற்றலியன்களையே கொண்டுள்ளன. எனினும் 58 ஆவது படையணியை மறுசீரமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

தற்போது மேலும் ஒரு படையணியை உருவாக்க இராணுவம் முயன்று வருகின்றது. உரு வாக்கப்படும் 59 ஆவது படையணி இலங்கை இராணுவத்தின் 12 ஆவது படையணியாகும். அதாவது மூன்றாவது ஈழப்போரில் 9 படையணிகளை கொண்டிருந்த இராணுவம் பிரகடனப்படுத்தப்படாத நாலாவது ஈழப்போர் ஆரம்பித்து இரு வருடங்கள் முடிவதற்கு முன்னர் 12 படையணிகளை கொண்டதாக மாற்றம் பெற்றுள்ளது.

புதிதாக உருவாக்கப்படும் 59 ஆவது படை யணியை இராணுவம் எந்த முனையில் நிறுத்தப்போகின்றது என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளிவராத போதும், அது மன்னார் மீதான படை நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படலாம் என கருதப்படுகின்றது.
ஆனால் படையினரின் இந்த உத்திகள் எவ்வளவு துராம் சாத்தியமாகலாம் என்பது கேள்விக்குறியானது.

ஜயசிக்குறு காலப்பகுதியிலும் மன்னார் பூநகரி - சங்குப்பிட்டிப் பாதை திறப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. ஆனால் மன்னார் பெருநிலப்பரப்பிற்கு வடக்காக படையினரால் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கைகள் எல்லாம் விடுதலைப் புலிகளின் கடும் எதிர்த்தாக்குதல்களை சந்தித்ததுடன், பெரும் இழப்புக்களையும் சந்தித்திருந்தன.

பூநகரியை கைப்பற்றவென உலங்குவானு}ர்திகளின் மூலம் மேற்கொள்ளப்பட்ட தரையிறக்கமும் (சுழல்காற்று நடவடிக்கை) தோல்வி கண்டிருந்தது. தற்போதும் மன்னார் பெருநிலப்பரப்பிற்கு வடக்காக படையினரால் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகள் எல்லாம் கடுமையான எதிர்த்தாக்குதல்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் எங்கு தாக்கப்போகின்றார்கள் என்ற குழப்பத்தில் படைதரப்பு உள்ள போதும், படையினரின் கவனம் மன்னார் களமுனையில் செறிவாகி வருவது கவனிக்கத்தக்கது. எனவே படையினரின் இந்த திட்டங்கள் அரங்கேற்றப்படுமானால், மற்றுமொரு ஜயசிக்குறு விரைவில் ஏற்படப்போவது உறுதி. ஆனால் கிழக்கிலும், மன்னாருக்கு மேற்கிலும் தனது பலத்தை பரவலாகியுள்ள இராணுவம் வன்னிப் போர்முனையில் இடம்பெறவுள்ள மோதலில் கடும் சிரமங்களை எதிர்கொள்ளலாம்.


அருஸ் (வேல்ஸ்)
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..