பிரதான பக்கம் arrow உலகச் செய்திகள் arrow கருணா போர்க்குற்றம் புரிந்தவர் - நியூயோர்க் மனித உரிமை அமைப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கருணா போர்க்குற்றம் புரிந்தவர் - நியூயோர்க் மனித உரிமை அமைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 04 November 2007
hrw-newசிறுவர்களைக் கடத்தி, கட்டாயப் பயிற்சி வழங்கிவரும் கருணா ஒட்டுக்குழுவின் தலைவரான முரளிதரன் விநாயகமூர்த்தி மீது போரியல் குற்றத்தின் கீழ் பிரித்தானியா சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கருணா, ஒட்டுக்குழுவாக இயங்கி சிறுவர்களைக் கடத்திச் சென்று கட்டாய பயிற்சி வழங்குதில் வல்லுனராக திகழ்ந்து வருவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக றொயிற்றர் செய்திச் சேவைக்கு மேலும் கருத்துரைத்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மூத்த சட்ட ஆலோசகர் ஜிம் றோஸ், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சிறுவர் கடத்தல், மனித உரிமை மீறல் போன்றவற்றுக்கு கருணா மீது பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுத்த பின்னரே சிறீலங்காவிற்கு அவரை நாடு கடத்துவது பற்றி சிந்திக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கின்றார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..